ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சாய்னா நேவாலுடன் பேட்மிண்டன் விளையாடும் குடியரசுத்தலைவர் திருமதி திரெளபதி முர்மு
விளையாட்டுகள் மீதான குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்முவின் இயல்பான அன்பு, குடியரசுத்தலைவர் மாளிகையில் உள்ள பேட்மிண்டன் மைதானத்தில் பிரபல வீராங்கனை திருமிகு சாய்னா நேவாலுடன் பேட்மிண்டன் விளையாடியபோது காணப்பட்டது. உலக அரங்கில் பெண் வீராங்கனைகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், பேட்மிண்டனில் இந்தியா ஒரு சக்தியாக உருவெடுத்து வருவதைக் கருத்தில் கொண்டு குடியரசுத்தலைவரின் எழுச்சியூட்டும் செயல்பாடு உள்ளது.
பத்மஸ்ரீ மற்றும் பத்ம பூஷண் விருது பெற்ற இந்திய விளையாட்டு வீராங்கனை சாய்னா நேவால் நாளை குடியரசுத்தலைவர் மாளிகையின் கலாச்சார மையத்தில் பார்வையாளர்களுடன் உரையாற்றுகிறார்.
குறும்பட காணொலியை கீழ்காணும் இணைப்பில் காணலாம்
https://www.instagram.com/reel/C9P28PyMCXq/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==
கருத்துகள்