மனநிலையில் மாற்றம் மற்றும் உள்ளூர் வளங்களை ஆராய்ந்து பயன்படுத்துவது ஆகியவை ஜம்மு காஷ்மீரில் புத்தொழில் நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய முக்கிய அம்சங்களாகும் - மத்திய இணையமைச்சர் திரு ஜிதேந்திர சிங்
மனநிலையில் மாற்றம் மற்றும் பிராந்திய உள்ளூர் வளங்களை ஆராய்ந்து பயன்படுத்துவது ஆகியவை ஜம்மு-காஷ்மீரில் புத்தொழில் நிறுவனங்களுக்கு முக்கியமானதாகும் என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். ஸ்ரீநகரில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் 2 நாட்கள் நடைபெற்ற புத்தொழில் நிறுவனங்கள் தொடர்பான மாநாட்டின் நிறைவு விழாவில் அவர் உரையாற்றினார்.
கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் புத்தொழில் (ஸ்டார்ட் அப்) இயக்கம் பெரிய அளவில் வளர்ந்துள்ளது என்றும், இதற்கான பெருமை பிரதமர் நரேந்திர மோடியையே சாரும் என்றும் திரு ஜிதேந்திர சிங் கூறினார். 2014-ம் ஆண்டில், நாட்டில் 350 முதல் 400 புத்தொழில் நிறுவனங்களே இருந்தன என்றும் தற்போது அது 1.5 லட்சமாக உயர்ந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார். புத்தொழில் நிறுவனங்கள் பிரிவில் இந்தியா உலக அளவில் 3 வது இடத்தில் உள்ளது என்றும் அவர் குறப்பிட்டார்.
ஜம்மு - காஷ்மீர் போன்ற பகுதிகளில் விவசாயத் துறையில் புத்தொழில் நிறுவனங்களின் முக்கிய கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் கூறினார். ஜம்மு காஷ்மீரைப் பொறுத்தவரை மலர்கள் சாகுபடித் துறையில் வேளாண் புத்தொழில் நிறுவனங்களுக்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக அவர் கூறினார். கைவினை, தோட்டக்கலை மற்றும் ஜவுளி போன்ற துறைகளிலும் புத்தொழில் நிறுவனங்களுக்கு ஜம்மு காஷ்மீரில் வளமான வாய்ப்புகள் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
புத்தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவளிப்பதில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் உறுதிப்பாட்டை திரு ஜிதேந்திர சிங் எடுத்துரைத்தார். ஜம்மு-காஷ்மீரில் பல்வேறு துறைகளில் தொழில்முனைவோரை ஊக்குவிப்பதற்கு அரசு மேற்கோள்ளும் முயற்சிகளையும் அமைச்சர் திரு ஜிதேந்திர சிங் விளக்கினார்.
கருத்துகள்