கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியீடு
கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று வெளியிடப்பட்டது. 25 ஆண்டுகளுக்கு முன் கார்கில் போரில் நமது ராணுவ வீரர்களின் ஒப்பற்ற வீரம், உறுதி, தியாகம் ஆகியவற்றுக்கு மரியாதை செலுத்தும் வகையில் தபால் துறை சிறப்பு தபால் தலையை வெளியிட்டுள்ளது.
கார்கிலின் திராஸ் பகுதியில் இந்த தபால் தலை வெளியிடப்பட்டது. இந்த நிகழ்வில் மத்திய தகவல் தொடர்பு துறை அமைச்சர் திரு ஜோதிராதித்ய எம் சிந்தியா பங்கேற்று பேசுகையில், இந்த தபால் தலை நமது ராணுவ வீரர்களின் தீரத்தை கௌரவிப்பது மட்டுமின்றி அவர்களின் வீரத்தை நினைவுபடுத்தவும், தேசத்தின் பெருமித உணர்வை வெளிப்படுத்தவும் பயன்படுகிறது என்றார். நமது வரலாற்றில் முக்கியமான தருணத்தை இந்த அர்த்தமுள்ள தபால் தலை வெளியீடு உருவாக்கி உள்ளது என்றும், இதற்காக தபால் துறையை பாராட்டுவதாகவும் அமைச்சர் கூறினார். இந்த தபால் தலையை அனைத்து குடிமக்களும் வாங்குவதற்கு தாம் ஊக்கப்படுத்துவதாகவும், இது வெறும் சேகரிப்புக்கானதல்ல, நமது நன்றியின் அடையாளம், நமது தேசத்தை பாதுகாத்தவர்களுக்கு அளிக்கப்படும் மரியாதை என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்த தபால்தலையை இணையவழியில் பெறுவதற்கு https://www.epostoffice.gov.in/ என்ற இணையதளத்தை அணுகலாம்.தில்லி சிரி ஃபோர்ட் ஆடிட்டோரியத்தில் 'கார்கில் வெற்றி தின' வெள்ளி விழா குறித்த புகைப்படக் கண்காட்சிக்கு சிபிசி ஏற்பாடு செய்துள்ளது
கார்கில் வெற்றி தினத்தின் வெள்ளி விழாவை முன்னிட்டு,"கார்கில் வெற்றி தின வெள்ளி விழா" என்ற தலைப்பிலான கண்காட்சி புதுதில்லியில் உள்ள சிரி ஃபோர்ட் அரங்கத்தில் இன்று தொடங்கி வைக்கப்பட்டது. தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் மத்திய மக்கள் தொடர்பகத்தால் (சிபிசி) ஏற்பாடு செய்யப்பட்ட இந்தக் கண்காட்சி 2024 ஜூலை 26, முதல் 2024 ஜூலை 31 வரை காலை 10.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை, புது தில்லி, ஆகஸ்ட் கிராந்தி மார்க்கில் உள்ள சிரி ஃபோர்ட் அரங்கத்தில் நடைபெறுகிறது. தொடக்க விழாவில் ஏராளமான பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
கார்கில் போரின் போது அசாத்தியமான துணிச்சலையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்திய தைரியமான வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதை இந்த கண்காட்சி நோக்கமாகக் கொண்டுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க புகைப்படங்கள், காணொலிகள், கலந்துரையாடல்கள், பள்ளிக் குழந்தைகளுக்கான வினாடி வினா போட்டி, பல்வேறு பள்ளிகளில் நடைபெறும் கட்டுரைப் போட்டிகள் ஆகியவை இதில் இடம்பெற்றுள்ளன.
இந்தக் கண்காட்சி தேசபக்தியை வளர்ப்பதுடன், நமது ஆயுதப்படைகளின் பங்களிப்பு குறித்த புரிதலை விளக்கும். இது பள்ளி பாடத்திட்டம் மற்றும் மதிப்புகளுடன் இணைந்த மதிப்புமிக்க கல்வி அனுபவத்தை வழங்குகிறது. இந்த குறிப்பிடத்தக்க வாய்ப்பு பார்வையாளர்களின் அறிவை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், துணிச்சல் மற்றும் வெற்றிக் கதைகளுடன் அவர்களை ஊக்குவிக்கும்.
கருத்துகள்