இந்திய அரசியலமைப்புச் சட்டம் நசுக்கப்பட்டதை நினைவூட்டுவதாக ‘அரசியல் சாசன படுகொலை தினம்’ அமையும்: பிரதமர்
ஜூன் 25-ஆம் தேதியை அரசியல் சாசனப் படுகொலை தினமாக (சம்விதான் ஹத்யா திவாஸ்) அறிவிப்பது குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். இந்திய அரசியலமைப்புச் சட்டம் நசுக்கப்பட்ட காலத்தை நினைவூட்டுவதாக இந்த தினம் அமையும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷாவின் சமூக ஊடக எக்ஸ் தளப் பதிவை மறுபதிவிட்டு அது குறித்து பிரதமர் கூறியிருப்பதாவது:
"ஜூன் 25-ம் தேதியை அரசியல் சாசனப் படுகொலை தினமாக (சம்விதான் ஹத்யா திவாஸ்) அனுசரிப்பது, இந்திய அரசியலமைப்பு சட்டம் நசுக்கப்பட்டபோது என்ன நடந்தது என்பதை நினைவூட்டுவதாக அமையும்.
அவசர நிலை என்ற இந்திய வரலாற்றின் இருண்ட காலகட்டத்தை காங்கிரஸ் ஏற்படுத்திய போது, அதன் அத்துமீறல்களால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நபருக்கும் அஞ்சலி செலுத்தும் நாளாகவும் இது அமையும்.”
கருத்துகள்