ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரணடைந்து கைதான திருவேங்கடம் காவல் துறையினர் நடத்திய என்கவுண்டரில் சுட்டுக்கொலை
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரணடைந்து கைதான திருவேங்கடம் காவல் துறையினர் நடத்திய என்கவுண்டரில் சுட்டுக்கொலை
காவலில் எடுக்கப்பட்டவரை விசாரணைக்காக அழைத்துச் செல்லும் போது தப்பிக்க முயன்றதால் சுட்டுக்கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தகவல்
என்கவுண்டர் நடந்த இடத்தில் சென்னை மாநகர சட்டம் ஒழுங்கு கூடுதல் காவல் ஆணையர் (வடக்கு) நரேந்திரன் நாயர் விசாரணை.
இன்னும் விசாரணையே முடியாத நிலையில், குற்றத்தின் பின் புலமாக செயல்பட்டவர்கள் விவரம் முழுமையானதாக வெளி வராத நிலையில், இந்த என்கவுண்டர் மேலும் சந்தேகத்துக்கு வழி வகுக்குமே தவிர கொல்லப்பட்டதற்கு நீதியாக நியாயம் கிடைத்த ஒன்றாக இருக்கும் எனக் கருத முடியாது!
படுகொலை செய்வது எப்படி பெரிய பாவமோ அல்லது தவறோ அது போல சட்டத்தை மீறிய என்கவுண்டர் படுகொலையும் தவறு தான்
உண்மைக் குற்றவாளிகள் இவர்கள் இல்லை எனச் சொன்னவர்கள் இப்போது பேசவில்லை ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி என காவல்துறை ஒருவரை அடையாளம் காணப்பட்டு என்கௌன்டர் நடந்துள்ளது,
இப்படி ஒரு சம்பவத்தை காவல்துறை திட்டமிடுகிறது என டி.எஸ்.எஸ் மணி கடந்த மூன்று நாட்களாகச் சொல்லிக் கொண்டிருந்தார். இதோ இன்று அதிகாலை மாதவரம் பகுதியில் நடத்திக் காட்டிவிட்டனர்.
ஆருத்ராவோடு சம்பந்தப்பட்டவர் மீது பலரும் குற்றம் சாட்டப்பட்டு வரும் நிலையில் இது நடந்தேறி உள்ளதாகவே பேசப்படுகிறது. பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தில் கூடுதல் சிசிவிடியின் காணொலிக் காட்சிகளை காவல்துறை சார்பில் வெளியிட்டுள்ளனர்..
அதில் ஆம்ஸ்ட்ராங்கை ஆயுதங்கள் கொண்டு தாக்கும் காட்சி மற்றும் அவரைக் கொல்ல நோட்டமிட்ட சிசிடிவி காட்சிகளில் கைதானவர்கள் இடம்பெற்றுள்ளனர்.
ஆம்ஸ்ட்ராங்கை முதல் வெட்டு வெட்டிய திருவேங்கடம் இன்று காலை புழல் அருகே என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
ஆம்ஸ்ட்ராங்கை கொன்ற 7 வது நாள் அதே ஞாயிற்றுக்கிழமையன்று சென்னை மாதவரத்தில் நடந்த என்கவுண்டர்.
கருத்துகள்