நாட்டு மக்களை அரசியல் சாசனம்தான் பாதுகாக்கிறது: மத்திய சட்டத்துறை இணையமைச்சர் திரு அர்ஜுன் ராம் மேக்வால்
இந்தியா ஒரு குடியரசாக மாறி அரசியல் சாசனம் ஏற்கப்பட்டதன் 75-வது ஆண்டை நினைவுகூரும் வகையில், மத்திய சட்டத்துறை உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நமது அரசியல் சாசனம் நமது பெருமை என்ற தலைப்பில் 2-வது மண்டல நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.
2 வது மண்டல நிகழ்வை அலகாபாத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முன்னிலையில் மத்திய சட்டம், நீதித்துறை இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு அர்ஜுன் ராம் மேக்வால் தொடங்கி வைக்கித்தார்.
இந்த நிகழ்ச்சியில் வழக்கறிஞர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள், நீதித்துறை அதிகாரிகள், வழக்கறிஞர்கள், திஷா திட்டத்தின் கீழ் தொலை சட்ட திட்ட கள நிலை செயல்பாட்டாளர்கள், மாவட்ட நிர்வாக அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், சட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட சுமார் 800 பேர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசி, மத்திய சட்டத் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு அர்ஜுன் ராம் மேக்வால், அரசியல் சாசனம் தான் மக்களை பாதுகாக்கிறது என்றார் . அரசியலமைப்பு சட்டம் இயற்றப்பட்டதிலிருந்து அரசியல் சமத்துவம் உத்தரவாதம் அளிக்கப்பட்டிருந்தாலும், பொருளாதார, சமூக ஏற்றத்தாழ்வுகள் நமது சமூகத்திற்கு சவால்களை ஏற்படுத்தியுள்ளன என்று அவர் கூறினார். பின்தங்கிய அனைத்து பிரிவினருக்கும் சமூக நீதி குறித்த டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் தொலைநோக்குப் பார்வையை அடைவதற்கான முன்முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக திரு மேக்வால் கூறினார்.
இந்த நிகழ்ச்சியின்போது, நமது அரசியல் சாசனம் நமது பெருமை இயக்கம் தொடர்பான போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் திரு அர்ஜுன் ராம் மேக்வால் பாராட்டு தெரிவித்து அவர்களை கௌரவித்தார்.
கருத்துகள்