சென்னை மாநகர் புதிய காவல்துறை ஆணையராக அருண் ஐபிஎஸ் நியமனம்.
சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக பணியாற்றிய அருண், சென்னை பெருநகரக் காவல்துறையின் 110 வது ஆணையராகியுள்ளார். சென்னை மாநகரக் காவல்துறை ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பணியிடமாற்றம் செய்யப்பட்டார். சென்னையில் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் குறித்து புகார்கள் அதிகரித்ததால், உடனே இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது .1998 ஆம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் ஆன அருண். சென்னை பல்கலைக்கழகத்தில் பி.இ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பும், உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் காவல்துறை மேலாண்மை பிரிவில் பட்டயப் படிப்பும் படித்துள்ளார். சென்னை மாநகரக் காவல் ஆணையராக பணியாற்றி வந்த சந்தீப் ராய் ரத்தோர் இடமாற்றம் செய்யப்பட்டு,
அவருக்குப் பதிலாக சென்னை மாநகர காவல் ஆணையராக அருண் நியமனம். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் பழிக்கு பழியாக படுகொலை செய்யப்பட்டார் அந்தச் சம்பவம், சென்னை நகரில் சட்டம் ஒழுங்கு பற்றிய விமர்சனங்கள் எழுந்தன அதனால் சந்தீப் ராய் ரத்தோர் மாற்றப்பட்டு அருண் ஐபிஎஸ், சென்னை மாநகரக் காவல்துறை ஆணையராக நியமிக்கப்பட்டார்.
மாநில சட்டம் ஒழுங்கு கூடுதல் போலீஸ் டிஜிபியாக டேவிட்சன் தேவாசிர்வாதம்.
கருத்துகள்