பட்டா மாறுதலுக்கு ரூபாய்.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் கிராம நிர்வாக அலுவலர் சதீஷ்குமாரை
புதுக்கோட்டை மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பட்டா பெயர் மாற்றம் ஆன்லைனில் மாறினாலும் லஞ்சம் வாங்கி கைதாகும் அரசு ஊழியர்கள் எண்ணிக்கை குறைவதில்லை பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் கேட்பதைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளதென கூறுகிறது ஆனால் லஞ்சம் அதிகரித்து வருகிறதே அல்லாமல் குறைந்த பாடில்லை பத்திரம் பதிவு செய்த உடன் தானாகவே பட்டா பெயர் மாற்றம் செய்யும் நடைமுறை தமிழ்நாட்டில் இருக்கிறதாம்.
ஆனால் லஞ்சம் இல்லாமல் எந்த ஊரிலும் மாறவில்லை என்பதே உண்மை. கடந்த காலத்தில் பத்திரப்பதிவு செய்த பலர் பட்டா எனும் வரி செலுத்தும் ஆவணம் வாங்காமல் விட்டுவிட்டார்கள். அப்படி பட்டா மாறுதல் செய்து வாங்காதவர்கள் சொத்தை விற்க வேண்டுமென்றால் பட்டா பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று ஒரு நிலை உள்ளது
அதேநேரம் சில அரசு ஊழியர்கள் பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் கேட்பது தொடர்கிறது. கடந்த சில மாதங்களில் ஏராளமான அரசு ஊழியர்கள் கைதாகி உள்ளனர். ஆனாலும் லஞ்சம் வாங்கிக் கைதாகும் அரசு ஊழியர்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை.. அப்படித்தான் .புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகில் கடவாக்கோட்டை குரூப் கிராம நிா்வாக அலுவலர் சதீஷ்குமாரிடம் பொய்யாதநல்லூர் பகுதி வசிக்கும் ஜமால் முஹமது தனது தங்கை சோபியா பானு வாங்கிய நிலத்திற்குப் பட்டா பெயர் மாற்றம் செய்து தருமாறு ஜமால் முஹமது தங்கை மனு செய்தார் அந்த கோரிக்கையை அண்ணன் ஜமால் முஹம்மது முன் வைத்தார்.
அப்போது அவரிடம் பட்டா மாறுதல் செய்து தருவதற்கு ரூபாய்.3 ஆயிரம் லஞ்சமாகத் தர வேண்டும் என கிராம நிர்வாக அலுவலர் சதீஷ்குமார் டிமாண்ட் செய்தாராம். லஞ்சம் கொடுக்க விரும்பாத ஜமால் முகமது, புதுக்கோட்டை மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகாரளித்ததன்பேரில் அவரிடம் அரசு சாட்சிகள் முன்பு பினாப்தலின் இரசாயனப் பொடி தடவிய மனுதாரர் கொண்டு வந்த ரூபாய் நோட்டுகளை திருப்பிக் கொடுத்து அதை லஞ்சமாகக் கேட்ட கிராம நிர்வாக அலுவலரிடம் கொடுக்க அறிவுறுத்தினார்கள்
அதன் படி மீமிசலில் கிராம நிர்வாக அலுவலர் சதீஷ்குமாரிடம் ஜமால் முகமது ரூபாய்.3 ஆயிரம் லஞ்சப் பணத்தைங் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த புதுக்கோட்டை மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையின் துணைக் கண்காணிப்பாளர் இமயவரம்பன் தலைமையில், ஆய்வாளர் பீட்டர் மற்றும் துறையினர் உடனடியாகச் சென்று லஞ்சம் பெற்ற கையுடன் சதீஷ்குமாரைப் பிடித்துக் கைது செய்தார்கள். அவரிடமிருந்து ரூபாய்.3 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் சோடியம் கார்பனேட்டு கரைசலில் அவரது கையை நனைத்தது கலர் மாற்றம் ஆகவே லஞ்சம் வாங்கியதை உறுதிப்படுத்தியதையடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைக்க நடவடிக்கை எடுத்தனர். பட்டா மாற்றம் செய்து கொடுக்க ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கி கிராம நிர்வாக அலுவலர் கைதான சம்பவம் புதுக்கோட்டையில் அலுவலர்கள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்படுகிறது
கருத்துகள்