பதிவுச் சட்டத்தின் பிரிவு 77-A மற்றும் 77-B அரசியலமைப்புக்கு எதிரானதென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
பதிவுச் சட்டத்தின் பிரிவு 77-A மற்றும் 77-B அரசியலமைப்புக்கு எதிரானதென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
மோசடியாகப் பதியப்பட்ட பத்திர பதிவுகளை இரத்து செய்ய சட்ட ஞானம் இல்லாத மாவட்டப் பதிவாளருக்கு அதிகாரம் வழங்கி தமிழ்நாடு அரசு கொண்டு வந்த சட்ட திருத்தம் கொண்ட அரசு உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. ஆள்மாறாட்டம், மோசடி போலி ஆவணங்கள் மூலம் சொத்தின் உரிமையாளர் மற்றும் மூல ஆவணங்கள் தெரியாமல் முறைகேடாகப் பதியப்படும் பத்திரப் பதிவுகளைஅந்தந்த மாவட்டப் பதிவாளர்களே நேரடியாக ரத்து செய்யும் வகையில் தமிழ்நாடு அரசு கொண்டுவந்த சட்டத் திருத்தம் 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்த நிலையில், தமிழ்நாடு அரசின் இந்த புதிய சட்டத் திருத்தத்தை எதிர்த்து புதுக்கோட்டை வளர்மதி, திருச்செங்கோடு நித்யா பழனிச்சாமி, விழுப்புரம் கார்த்திகேயன் உள்ளிட்ட 200 நபர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
அதில் அவர்கள் தாக்கல் செய்த கூறியது, “தமிழ்நாடு அரசு 2022- ஆம் ஆண்டு பத்திரப் பதிவு சட்டத்தில் புதிதாகக் கொண்டு வந்துள்ள பிரிவு 77- A, 77-B ஆகிய பிரிவுகளின் கீழ் போலியாகப் பதியப்பட்ட பத்திரங்களை மாவட்டப் பதிவாளரே ரத்து செய்யலாம் என்றும், அதுதொடர்பான மேல்முறையீட்டை பத்திர பதிவுத்துறை துறை தலைவர் விசாரிக்கலாம் என்றும் அதிகாரம் வழங்கப்பட்டது
இது தன்னிச்சையானது. பல்வேறு முறைகேடுகளுக்கும் இது வழிவகுத்துள்ளது. இதைப் பயன்படுத்தி பல மோசடி நபர்களுடன் ஊழல் செய்து பாதிக்கப்பட்ட நபர்களைப் பலி வாங்கும் நிலை ஏற்பட்டது ஊழல் செய்து மாவட்டப் பதிவாளர்களில் பலர் லஞ்சம் பெற்ற பின்னர் தவறான உத்தரவு வழங்கிய நிலையில் தவறான உத்தரவு வழங்கும் மாவட்டப் பதிவாளர்கள் மீது தண்டனை இல்லை என்பதால் இதில் பல விசாரணைக்கு பிறகு மேல்முறையீட்டிலும் ஊழல் நடந்துள்ளது எனவே, இந்த சட்டத் திருத்தம் செல்லாது என அறிவித்து ரத்து செய்ய வேண்டும் என்று அதில் தெரிவித்திருந்தனர். மேற்கண்ட வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், என்.செந்தில்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்த போது நீதிபதிகள்,”போலியான பதிவு பத்திரம் குறித்து மாவட்டப் பதிவாளரிடம் புகார் செய்தால் அந்தப் பத்திரம் செல்லாது என அறிவிக்கும் தமிழ்நாடு அரசு அரசாணையை ரத்து செய்து உத்தரவிடுகிறோம்.
தமிழ்நாடு அரசு கொண்டு வந்த 77- A, 77-B ஆகிய சட்டப் பிரிவுகள் செல்லாது. அந்தப் பிரிவுகளை ரத்து செய்கிறோம்,” என உத்தரவிட்டனர். பத்திரப்பதிவுகளை மாவட்ட பதிவாளரே ரத்து செய்யும்வகையில் பத்திரப்பதிவு சட்டத்தில் தமிழக அரசால் கொண்டு வரப்பட்ட சட்டப்பிரிவு 77-A மற்றும் 77-B அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது எனக்கூறி அதை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
போலியாகவும், முறைகேடாகவும் பதியப்படும் பத்திரப் பதிவுகள் குறித்து புகார் செய்தால் அதை விசாரித்து குற்றச்சாட்டுக்கு உரிய ஆதாரமிருந்தால் அவற்றை மாவட்டப் பதிவாளரே ரத்து செய்யும் வகையில் அதிகாரம் வழங்கி தமிழ்நாடு அரசு பத்திரப்பதிவு சட்டத்தில் 77-A என்ற பிரிவையும், மாவட்டப் பதிவாளரின் ரத்து செய்த முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஏதுவாக 77- B என்ற பிரிவையும் சேர்த்து கடந்த 2022-ஆம் ஆண்டு கொண்டு வந்த
சட்டதிருத்தத்தின் அடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான பத்திரப்பதிவுகளை மாவட்டப் பதிவாளர்கள் ரத்து செய்தனர். அதையடுத்து பத்திரப்பதிவை ரத்து செய்ய மாவட்ட பதிவாளர்களுக்கு அதிகாரம் வழங்கும் சட்டப்பிரிவு 77-A ஐ எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் 200 நபர்கள் வழக்குகளைத் தொடர்ந்திருந்தனர்.இந்த வழக்குகள் மீதான விசாரணை நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்றது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் என்.ஜோதி, ஸ்ரீநாத் ஸ்ரீதேவன், ராஜா கலிபுல்லா, ஆர்.ஸ்ரீனிவாஸ் உள்ளிட்டோர் ஆஜராகி வாதிட்டனர்:
தமிழக அரசின் இந்த சட்டப்பிரிவு 77-A சட்டவிரோதமானது. இது நீதிமன்றத்தின் அதிகாரத்தையே பறித்து மாவட்டப் பதிவாளர்களின் கையில் கொடுப்பது போல் உள்ளது. ஒரு பத்திரம் போலியானது, மோசடியானது என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் மாவட்டப் பதிவாளருக்குக் கிடையாது. இரண்டு தரப்பிலும் ஆதாரப்பூர்வமாக விரிவான விசாரணை நடத்தி, அந்தப் பத்திரப்பதிவு செல்லுமா, செல்லாதா என்பதை சட்டப்பூர்வமாக முடிவு செய்ய நீதிமன்றம் உள்ளது.
போலியான பத்திரப் பதிவுகளை மாவட்ட பதிவாளரே ரத்து செய்யும் சட்டப்பிரிவு சட்டவிரோதம்,
தமிழ்நாடு அரசின் இந்தசட்டப்பிரிவு 77-A மற்றும் 77-B சட்டவிரோதமானது. இது நீதிமன்றத்தின் அதிகாரத்தையே பறித்து மாவட்டப் பதிவாளர்களின் கையில் கொடுப்பது போல் உள்ளது. ஒரு பத்திரம் போலியானது, மோசடியானது என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் மாவட்டப் பதிவாளருக்குக் கிடையாது. இரதரப்பிலும் ஆதாரப்பூர்வமாக விரிவான விசாரணை நடத்தி, அந்தப் பத்திரப்பதிவு செல்லுமா, செல்லாதா என்பதை சட்டப்பூர்வமாக முடிவு செய்ய நீதிமன்றம் உள்ளது.
இந்தசட்டப்பிரிவால் மாவட்டப் பதிவாளர்கள் தன்னிச்சையாகச் செயல்படும் சூழல் உள்ளது. அதுமட்டுமின்றி பத்திரப்பதிவுத் துறையில் அதிகப்படியான லஞ்சலாவண்யத்துக்கும் வழிவகுத்துள்ளது. இதனால் நேர்மையான முறையில் பத்திரப்பதிவு மேற்கொள்வோருக்கும் தேவையற்ற இடையூறுகள் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த சட்டப்பிரிவை ரத்து செய்ய வேண்டும்". என வாதிட்டனர்.
அதற்கு தமிழ்நாடு அரசு தரப்பில் கடுமையான ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டு, நீதிமன்றத்தின் சுமையைக் குறைக்கும் விதமாகவே இவ்வாறு சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளதாக வாதிடப்பட்டது.
இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த தீர்ப்பு விவரம்: பத்திரப்பதிவு சட்டத்தில் பத்திரங்களை ரத்து செய்யும் வகையி்ல் மாவட்டப் பதிவாளர்களுக்கு அதிகாரம் வழங்கி கொண்டு வரப்பட்டுள்ள சட்டப்பிரிவு 77-A அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது. எனவே அதை ரத்து செய்கிறோம். அந்த சட்டப்பிரிவின் கீழ் மாவட்டப் பதிவாளர்கள் பிறப்பித்த அணைத்து உத்தரவுகளும் ரத்து செய்யப்படுகின்றன. என நீதிபதிகள் உத்தரவிட்டனர். 200 ரிட் மனுக்கள் மீதான 426 பக்கங்கள் கொண்ட தீர்ப்பை எழுதிய நீதிபதி சுந்தர், ஆவணங்களின் பதிவை ரத்து செய்ய மாவட்டப் பதிவாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் பரிவர்த்தனைகளை செல்லாததாக மாற்றும் என்றாலும், அத்தகைய ரத்து முழுமையானதாக இருக்காது என்று சுட்டிக்காட்டினார். ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து பாதிக்கப்பட்ட நபர் சிவில் நீதிமன்றத்தை அணுகலாம்.
“எனவே, பிரிவு 77-A இன் கீழ் மாவட்டப் பதிவாளர் இயற்றிய உத்தரவுக்கு எந்த இறுதித் தகவலும் இணைக்கப்படவில்லை... அதிகார வரம்பைக் கருதி பரிவர்த்தனைகளை செல்லாததாக்குவதற்கான சட்டப்பிரிவு 77-A ஐ அறிமுகப்படுத்திய சட்டமன்றத்தின் உள்நோக்கத்தின் பின்னணியில் உள்ள எந்தவொரு நேர்மையான நம்பிக்கையையும் அல்லது ஞானத்தையும் நாங்கள் புரிந்து கொள்ளத் தவறுகிறோம். சிவில் நீதிமன்றம், அத்தகைய முடிவுக்கு இறுதித் தன்மையை இணைக்காமல், தலைப்பு தொடர்பான தீவிரமான பிரச்சினைகளை முடிவு செய்ய வேண்டும்” என்று டிவிஷன் பெஞ்ச் குறிப்பிட்டது.
பெஞ்ச் மேலும் கூறியது: "பதிவுச் சட்டத்தின் நோக்கம் அசையா சொத்துக்கள் தொடர்பாக பொதுவாக பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் பராமரிப்பது மட்டுமே. தலைப்பு இல்லாமல் ஒருவரால் செயல்படுத்தப்பட்ட ஆவணம் பதிவு செய்யப்பட்டிருப்பதால், அது உண்மையான உரிமையாளரின் தலைப்பைப் பாதிக்காது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அத்தகைய ஆவணங்கள் பரிவர்த்தனைகளுக்கு சான்றாகக் கருதப்பட்டாலும், பதிவு செய்யப்பட்ட கடத்தல் ஆவணங்களின் அடிப்படையில் மட்டுமே தலைப்பு பற்றிய கேள்வியை முடிவு செய்ய முடியாது. என தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது
கருத்துகள்