முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உயர் நீதிமன்றத்தில் ஆஜரான நடிகர் விஷாலிடம் இரண்டரை மணி நேரம் குறுக்கு விசாரணை

லைகா திரைப்பட நிறுவனம் தொடர்ந்த வழக்கில் இரண்டாவது நாளாக சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜரான நடிகர் விஷாலிடம் இரண்டரை மணி நேரம் குறுக்கு விசாரணை நடைபெற்றது.

லைகாவுடன் செய்து கொண்ட ஒப்பந்தம் பற்றி தனக்கெதுவும் தெரியாது என்றும், தன்னிடம் வெற்றுப் பேப்பரில் கையெழுத்து பெறப்பட்டதாகவும் நடிகர் விஷால் தெரிவித்ததால், அதிருப்தியடைந்த நீதிபதி  நீங்கள் போட்ட கையெழுத்தை எப்படி மறுக்க முடியுமென்றும், மிகவும் புத்திசாலித்தனமாகப் பதில் சொல்வதாக நினைக்கிறீர்களா என்றும் கேள்வி எழுப்பி விசாரணையை வெள்ளிக்கிழமை தள்ளி வைத்தார். விஷால் பிலிம் பேக்டரி படத் தயாரிப்பு நிறுவனத்துக்காக திரைப்பட பைனான்சியரான அன்புச் செழியனிடம் பெற்ற ரூபாய்.21.29 கோடி கடனை லைகா படத் தயாரிப்பு நிறுவனம் ஏற்றுக்கொண்டு செலுத்திய தொகையை திருப்பி செலுத்தும் வரை விஷால் பட நிறுவனம் தயாரிக்கும் அனைத்துப் படங்களின் உரிமைகளையும் தங்களுக்கு வழங்க வேண்டுமென்ற ஒப்பந்தத்தை மீறி, ‘வீரமே வாகை சூடும்’ என்ற படத்தை தன்னிச்சையாக வெளியிடுவதாகக் கூறி விஷாலின் பட நிறுவனத்துக்கெதிராக லைகா சார்பில்  சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு அது நிலுவையிலிருந்து வருகிறது.

இந்த வழக்கின் குறுக்கு விசாரணைக்காக நீதிபதி பி.டி.ஆஷா முன  நடிகர் விஷால் இன்று நேரில் ஆஜரான போது லைகா நிறுவனம் சார்பில் மூத்த வழக்கறிஞர் வி.ராகவாச்சாரி ஆஜராகி லைகா மற்றும் விஷால் இடையே போடப்பட்ட ஒப்பந்தத்தைச் சுட்டிக்காட்டி கேள்விகள் எழுப்பினார். அதற்கு பதிலளித்த நடிகர் விஷால், இந்த ஒப்பந்தம் குறித்து தனக்கெதுவும் தெரியாதென்றும், தன்னிடம் வெற்றுப் பேப்பரில் கையெழுத்து பெறப்பட்டதாகவும் தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த நீதிபதி, நீங்கள் போட்ட கையெழுத்தை எப்படி மறுக்க முடியும்? மிகவும் புத்திசாலித்தனமாக பதில் சொல்வதாக நினைக்கிறீர்களா? என்றார். மேலும் இது ஒன்றும் திரைப்பட ஷூட்டிங் அல்ல. கவனமாகப் பதிலளியுங்கள் என விஷாலுக்கு அறிவுறுத்திய நீதிபதி, ‘சண்டக்கோழி 2’ திரைப்படத்தை வெளியிடும் முன்பாக பணத்தைத் திருப்பித் தந்து விடுவதாக கூறினீர்களா ? எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு விஷால், நீதிபதியை பாஸ் என அழைத்தார் அப்போது குறுக்கிட்ட நீதிபதி, இதுபோல பாஸ் என்று இங்கு சொல்லக்கூடாது. கேட்கப்படும் கேள்விகளுக்கு மட்டும் ஆம், இல்லை என சரியான பதிலை அளிக்க வேண்டும் என கண்டிப்புடன் அறிவுறுத்தினார். அதன் பிறகு லைகாவைத் தவிர வேறு யாரிடமாவது கடன் வாங்கியுள்ளீர்களா என்ற கேள்விக்கு, ஆம் என்றும், லைகாவால் தான் அந்தக் கடனை வாங்க நேரிட்டது என்றும் விஷால் பதிலளித்தார். அதையடுத்து இந்தக் குறுக்கு விசாரணையை  ஆகஸ்ட் மாதம்.2 ஆம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதி, விஷால் ஆஜராக உத்தரவிட்டார்.  இந்த நிலையில் திரைப்பட உலகில் அஞ்சி நடுங்க வைக்கும் ஒரு நபர்  குறித்து பலரும் பேசும் நிலையில் ஒரு கடந்த காலப் பார்வை:-


நடிகரும், தயாரிப்பாளருமா ன மதுரையைச் சேர்ந்த சசிகுமாரின் அத்தை மகனான

அசோக் குமார் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்துக்குப் பின் மீண்டும் பரபரப்பான வில்லன் போல பேசப்படும் அன்புச் செழியன் பெயர். அவரது பெயரில் தான் அன்பு  தவிர, அவரில் செயலில் ஈவு இரக்கமே இருக்காத பஞ்சமா பாதகன்  என்று சொல்கிறார்கள்,

அவரைப் பற்றி நன்கறிந்த தென்னிந்தியத் திரையுலகில் உள்ள தயாரிப்பாளர்கள்.

இதேபோல்  பிரபலமான தயாரிப்பாளர் இயக்குநர் மணிரத்னத்தின் உடன் பிறந்த சகோதரர்.ஜி.வி எனும்                          ஜி. வெங்கடேஷ்வரன் தற்கொலை செய்து கொண்டபோது தான்.  பலரும் இந்தப் பெயரை அறிந்திருப்பார்கள்.

‘தளபதி’, ‘அக்னி நட்சத்திரம்’  நாயகன் உள்ளிட்ட வெற்றிப் படங்களைத் தயாரித்த ஜிவி, அன்புச் செழியனிடம் திரைப்படம் தயாரிக்க வட்டிக்குப் பணம் வாங்கி, வட்டி கட்டி வந்தார். ஆனால், அந்த வட்டிக்கும் வட்டி என அவர் அதிகமாகப் பணம் கேட்க, அவரால் கந்து வட்டி பணம் கொடுக்க இயலாத ஒருகட்டத்தில் அவர் வீட்டுக்குள்ளேயே புகுந்த அன்புச் செழியனின் ஆட்கள், அவர் வேட்டி வரை உருவினார்களாம். அவமானம் தாங்காமல் ஜிவி அமைதியாகிவிட, அவர் மனைவி மன்றாடி அன்றைக்கு பிரச்னையை முடித்து வைத்தார். ஆனாலும், குறிப்பிட்ட நாட்களுக்குள் பணத்தைத் தரவேண்டும் என்று கெடு விதித்த அன்புச் செழியன்.

சொன்ன தேதியில் ஜிவியால் பணத்தைத் திருப்பிக் கொடுக்க முடியவில்லை. அன்புச் செழியன் ஆட்களின் கண்களில் படாமல் தவிர்த்து வந்துள்ளார், ஜிவி. நாலா பக்கமும் தேடித்திரிந்த அன்புச் செழியன் ஆட்கள், கொடைக்கானலில் ஜிவியின் மனைவி தங்கியிருப்பதைக் கண்டுபிடித்தனர். ஜிவியின் மனைவியை அங்கேயே சிறை வைத்த படியே, ஜிவியிடம் கட்டப் பஞ்சாயத்து பேசியிருக்கின்றனர். இன்னும் இரண்டு நாட்களுக்குள் பணம் வரவில்லை என்றால், உங்கள் மனைவியை அங்கே‘உட்கார வைத்து விடுவோம்’ என்று மிரட்டியிருக்கிறார்.

எங்கெங்கோ அலைந்தும் அவரால் பணம் திரட்ட முடியாததால், தற்கொலை செய்து கொண்டார். ஆனால் அந்த மரணத்தின் போது அன்புச் செழியன் மீது வழக்கு ஏதும் பதியப்படவில்லை.

அதன் பின்னர் தான் அன்புச் செழியனின் வில்லத்தனம் கொண்ட செல்வாக்கு அனைவருக்கும் தெரிந்தது. கோலிவுட்டே பணத்திற்காக அவருக்கு சலாம் போட்டது.

இத்தனை செல்வாக்கு அன்புச் செழியனுக்கு எப்படி வந்தது என்பதை பார்க்கலாம் இராமநாதபுரம் மாவட்டம் பொம்மனேந்தல் கிராமத்தில் கிராம தெடக்கப பள்ளி ஆசிரியர் குடும்பத்தில் பிறந்தவர் அன்புச் செழியன். அங்கிருந்து மதுரையில் குடியேறியவர், எம் ஆர் ஏரியா எனப்படும் மதுரை, இராமநாதபுரம்  திரைப்பட விநியோகஸ்தர்களுக்கு சிறிய அளவில் வட்டிக்கு பைனான்ஸ் செய்து வந்த காலம் 1988 ஆம் ஆண்டு முதல் ஆரம்பித்தார். அதோடு, மதுரை கிழக்குத் தொகுதி மற்றும் கீரத்துரை உள்ளிட்ட பகுதியிலும் பெரிய அளவில் பைனான்ஸ் கந்து வட்டி செய்தார். அப்போது, அவர் அதிமுகவில் இணைந்தார்.

அந்த சமயத்தில், முன்னாள் முதல்வர் காலஞ்சென்ற செல்வி ஜெ. ஜெயலலிதா வளர்ப்பு மகனாக பார்க்கப்பட்ட வி என் சுதாகரன் நட்புக் கிடைத்தது.  மூலம் தவறான வழியில் வந்த பணத்தை வாங்கி வட்டிக்குக் கொடுத்து, தனது தொழிலை விரிவுபடுத்தியதன் பின் தான் அவர் சென்னைக்கு வந்து திரைப்படங்களுக்கு வட்டிக்கு மற்றும் கந்து வட்டி பைனான்ஸ் செய்ய ஆரம்பித்தார்.

பணத்தை வாங்கிக் கொண்டு திருப்பித்தர இயலாத காரணத்தால் காலதாமதம் செய்யும் திரைப்படம் தயாரிக்கும் தொழிலதிபர்களிடம் பணம் வசூலிக்கும் விதமே தனியானது. இதற்காகவே தனக்கு கீழே மதுரை பகுதியைச் சேர்ந்த குரங்கு ராமர் உள்ளிட்ட சில அடியாட்களை யும் அப்போது வைத்திருந்தார். அவர்களில் ஒருவர் ஐய்யப்பன். புரோட்டோ மாஸ்டராக இருந்தவர், பின்னாளில் தயாரிப்பாளராகவே மாறினார். பின்னர் காவல் துறையில் குற்றம் செய்த நிலையில் சிக்கி அடி உதை வாங்கியவர் தற்போது உயிரோடு  இல்லை

பணத்தை வாங்கிக் கொண்டு ஏமாற்றும் தொழிலதிபர்களிடம் பணம் வசூலிக்கும் விதமே அலாதியானது. இதற்காகவே தனக்கு கீழே மதுரை பகுதியைச் சேர்ந்த அடியாட்களை வைத்திருந்தார். அவர்களில் மிக முக்கியமானவர் ஐய்யப்பன். புரோட்டோ மாஸ்டராக இருந்த அவர், பின்னாளில் தயாரிப்பாளராக உயர்ந்தார். பின்னர் காவல்துறையில் சிக்கி அடி உதை வாங்கினார். இப்போது அவர் உயிரோடு இல்லை.


பணம் வசூலிக்க வேண்டிய தயாரிப்பாளரைப் பிடித்து சிறை வைக்கும் வேலையை அந்த பரோட்டா ஐய்யப்பனிடம். தான் கொடுப்பாராம் . அவரிடம் சிக்கும் தயாரிப்பாளரைப் பிடித்து நிர்வானமாக பொட்டுத் துணி கூட இல்லாமல் அந்த வீட்டிலேயே உட்கார வைத்து விடுவாராம், பரோட்டா ஐய்யப்பன். அப்படியும் அவரிடமிருந்து பணம் வரவில்லை என்றால், தயாரிப்பாளர் வீட்டுப் பெண்களை உட்கார வைத்து பணத்தை வசூலித்து விடுவாராம்.

திரைப்படத் தயாரிப்பாளர்களைப் பொறுத்தவரையில், பைனான்ஸியருக்கு பணம் கொடுக்க வேண்டிய நிலையில் இருப்பது தெரியவந்தால், நடிகர்களிடம் அடுத்த படத்துக்கு கால்ஷீட் வாங்குவது கடினம். எனவே, வட்டிக்கு கடன் வாங்கியதை வெளியே சொல்லத் தயங்குவார்கள். குடும்பத்தினருக்குப் பிரச்னை என்பதை வெளியே சொல்ல முடியுமா? அதை தங்கள் கௌரவத்துக்கு இழுக்கு என நினைப்பார்கள். அது அவர்களின் பலவீனம் அதுதான் அன்புச் செழியனுக்கு பலம்.


நடிகை ரம்பா, சொந்தப் படம் எடுத்த போது அன்புச் செழியனிடம் பைனான்ஸ் வாங்கியுள்ளார். படத்தில் பெரும் நஷ்டம் ஏற்பட்டது. அவரால் வாங்கிய பணத்துக்கு வட்டி கூடக் கட்ட முடியவில்லை. அவரையும் ஒருநாள் முழுக்க உட்கார வைத்து விட்டதாக திரையுலக வட்டாரத்தில் ஒரு பேச்சு இன்னும் உண்டு. அதன் பின்னர் தான் அவர் சினிமாவில் நடிப்பதை விட்டு விட்டாராம்.

நடிகர் அஜித்திடம் இவர் செய்த கட்டப்பஞ்சாயத்து, இவரை கோலிவுட்டில் பெரிய ஆளாக மாற்ற உதவியதால். பாலாவின் ‘நான் கடவுள்’ படத்துக்கு முதலில் ஒப்பந்தமானது அஜித் தானாம். கதையைக் கேட்டவர், படத்தில் நடிக்க மறுத்திருக்கிறார். அப்போது ஹோட்டல் ஒன்றில் வைத்து கட்டப்பஞ்சாயத்து நடந்துள்ளது. அப்போது நடிகர் அஜித்தை அன்புச் செழியன் அடித்ததாகவே பலரும் அப்போது விவாதித்து உண்டு.

ஜிவி மரணத்துக்குப் பின் திரையுலகம் தனக்குக் கொடுத்த பயம்  அதை  மரியாதையைப் பார்த்தவர் அன்புச் செழியன், பாலிவுட்டை தாவூத் இப்ராஹிம் தன்கைக்குள் வைத்துக் கொண்டது போலவே, கோலிவுட்டை தன் கைக்குள் வைத்துக் கொள்ள  காய்களை நகர்த்தியவர்.

ஒரு பக்கம் கந்து வட்டி பைனான்ஸ் கொடுத்து வந்தாலும், படத் தயாரிப்பிலும் இறங்கினார். நடிகர் தனுஷ், நடிகர் விஷாலை வைத்தும் படம் தயாரித்தார். அதில், அவர் எதிர்பார்த்த அளவில் பணம் கிடைக்கவில்லை. பைனான்ஸில் தான் பணம் கொட்டியது. பின்னர், ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் படம் எடுத்தார். அப்படி அவர் எடுத்த படம் தான் ‘காக்கா முட்டை’ மணிகண்டன் இயக்கத்தில் உருவான ‘ஆண்டவன் கட்டளை’. இந்தப் படத்தை 5 கோடி ரூபாய்க்குள் எடுக்க வேண்டும், லாபத்தில் ஆளுக்குப் பாதி என ஒப்பந்தமும் போட்ட, அன்புச் செழியன். நிரைப்படம்  வெளியாகி அப்போது 14 கோடி வரையில் வசூல் செய்தது. ஆனால், படம் ஓடவில்லை எனச் சொல்லி, இயக்குநரோடு கட்டப் பஞ்சாயத்து செய்து, சின்னத் தொகையைக் கொடுத்து விரட்டியதும் நிகழ்ந்துள்ளது

தர்மயுத்தத்தைத் தொடங்கிய முன்னாள் முதல்வர் ஒருவரின் பெரும் தொகையை, இவர் தான் பைனான்ஸ் கொடுத்து வட்டி வாங்கி வருவதாக திரைப்பட வட்டாரத்தில் பேசப்படுகிறது. திரைப்படத் தயாரிப்பில் நள்ளிரவில் கேட்டால் கூட ஐந்து கோடி ரூபாய் பணத்தை கோணியில் கொண்டுவந்து கொட்டும் வல்லமை அன்புச் செழியனுக்கு உண்டாம்.

‘சுந்தரா டிராவல்ஸ்’ படத்தை எடுத்த தங்கராஜாவுக்கு 20 லட்ச ரூபாய் பணம் கொடுத்து விட்டு, ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை மிரட்டி எழுதி வாங்க முயன்றபோது, அவர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். அப்போது தான் முதன்முதலில் அன்புச் செழியன் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் சில ஊழல் அலுவலர்களையும், சில ஊழல் அரசியல்வாதிகளையும் கைக்குள் வைத்துக் கொண்டு, தனது கந்து வட்டித் தொழிலை சிறப்பாக செய்கிறார். சில காலம் முன்பு அவரது அராஜகம் எல்லை மீறவே .. அசோக் குமார் யாதவ் தற்கொலை செய்து கொண்டார். இப்போது. விஷால் சிக்கியது தான் விசாரணை நடக்கிறது ஆனால் கடந்த காலங்களில்


வருமான வரித் துறை சார்பில் சென்னை மற்றும் மதுரையில் உள்ளிட்ட மொத்தம் 38 இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன. ஏஜிஎஸ் சினிமாஸ், திரைப்பட ஃபைனான்சியர் அன்பு செழியன், தமிழ் திரையுலகின். கந்து வட்டி நபராக கருதப்படுகிறது சோதனையில் கணக்கிடப்படாத சுமார் 77 கோடி ரூபாய் பணத்தை மறைத்து வைத்திருப்பது தெரிய வந்தது. சென்னை மற்றும் மதுரை ஆகிய இடங்களில் அமைந்துள்ள ரகசிய இடங்களிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட இப்பணம் நிதியாளர் அன்புச் செழியனுக்கு சொந்தமானது என்று அப்போது கூறப்பட்டது இப்போது நினைவுக்கு வருகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான விழாவாக தமிழ் சம