சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வட்டம் தாயமங்கலம் அருள்மிகு முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்:
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நேரில் தரிசனம். தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவிலில் வெகு விமர்சையாக நடைபெற்ற கும்பாபிஷேகத்தில் பல்லாயிரக்கணக்கான யிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தாயமங்கலத்தில் உலகப் பிரசித்தி பெற்ற அருள்மிகு முத்துமாரியம்மன் கோவில் திருப்பணிகள் முடிவடைந்து, ஆகஸ்ட் மாதம்.19-ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் யாகசாலைப் பூஜைகள் தொடங்கின. தொடர்ந்து அன்றைய தினம் முதல் யாகசாலை பூஜை நடைபெற்றது.ஆகஸ்ட் மாதம். 20-ஆம் தேதி 2 மற்றும் 3-ஆம் கால யாகசாலை பூஜையும், பூர்ணா குதி நடந்தது ஆகஸ்ட் மாதம் 21 ஆம் தேதி 4 மற்றும் 5-ஆம் கால யாகசலைப் பூஜையும் நடைபெற்றன. 22 ஆம் தேதி காலையில் 6-ஆம் கால யாகசாலைப் பூஜை முடிந்து. கடம் புறப்பாடும் நடைபெற்றது.
தொடர்ந்து காலை 9 மணிக்கு பிள்ளையார்பட்டி பிச்சைக் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியர்கள் யாகசாலை பூஜைகள் முடிந்த கலசங்கள் கொண்டு கோபுரதில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் வெங்கடேசன் மற்றும் கோவில் பணியாளர்களுடன், கிராம மக்களும் செய்திருந்தனர். பின்னர் ஆலயத்தில் அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது,
இதற்கு அடுத்து அடுத்த மாதம் அருள்மிகு ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம் ஆவணி 23 செப்டம்பர் எட்டாம் தேதி நடைபெற உள்ளதால் பக்தர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு அம்மனின் அருள் பிரசாதம் பெற்று செல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம்
கருத்துகள்