முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சுனிதா எட்டு நாள் பணி, எட்டுமாதமானது விண்வெளி வணிகத்தை மொத்தமாகவே ஸ்பேஸ் எக்ஸாகிறதா

எட்டு நாள் பணி, எட்டுமாதமானது      விண்வெளி வணிகத்தை மொத்தமாகவே ஸ்பேஸ் எக்ஸ் கைப்பற்றுகிறதா?


என்ற வினா எழுகிறது : சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் 2025  ஆம் ஆண்டு வரை  பூமிக்குத் திரும்ப முடியாத நிலை 
ஜூன் மாதம் போயிங்கின் புதிய ஸ்டார்லைனரில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பேரி வில்மோர் சோதனைப் பயணமாக சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தின் நிலையத்திற்குச் சென்றனர்.

எட்டு நாள் பயணப் பணியாக இருந்தது தற்போது எட்டு மாத காலப் பணியாக மாறியுள்ளது. விண்கலத்தில் ஏற்பட்ட


தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தற்போது பூமிக்குத் திரும்ப முடியாமல் உள்ளதனைச் சரி செய்ய விஞ்ஞானப் பொறியாளர்கள் முயற்சி செய்து வரும் நிலையிலும், அவர்கள் பூமிக்குத் திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், பிப்ரவரி மாதம் 2025 ஆம் ஆண்டு வரை அவர்கள் பூமிக்குத் திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து, ஸ்பேஸ் எக்ஸின் Dragon capsule-ஐ பயன்படுத்த நாசா விண்வெளி ஆய்வு மையம் யோசித்து வருவதாகக் கூறப்படுகிறது. டிராகனின் அடுத்த பணி சமீபத்தில் ஒத்திவைக்கப்பட்டதால், வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் குறைந்தது பிப்ரவரி மாதம் 2025 ஆம் ஆண்டு வரை ISS-ல் சிக்கியிருப்பார்கள் என்பதும் இதன் பொருள்.


விண்வெளி வீரர்களின் நல்வாழ்வு குறித்து அச்சம் மற்றும் அடுத்த ஆறு மாதங்களுக்கு இந்த விண்வெளி வீரர்களை ஹோஸ்ட் செய்ய ISS எவ்வளவு பொருத்தப்பட்டுள்ளது என்பது உட்பட, பணி தொடர்பான பல கவலைகளை தற்போதய நிலைமை எழுப்புகிறது.


மேலும், ஐ.எஸ்.எஸ்ஸில் மைக்ரோ கிராவிட்டிக்கு நீண்ட நேரம் இருப்பதால், விண்வெளி வீரர்கள் எலும்பு அடர்த்தி குறைப்பு, பார்வை தொடர்பான பிரச்சினைகள் போன்ற பல உடல் நலக் குறைவு தொடர்பான பிரச்சினைகளையும் சந்திக்க நேரிடும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. சுனிதா வில்லியம்ஸ் ஆகஸ்ட் 1998 ஆம் ஆண்டில் ஜான்சன் விண்வெளி மையத்தில் தனது விண்வெளி வீரர் பயிற்சியைத் தொடங்கினார். சுமார் 10 நாட்கள் மட்டும் எனத் திட்டமிடப்பட்ட சுனிதா வில்லியம்ஸின் விண்வெளிப் பயணம், 60 நாட்களைக் கடந்து நீடிக்கிறது.


இந்த மாதம் 18 ஆம் தேதிக்கு முன்னர் சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத் திரும்புவார் என்று தகவல்கள் வெளியான நிலையில், அவரை 2025 ஆம் ஆண்டு ஸ்பேஸ் எக்ஸ் பூமிக்கு அழைத்து வரும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. அப்படி நடந்தால் விண்வெளி வணிகத்தை மொத்தமாக ஸ்பேஸ் எக்ஸ் கைப்பற்றும் பூமியிலிருந்து ஏறத்தாழ 400 கி.மீ தொலைவு உயரத்திலுள்ள சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு அடிக்கடி விண்வெளி வீரர்கள் சென்று ஆய்வு செய்வது வழக்கம். அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா விண்வெளி ஆய்வு மையம் தான் இந்தப் பணிகளை மேற்கொண்டு வந்தது. சமீபத்தில் இந்தப் பணிகளை தனியார் வசம் ஒப்படைக்க நாசா ஆய்வு மையம் முடிவெடுத்தது.




இதற்காக போயிங் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது.போயிங் நிறுவனத்திற்கு விமானத் தயாரிப்பில் முன் அனுபவம் உண்டு, அதன் அடிப்படையில் தான் இந்த நிறுவனத்தை நாசா விண்வெளி ஆய்வு மையம் தேர்ந்தெடுத்தது.

போயிங் நிறுவனம் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அமெரிக்காவின் மற்றொரு விண்வெளி வீரரான புட்ச் வில்மோர், என இருவரையும் சர்வதேச விண்வெளி மையத்திற்கு அழைத்துச் சென்று, மீண்டும் பத்திரமாக பூமிக்கு கொண்டு வரும் பணியை ஏற்றுக்கொண்டது.இதற்காக 'ஸ்டார் லைனர்' எனும் ஸ்பேஸ் ஷிப்பையும் தயாரித்தது. இந்த ஷிப் மூலம் கடந்த ஜூன் மாதம் 5 ஆம் தேதி அமெரிக்காவின் கேப் கனாவெரல் ஏவுதளத்திலிருந்து சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சுனிதா வில்லியம்ஸும், வில்மோரும் அனுப்பி வைக்கப்பட்டனர். இரண்டு நாட்கள் கழித்து, ஜூன் மாதம் 7 ஆம் தேதியன்று ஸ்டார் லைனர் சர்வதேச விண்வெளி மையத்தை அடைந்தது.



ஆனால் இந்தப் பயணத்தை தொடங்குவதற்கு முன்னரே பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டிருந்தன. இரண்டு மூன்று முறை 'ஸ்டார் லைனரின்' பயணம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது. இப்படி இருக்கையில் தற்போது சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து சுனிதா வில்லியம்ஸையும், புட்ச் வில்மோரையும் ஸ்டார் லைனரில் ஏற்பட்ட ஹீலியம் வாயுக் கசிவு காரணமாகவும் மற்றும் உந்து விசைக் கருவியில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திருப்பி அழைத்து வருவது தள்ளிப் போனது, 



ஆனால், ஸ்டார் லைனரின் தொழில்நுட்ப கோளாறுகள் இன்னும் சரி செய்யப்படாததால், இன்று வரை இருவரும் பூமிக்கு திரும்பாமல் சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கியது குறித்து விஞ்ஞானிகளிடையே ஒரு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து பூமிக்குத் திரும்ப 6 மணி நேரங்கள் தேவைப்படும். இந்த 6 மணி நேரப் பயணத்தில் த்ரஸ்டர் ஃபெயிலியர், வால்வு லீக்கேஜ் ஆகியவை இல்லாமலிருக்க வேண்டும்.




, இந்த மாதம் 18 ஆம் தேதி சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் நான்கு வீரர்களை அனுப்ப இருக்கிறது. ஆனால் அதற்கு முன்னர் சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத் திரும்ப வேண்டும். இதற்கான பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், விரைவில் சுனிதா வில்லியம்ஸும், புட்ச் வில்மோரும் பூமிக்குத் திரும்புவார்கள் என்று சொல்லப்பட்டது.ஆனால், சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்ப ஒரு வருட காலம் ஆகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் பூமிக்கு வரவேண்டும் எனில் அதற்கு ஸ்பேஸ் ஷிப் தேவை. இவர்கள் சென்ற ஸ்டார் லைனரில் வர முடியாது. எனவே இந்த மாதம் ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் எனும் ஷிப்பை சர்வதேச விண்வெளி மையத்திற்கு அனுப்புகிறது. இதில் நான்கு பேர் வரை பயணம் செய்ய முடியும். அனால், இருவரை மட்டுமே அனுப்பத் திட்டமிடப்பட்டிருக்கிறது.



அதில் செல்லும் இரண்டு வீரர்கள் 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை விண்வெளி மையத்தில் தங்கி பணியாற்றுவார்கள். பின்னர் டிராகன் ஷிப் பூமிக்கு திரும்பும் போது காலியாக உள்ள இருக்கைகள் வில்மோர் மற்றும் வில்லியம்ஸுக்கு ஒதுக்கப்படும். இப்படியாக இருவரும் அடுத்த ஆண்டு பூமிக்கு வருவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் பயணம் உறுதி செய்யப்பட்டால், போயிங்கின் ஸ்டார் லைனர் ஆளில்லாமல் பூமிக்கு திரும்பி விடும். அப்படிச் செய்தால் போயிங் நிறுவனத்தின் ஸ்பேஸ் வர்த்தகத்தை எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் கைப்பற்றி விடும். ஏற்கெனவே இந்த திட்டத்திற்காக போயிங், $1.6 பில்லியன் தொகையை முதலீடு செய்திருக்கிறது. இவையெல்லாம்  வீனாகி விடுவதோடு, அமெரிக்காவின் விண்வெளித் திட்டத்தின் இன்றியமையாத பங்காளியாக ஸ்பேஸ் எக்ஸ் வளர்ந்து விடும். மனிதர்களை விண்வெளிக்கு அழைத்துச் செல்லும் விண்கலம் 

எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் எக்ஸ் வலைதளத்தில் தகவல் சர்வதேச விண்வெளி நிலையத்தை (ISS) பசுபிக் பெருங் கடலில் இறக்க நாசா விண்வெளி ஆய்வு மையம் முடிவு செய்து தேர்வு செய்துள்ளது கோள்களின் காற்று மண்டலத்துக்கு வெளியேயுள்ள, பிரபஞ்சத்தின் வெறுமையான பகுதி தான் விண்வெளியாகும். இது பூமியின் மேற்பரப்பிலிருந்து கிட்டத்தட்ட 100 கிலோ மீட்டருக்கு மேலே ஆரம்பமாவதாகும். விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவது என்பதை இந்தியா ககன்யான் திட்டத்தின் மூலம்  நம் நாடு மீட்டெடுக்கிறது. விண்வெளிப் பயணத்தில் வீரர்கள் அவர்களின் மனதில் நினைப்பது என்ன என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. விண்வெளி ஆய்வு மனித விண்வெளிக்கலங்கள் மற்றும் இயந்திர விண்வெளிக்கலம் ஆகிய இரண்டினாலும் நடத்தப்படுகிறது. விண்வெளியிலுள்ள பொருட்களை நோக்குதல், விண்வெளியியல் என்று அறியப்பட்டு நம்பக்கூடிய பதிவு செய்யப்பட்ட வரலாற்றையும் முன் கடந்தது இருக்கையில், 20 ஆம் நூற்றாண்டின் வளர்ச்சியான திரவ-எரிவாயு விண்வெளி வாகன இயந்திரப் பொறிகளே பௌதீக விண்வெளி ஆய்வினை நடைமுறையில் உண்மையாக்க அனுமதித்தன. விண்வெளி ஆய்விற்கான முன்னேறி வரும் அறிவியல் ஆராய்ச்சியில் இணையும் பல்வேறு நாடுகள், மனித இனத்தின் எதிர்கால இருப்பை உறுதி செய்வது மற்றும் இராணுவ, தந்திரோபாய சாதகங்களை இதர நாடுகளுக்கு எதிராக உறுதி செய்வது ஆகியவையாகும். விண்வெளி ஆய்வின் மீது பல்வேறான விமர்சனங்கள் சில நேரங்களில் செய்யப்படுகிறது.நிலவின் மனிதர் தாங்கிய ஆய்வு 1968 ஆம் ஆண்டு அப்போலோ 8 விண்வெளிப் பயணத்தில் நிலவினை வெற்றிகரமாகச் சுற்றி வந்தது, முதல் முறையாக மனிதரால் வேற்று கிரகத்தினை சுற்றி வந்ததாகும். 1969 ஆம் ஆண்டில் அப்போலோ 11 பயணம் முதல் முறையாக மனிதர் மற்றொரு கிரஹத்தில் காலடி வைத்ததை அடையாளமிட்டது. இருப்பினும் மனிதர் தாங்கிய நிலவு ஆய்வு நீண்டக் காலம் தொடரவில்லை. அப்போலோ 17 ன் 1972 ஆம் ஆண்டு பயணம் கடைசி முறையாக மனிதர் நிலவிற்கு எந்த வடிவத்திலும் வருகைத் தருவதை அடையாளமிட்டது; மேலும் சமீப எதிர்காலத்தில் எவ்வொரு நேரத்திலும் மனிதர் விண்வெளி ஆய்வு திட்டமிடப்பட்டிருக்கவில்லை. விஞ்ஞானிகளைப் பொறுத்தவரை விண்வெளி ஆய்வு என்பது ஒரு அற்புதமான விளையாட்டு மைதானம். பூமியின் தோற்றம் மற்றும் பிரபஞ்சத்தில் கற்றலின் விவரிக்க முடியாத ஆதாரம். மனித இனத்தின் பரிணாம வளர்ச்சிக்கு ஆர்வம் கணிசமான பங்களிப்பை அளித்துள்ளது. ஒரு பிரகாசமான எதிர்காலத்திற்கான விருப்பத்துடன் கூடிய ஆர்வமும் பண்டைய மூதாதையர்களால் நெருப்பைக் கண்டுபிடித்தது முதல் தற்போதைய விண்வெளி ஆய்வுகள் வரை மனிதர்களை ஆராயவும் மேம்படுத்தவும் தூண்டியது. விண்வெளி அறிவியலுக்கான முதன்மை ஆதாரங்களில் ஒன்று விண்வெளி ஆய்வாகும். புவியீர்ப்பு, காந்த மண்டலம், வளிமண்டலம், திரவ இயக்கவியல் மற்றும் பிற கிரஹங்களின் புவியியல் பரிணாமம் பற்றிய நுண்ணறிவு அனைத்தும் சூரிய குடும்பத்தை ஆய்வு செய்வதன் மூலம் கிடைத்துள்ளன.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான விழாவாக தமிழ் சம