வங்காள தேசத்தில் பதவியேற்புக்காக துபாயிலிருந்து இன்று பிற்பகல் டாக்கா வந்த முகமது யூனுஸை அந்த நாட்டின் இராணுவ தலைமைத் தளபதி வாக்கா்-உஸ்-ஸமான், மாணவர் அமைப்புகளின் ஒருங்கிணைப்பாளர்கள் வரவேற்றனர்,
முன்னதாக, வங்காள தேசத்தின் பல பகுதிகளில் வன்முறைப் போராட்டங்கள் ஓயாத நிலையில் அவற்றைக் கைவிடுமாறு முகமது யூனுஸ் கேட்டுக்கொண்டார். இந்த நிலையில்வங்காள தேசம் இந்திய எல்லைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட கோயம்புத்தூரிலிருந்து செவ்வாய்க்கிழமை புறப்பட்ட இராணுவ வாகனங்கள் கரூா், திருச்சிராப்பள்ளி வழியாக தஞ்சாவூா் சென்றடைந்தது.
வங்காள தேசத்தின் அரசுக்கு எதிராக உள்நாட்டுக் கலவரங்கள் நடைபெற்ற நிலையில் இந்திய எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட நம் நாட்டுத் துணை ராணுவத்தினா் அனுப்பப்படுகிறாா்கள். இதனிடையே அவா்களுக்குத் தேவைப்படும் ரோந்து வாகனங்கள், மருத்துவ உபகரணங்கள், குடிநீா் டேங்கா்கள் மற்றும் ராணுவ வாகனங்கள் சுமாா் 50 வாகனங்கள் செவ்வாய்க்கிழமை கோயம்புத்தூர் சூலூா் விமானப்படைத் தளத்திலிருந்து புறப்பட்டு கரூா், குளித்தலை, திருச்சிராப்பள்ளி வழியாக தஞ்சாவூருக்குச் சென்று அங்குள்ள இராணுவத் தளத்திலிருந்து சரக்கு விமானங்கள் மூலம் கொல்கத்தா சென்று அங்கிருந்து இந்திய-வங்கதேச எல்லை முழுவதும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளதாக திருச்சிராப்பள்ளியைச் சோ்ந்த இராணுவ அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் அவரது சகோதரி ஷேக் ரெஹானா ஆகியோரைக் கைது செய்து வங்கதேசத்திற்குத் திருப்பி அனுப்புமாறு வங்காள தேசத்திலிருந்து இந்தியாவிற்கு தகவல் வந்துள்ளதாகவும், வங்காள தேசத்தில் நான்கு முறை பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நீண்ட கால அந்த நாட்டின் தலைவர் ஷேக் ஹசீனா தற்போது இராஜினாமா செய்து. நாட்டை விட்டும் வெளியேறியுள்ளார்.
ஒரு மாத காலமாக நீடிக்கும் வன்முறை மற்றும் மாணவர் போராட்டத்தைத் தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறினார். வங்காள தேசத்தில் இராணுவம் இடைக்கால அரசாங்கம் அமைப்பதாக அறிவித்துள்ளது. ஹசீனாவின் வீழ்ச்சியானது..
அந்த நாட்டிற்கு சிக்கல் என்பதை விட. இந்தியாவிற்கு பெரிய சிக்கல் ஆகுமோ என பலரும் கவலை கொண்ட நிலையில் இந்தியாவின் நட்பு நாடுகளின் பட்டியலிலிருந்து மேலும் ஒரு நாடு வெளியேறும் அவலம் ஏற்பட்டுள்ளது. இப்படிப்பட்ட நிலையில் தான்
முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் அவரது சகோதரி ஷேக் ரெஹானா ஆகியோரைக் கைது செய்து வங்கதேசத்திற்குத் திருப்பி அனுப்புமாறு வங்கதேசத்தில் இருந்து இந்தியாவிற்கு தகவல் வந்துள்ளதாக அது தொடர்பாக உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் (SCBA) தலைவர் AM Mahbub Uddin Khokon, இந்தியாவுக்கு அழைப்பு விடுத்துள்ளார். செய்தியாளர் கூட்டத்தில் பேசிய கோகோன், வங்காள தேசத்தில் நடந்ததாகக் கூறப்படும் மரணங்களுக்கு ஹசீனா பொறுப்பேற்க வேண்டும். இந்தியாவுடன் நேர்மறையான உறவைப் பேணுவது முக்கியம்.
இந்தியா - வங்கதேச உறவு முக்கியம். இந்த உறவு உடையாமல் இருக்க ஹசீனாவை இந்தியாவில் இருந்து உடனே வங்காள தேசத்திற்கு அனுப்ப வேண்டும். ஷேக் ஹசீனா பங்களாதேஷில் பலரைக் கொன்றுள்ளார். இதற்கெல்லாம் அவர் பொறுப்பேற்க வேண்டும். அவரை இந்தியா திரும்பி அனுப்பவில்லை என்றால் நம் உறவு கெடும் வாய்ப்புகள் உள்ளன.
பங்களாதேஷ் தேசியவாதக் கட்சியின் (BNP) இணைச் செயலாளராகவும் பணியாற்றும் கோகோன் அந்நாட்டின் வலிமையான தலைவர்களில் ஒருவர். அப்படி இருக்க அவரே இந்தியாவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வங்காள தேசம் இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடு. சீனா அருகிலேயே இருந்தாலும், அமெரிக்கா பல கோடிகளை முதலீடு செய்யத் தயாராக இருந்தாலும் கூட அவர்களை அரசியலை வங்காள தேசம் உள்ளே விட்டது இல்லை. காரணம் ஹசீனா இந்தியாவுடன் வைத்திருக்கும் நெருக்கம். இந்தியாவின் ஆட்சியாளர்களுடன் அவர் தொடர்ந்து கடைபிடிக்கும் நெருக்கம் இந்தியாவிற்கு உறுதுணையாக இருந்தது. ஏனென்றால் பாகிஸ்தான் இந்தியாவின் நட்பு நாடு இல்லை. அதேபோல் ஆப்கானிஸ்தான் இந்தியாவின் நட்பு நாடு இல்லை. அதோடு இலங்கை சீனாவிற்கு நெருக்கமாகிவிட்டது. நேபாளம் இந்தியாவை எதிரியாகவே பார்க்கிறது. பூட்டான் அவ்வப்போது இந்தியாவிற்கு எதிரான கருத்துக்களை, நிலைப்பாடுகளை எடுத்து வருகிறது.
இப்படி இருக்க வங்கள தேசத்தின் நட்பு இந்தியாவிற்கு தேவையாக இருந்தது. இதன் காரணமாகவே வங்காள தேசத்தில் இந்தியாவின் பராம்பரிய ஜவுளித் துறை கூட வளர்ச்சி அடைய இந்தியா இடம் கொடுத்தது. இரண்டு நாட்டு உறவு வலிமை அடைய.. இரண்டு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் காரணமாகவும் இருந்தது.
ஆனால் தற்போது இரண்டு நாட்டு உறவு உடையும் நிலை ஏற்பட்டு உள்ளது. ஷேக் ஹசீனா வெளியேற்றம் காரணமாக இந்தியா வங்காள தேசம் உறவு இனி நீடிக்கும் வாய்ப்புகள் குறைவு. ஏனென்றால் இப்போது வங்காள தேச அரசு உடைய காரணம் அமெரிக்கா செய்த வேலை அல்லது சீனா செய்த வேலை என்று கூறப்படுகிறது. இரண்டில் ஒரு நாடு பாகிஸ்தான் மூலமாக வங்காள தேச ஆட்சியை கவிழ்த்துள்ளது. இதை இந்தியா கணிக்கத் தவறிவிட்டதா என்பது பலரது விவாதம். இல்லையென்றால் இந்தியா இந்த விவகாரத்தில் துரிதமாக செயல்பட தவறிவிட்டது என்று புகார்கள் முன் வைக்கப்படுகின்றன.
கருத்துகள்