முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஓட்டுக்காக முருகனை கையில் எடுத்துள்ளார்கள்'- பாஜகவின் விமர்சனம்

'ஓட்டுக்காக முருகனை கையில் எடுத்துள்ளார்கள்'- பாஜகவின் முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம் செய்துள்ளார்- 


'பக்தர்கள் விரும்பும் ஆட்சியாக திமுக ஆட்சி உள்ளது'-முருகன் மாநாட்டை துவக்கி வைத்து முதல்வர் பேச்சு 





திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இரண்டு நாட்கள் அனைத்து உலக முத்தமிழ் முருகன் மாநாட்டிற்கு மாநில அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக பல்வேறு முன்னேற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில், தற்போது இன்று காணொளிக் காட்சி வாயிலாக மாநாட்டைத் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.






இரண்டு நாட்களில் மாநாடு நிறைவடைந்தாலும் ஒரு வாரம் வரை மாநாட்டிற்காக அமைக்கப்பட்ட அரங்கம் மற்றும் பொருட்காட்சி அரங்கம் போல கண்காட்சி ஆகியவை பொதுமக்களுக்காக திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில்

கோயம்புத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக  முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், ''முத்தமிழ் முருகன் மாநாடு என்பது ஓட்டுக்கான ஒரு உத்தி இது. ஓட்டுக்காக எதையும் இவர்கள் செய்வார்கள். 





ஆன்மீகத்தைக் கையில் எடுக்கவில்லை என்றால் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் கேள்விக்குறியாகிவிடும் என்பதால் தான் தற்பொழுது திமுக முருகனைக் கையில் எடுத்துள்ளது. அண்ணாவின் தமிழை பின்பற்றிய இவர்கள் தற்பொழுது ஆண்டாளின் தமிழையும் பின்பற்றுகிறார்கள்.



ஜனாதனத்தை எதிர்ப்பவர்கள் கூட ஆன்மீகத்தைப் பேசாமல் அரசியல் செய்ய முடியாது. ஓட்டுக்காக இல்லாமல் நாட்டுக்காக இருக்கும் முருக பக்தர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்'' எனத் தெரிவித்தார். அரசியல் மாநாடு கேள்விப்பட்ட அனுபவம் நமக்கு உண்டு அது என்ன கடவுள் பெயரால் மாநாடு, கடவுள் பெயரால் திருவிழா, அன்னதானம், காவடி எடுத்தல் சரி அல்லது மடாதிபதிகள் மற்றும் சன்யாசிகள் முருக பக்தர்கள் மாநாடு என்பதே சரியான நேர்வாகவோ அல்லது தேர்வாகவோ அமையும்,




அங்கு வந்தவர்களுக்கு விருந்து உபசரிப்பு உண்டு அதில் சாதம் 

ஒய்ட் (வெள்ளை) குருமா! வாழ்க தமிழ்.

ஆனியன் ரைத்தாவா? பிந்தீ பீனட் ஃப்ரையாவா? நம்ம ஊரு 

மாரியாத்தா கோவிலில் கூழ் ஊத்துவார்கள்.






பாண்டிக்கோவில், காளி, கருப்பர் கோவிலில் மற்றும் சில (குல தெய்வம்) கோயிலில் கிடா வெட்டு கறிக் குழம்பு உண்டு 



இங்கு முருகன் கோயிலில் வெண் பொங்கல் அல்லது தேனும் தினை மாவும் சரி  இதான் முறை. ஆனால் இங்கு அயல் நாட்டு உணவு 


அரசு வரிப் பணமும் கோயிலில் ஏழைகள் போட்ட உண்டியல் பணமும் வீனாகப் போகிறது. என உண்மை உணர்ந்த ஆண்டு தோறும் கால்நடையாக செல்லும் முருக பக்தர்கள் நடந்து செல்லும் பாதையில் கரடு முரடான நிலையில் இது குறித்து பல விமர்சகர்கள் அரசு மீது மக்களிடையே வருகிறது,  பழநியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு ஆகஸ்ட் மாதம் 24, 25 தேதிகளில் நடத்துவது தொடர்பாக கடந்த ஏழு மாதமாக தமிழ்நாடு அரசு நிர்வாகம் முழு மூச்சுடன் வேலை செய்கிறது. பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த உயர்நிலை ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து. 20 நபர்கள் குழுவும் அமைக்கப்பட்டது.



குழுவின் தலைவராக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு,, உறுப்பினர்களாக அறநிலையத் துறை உயர் அதிகாரிகளுடன் திருவண்ணாமலை ஆதீன கர்த்தார், குன்றக்குடி ஐந்து கோவில் தேவஸ்தான ஆதீன கர்த்தார், பேரூர் ஆதீன கர்த்தார், சிரவை ஆதீன கர்த்தார்,  மயிலம் பொம்மர ஆதீன கர்த்தார் , சிவஞான பாலய சுவாமிகள், ஆன்மீகச் சொற்பொழிவாளர்கள் மு.வெ.சத்தியவேல் முருகனார், சுகி.சிவம், தேச.மங்கையர்க்கரசி, ந.ராமசுப்பிரமணியன் இடம் பெற்றனர். முத்தமிழ் முருகன் மாநாட்டில் அறுபடை வீடுகள் மற்றும் புகழ் பெற்ற முருகன் திருக் கோயில்களின் கண்காட்சி அரங்குகள் எல்லாம்  திரைப்படக் கலை இயக்குனர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

வேல் கோட்டம் என்பதாக மாநாடு அமைக்கப்படுவதோடு, சமயப் பெரியோர்களின் உரைகள், ஆன்மிக ச் சொற்பொழிவுகள், பக்தி இசை, பட்டிமன்றம், கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படவுள்ளன. இம்மாநாட்டில் உலகெங்கும் உள்ள முருகன் ஆலயம் தொடர்புடைய வெளிநாடுகள் மற்றும் இந்தியாவின் பிற மாநிலங்களிலிருந்து 2,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பாளர்களாகக் கலந்துக் கொள்வதற்கான ஏற்பாடுகளையும், அதற்கான செலவுகளையும் செய்கிறது. பல லட்சம் பக்தர்கள் இந்த மாநாட்டிற்கு வரக் கூடும் எனத் திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறது இப்படி மக்களை பக்தி மயமாக மாநாடு மூலம் ஆட்சியின் ஊழல் முறைகேடுகள், இயற்கை வளச் சுரண்டல்கள், மக்கள் குறைகளைக் கண்டும் காணாமல் இருந்து வரும்  பாசாங்குதனம் ஆகியவற்றை அறிந்து கொள்ளாமல் திசை திருப்பி, தங்கள் நிர்வாக ஊழல் ஆட்சியைத் தொடரலாம் என நினைப்பது சாணக்கியர் காலத்திலிருந்தே  ஆட்சியாளர்கள் செய்யும் சூழ்ச்சி முருகன் பெருமைகளைச் சொல்லிப் ஓதுவார்கள் மற்றும் பண்டார சன்னிதிகள் உண்டு புகழ்பாட  ஏகப்பட்ட ஆதீனங்கள், மடாதிபதிகள், அமைப்புகள், ஆன்மீகவாதிகள், சொற்பொழிவாளர்கள் உள்ளனர். பாரதிய ஜனதா கட்சிக்குப் போட்டியிட்டு அரசியல் செய்வதற்காக திமுக அரசு மக்கள் மற்றும்  பக்தியாளர்களை ஈர்க்கும் முன்னெடுப்பை அந்தக் கட்சியின் முன்னோடிகள் பலருமே கூட இது வாக்கு வங்கியாக மாறுமா இல்லை பாதகம் வருமா என்பதை அறியவில்லை அல்லது விருமபவில்லை என்ற நிலையில்,அன்பால் உயிர்கள் ஒன்றாகும்; அறத்தால் உலகம் நன்றாகும். இந்த பக்தி நெறி, தமிழ் நெறிதான் நாளும் தழைப்பதற்கு முத்தமிழ் முருகன் மாநாடு எல்லா வகையிலும் வழிகாட்டும்.



- தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் அவர்கள் ஆலய வழிபாடுகளில் தமிழ் மொழி முதன்மை பெற வேண்டும். கருவறைக்குள் மனிதர்களுக்கு இடையே பாகுபாடு காட்டாத சமத்துவம் நிலவ வேண்டும்! - பழநி அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை தொடங்கி வைத்து, மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் உரை.  "கடவுள் இல்லை என்று இவர்களாகத்தான் கூறிக் கொண்டிருக்கிறார்கள் சர்ச்சையாக பேசிவிட்டு இப்போது முத்தமிழ் முருகன் மாநாடு நடத்திக் கொண்டிருக்கிறார்கள்" தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்  கருத்து .                               "உருவாய் அருவாய், உளதாய் இலதாய் மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க் கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க். குருவாய் வருவாய், அருள்வாய் குகனே".           "சம்பந்தன் தன்னைப் பாடினான்; அப்பன் என்னைப் பாடினான்; சுந்தரன் பொன்னைப் பாடினான்". இது ஆதி சிவன் வாக்கு.    "சுக்குக்கு மிஞ்சிய மருந்தில்லை, சுப்பிரமண்யரை மிஞ்சிய தெய்வமில்லை " எனப் பழமொழி உண்டு.                                      "சினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்குஞ். செகுத்தவர் ருயிர்க்குஞ் .   சினமாகச் சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும்.   திருப்புகழ் நெருப்பென்றறிவோம்யாம்".                                                                  "முத்தைத்தரு பத்தித் திருநகை அத்திக்கிறை சத்திச் சரவண முத்திக்கொரு வித்துக் குருபர ...... எனவோதும்

முக்கட்பர மற்குச் சுருதியின் முற்பட்டது கற்பித் திருவரும் முப்பத்துமு வர்க்கத் தமரரும் ..  அடிபேணப்

பத்துத்தலை தத்தக் கணைதொடு ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு பட்டப்பகல் வட்டத் திகிரியில். இரவாகப்

பத்தற்கிர தத்தைக் கடவிய பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள் பக்ஷத்தொடு ரக்ஷித் தருள்வதும் ..  ஒருநாளே

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...