தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் செவிலியர் கண்காணிப்பாளராகப் பணியாற்றும் ஷீலா. சமீபத்தில் நடந்த சுதந்திர தின விழாக் கொண்டாட்டத்தின் போது அவரது சேவைகளைப் பாராட்டி
மாவட்ட ஆட்சித் தலைவரிடம் பாராட்டுச் சான்றிதழைப் பெற்றிருந்த நிலையில் செவிலியர் ஷீலா மருத்துவமனையில் சிகிச்சைக்காக வரும் பொதுமக்களிடம் மருத்துவமனை வளாகத்திற்குள்ளேயே இலஞ்சம் வாங்குவதாக வெளியான காணொளிக் காட்சிகள் அண்மையில் சமூக வலைத்தளங்களில் வெளியாகியது. இந்தச் சம்பவம் புகைச்சலை ஏற்படுத்த, இது குறித்து சம்பந்தப்பட்ட செவிலியர் ஷீலாவிற்கு மெமோ கொடுத்துள்ளதாக பட்டுக்கோட்டை மருத்துவமனையின் தலைமை மருத்துவர் மீனா தெரிவித்துள்ளார்.
அவர் தற்பொழுது விடுப்பில் சென்றுள்ளதால் இது குறித்து விளக்கமளிக்க வேண்டுமென மெமோ கொடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது. இருப்பினும் மாவட்ட ஆட்சியரிடம் பாராட்டு பெற்ற செவிலியர் லஞ்சம் வாங்குவது தொடர்பான காணொளிக் காட்சிகள் வைரலாகியது. தன்னுடைய சேவைக்காக மாவட்ட ஆட்சியரிடம் பாராட்டு வாங்கிய செவிலியர் இடமிருந்து மீண்டும் சான்றிதழ் பரிமுதலாகுமா என்பது விரைவில் தெரியவரும்.
கருத்துகள்