சென்னை செம்பியம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறப்புக் காவல் உதவி ஆய்வாளராகப் பணியாற்றிய ஜெயசித்ரா(வயது 49) மாரடைப்பால் உயிரிழந்தார்.
அயனாபுரத்திலுள்ள வீட்டில் அவரது சகோதரியிடம் பேசிக் கொண்டிருந்த நிலையில் திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு வாந்தியுடன் மயக்கமாகி உள்ளார். மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற நிலையில் வழியிலேயே அவர் உயிர் பிரிந்ததாகத் தெரிகிறது.
காவல்துறைப் பணியாளர் ஜெயசித்ராவின் சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம் வம்பரம்பட்டி வழுதியின் வம்சாவளியாவார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்