டெல்லி மதுபானக் கொள்கை தொடர்புடைய வழக்கில் பிஆர்எஸ் தலைவர் கே.கவிதாவுக்கு உச்ச நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியது.
இந்த வழக்கின் விசாரணையின் தன்மை குறித்து மத்தியப் புலனாய்வு அமைப்பு (CBI) மற்றும் அமலாக்கத்துறை இயக்குநரகம் (ED) ஆகியவற்றை நீதிமன்றம் செய்த விசாரணைக்கு பின்னர்
டெல்லி கலால் கொள்கை ஊழலில் கவிதாவுக்குத் தொடர்புள்ளது என்பதை நிரூபிக்க ED மற்றும் CBI யிடம் என்ன ஆதாரம் மற்றும் ஆவணங்கள் உள்ளது என்பதைக் காட்டுமாறு அது கேட்டது. முறையே சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரித்து வரும் ஊழல் மற்றும் பணமோசடி வழக்குகளில் ஜாமீன் கோரிய கவிதாவின் மனுக்களை நீதிபதிகள் பி.ஆர்.கவை மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
மார்ச் மாதம் 15 ஆம் தேதியன்று ஹைதராபாத்தில் பஞ்சாரா ஹில்ஸ் இல்லத்தில் கவிதா அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதியன்று திகார் சிறையிலிருந்து சிபிஐ அவரைக் கைது செய்தது. இவர் தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவின் மகளாவார்.
கவிதாவின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோகத்கி, அவருக்கெதிரான விசாரணையை ஏற்கனவே இரண்டு ஏஜென்சிகளும் முடித்து விட்டதாக உச்ச நீதிமன்றத்தில் இன்று தெரிவித்தார். இதே வழக்கில் ஆம் ஆத்மி கட்சி (AAP) தலைவர் மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்கிய உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மூத்த வழக்கறிஞர் குறிப்பிட்டதாக கூறப்படுகிறது விசாரணை முகமைகள் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜு, கவிதா தனது மொபைல் போனை அழித்து மாற்றி வடிவமைத்ததாகவும், அவரது நடத்தை ஆதாரங்களை சேதப்படுத்துவதாகவும் கூறியதாக முக்கிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது .இந்த குற்றச்சாட்டை "போலி" என்று முகில் ரோகத்கி தெரிவித்தார். "அவள் குற்றத்தில் ஈடுபட்டதைக் காட்ட என்ன ஆதாரம்" என நீதிபதிகள் அமர்வு ராஜுவிடம் கேட்டது.
இந்த மாதத் துவக்கத்தில், ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், முன்னாள் டெல்லி துணை முதல்வருமான மணீஷ் சிசோடியா, டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை அடுத்து, திகார் சிறையிலிருந்து வெளி வந்தார். இந்த வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்கிய உச்ச நீதிமன்றம், சிசோடியா சுமார் 17 மாதங்களாக சிறையில் உள்ளதால், விசாரணை இன்னும் தொடங்கப்படாததால், விரைவான நீதிக்கான அவரது உரிமை பறிக்கப்பட்டுள்ளதென்று கூறியது.கலால் வரி விதிமீறல் வழக்கில் பிஆர்எஸ் தலைவர் கவிதாவுக்கு உச்ச நீதிமன்றம் வழங்கிய நிபந்தனை ஜாமீன் டெல்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்த உச்சநீதிமன்றம், கவிதா ஐந்து மாதங்களாக சிறையில் இருந்ததாக உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. 493 சாட்சிகள் மற்றும் பல ஆவணங்கள் இருப்பதால் விசாரணை முடிவடைய காலம் அதிகமாகும் என உச்சநீதிமன்றம் குறிப்பிடுகிறது.
ஜாமீன் வழங்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்ட சக குற்றவாளிகளின் அறிக்கைகளை நம்பியிருப்பதாக உச்ச நீதிமன்றம் குறிப்பிடுகிறது. மேலும் அவரது பாஸ்போர்ட்டை ஒப்படைக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவு; CBI மற்றும் ED ஆகிய இரு வழக்குகளிலும் அவரை உடனடியாக ஜாமீனில் விடுவிக்க உத்தரவிட்டது டெல்லி கலால் கொள்கை ஊழலுடன் தொடர்புடைய ஊழல் மற்றும் பணமோசடி வழக்குகளில் ஜாமீன் கோரி பிஆர்எஸ் தலைவர் கே.கவிதா தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த போது டெல்லியில் பிஆர்எஸ் செயல் தலைவர் கே.டி.ராமராவ் மற்றும் அக்கட்சியின் பிற தலைவர்கள் உச்சநீதிமன்றம் வந்திருந்தனர்.
கருத்துகள்