மேற்கு வங்காளம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்
மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட நிகழ்வில் தொடர்பாக
உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணை நடத்த உள்ளது, உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட் தலைமையிலான அமர்வு ஆகஸ்ட் மாதம் 20, ஆம் தேதி செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வருகிறது. இந்தியத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை செவ்வாய்கிழமை விசாரிக்கிறது.
ஆகஸ்ட் மாதம் 9 ஆம் தேதி கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள ஒரு கருத்தரங்கு மண்டபத்தில் முதுகலை பயிற்சி மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
இந்தச் சம்பவம் நடந்த மறுநாள் கொல்கத்தா நகரில் காவல்துறை இந்த வழக்கு தொடர்பாக குடிமைத் தன்னார்வலரைக் கைது செய்தது. இந்த சம்பவம் நாடு முழுவதும் எதிர்ப்புகளை கிளப்பியுள்ளது,
இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க நாடு முழுவதும் உள்ள மருத்துவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில் உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணை நடத்த உள்ளது
கருத்துகள்