ஒரு காலத்தில் சூரியன் அஸ்தமிக்காத காலனி ஆதிக்கத்தை நடத்திய நாடான இங்கிலாந்தில் புரட்சி,
வங்காள தேசத்தில் புரட்சி
இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல் என்று அமெரிக்கா முடிவு (என்கிறார்கள்)
உக்ரைன் போர். என்ன நடக்கும் இந்தியாவில்?
இது ஒரு அலசல் கட்டுரை மட்டுமே:- வங்காள தேசத்தில் மாணவர்களின் போராட்டத்தால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்த நிலையில் பாதுகாப்புத் தொடர்பான மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அவரது இல்லத்தில் நடந்தததில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத்சிங், நிர்மலா சீத்தாராமன், ஜெய்சங்கர் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டதில் வங்காள தேச நாட்டின் நிலவரம், ஷேக் ஹசீனா இந்தியா வந்துள்ளது குறித்து ஆலோசனை நடந்தது.
வங்காள தேச விவகாரம் குறித்து விளக்கமளிக்க நாடாளுமன்ற அனைத்துக்கட்சிக் கூட்டத்தை இன்று காலை 10 மணிக்குக் கூட்டியது மத்திய அரசு, இந்தியாவில் தஞ்சம் புகுந்திருக்கும் ஷேக் ஹசீனா இங்கிலாந்து செல்லத் திட்டமிட்ட தகவலும் வெளியாகியுள்ளது. ஷேக் ஹசினாவின் உடல் பிறந்த தங்கை ஷேக் ரேஹானா இங்கிலாந்து நாட்டின் குடியுரிமை பெற்றவர். அவருடன் ஷேக் ஹசீனா லண்டலில் தங்க முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. இங்கிலாந்து அரசு அதற்கு மறுத்தால் பெலாரஸ் நாட்டிற்குச் செல்வதற்குத் திட்டமுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஷேக் ஹசீனா இந்தியா வந்திருப்பது, அண்டை நாடான ன வங்காள தேசத்தில் ராணுவ ஆட்சி அமைந்திருப்பது, அங்கு வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்திருப்பது தொடர்பாக புது டெல்லியில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.ஏஎன்ஐ தகவல் அறிக்கையின்படி, வங்காள தேசத்திலிருந்து வந்த விமானம் மேற்கு வங்காளத்திலுள்ள ஹஷிமாரா விமானப்படைத் தளத்திலிருந்து இரண்டு ரஃபேல் போர் விமானங்களின் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டது.
பிஹார் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தின் வழியாக அந்த விமானம் பயணித்த போது அதன் பாதுகாப்புக்காக ரஃபேல் போர் விமானங்கள் உடன் சென்றன.
விமானத்தின் இயக்கம் பாதுகாப்பு ஏஜென்சிகளால் கீழிருந்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது. அவ்வப்போது இந்தியப் பாதுகாப்புப் படையின் மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனையும் நடத்தப்பட்டது.
இந்திய விமானப்படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் வி.ஆர்.சௌத்ரி மற்றும் ராணுவத் தளபதி உபேந்திர திவேதி ஆகியோர் நிலைமையை உன்னிப்பாகவே ஆய்வு செய்தனர்.
பின்னர், புலனாய்வு அமைப்பின் தலைவர் ஜெனரல் திவேதி, ஒருங்கிணைந்த பாதுகாப்புப் படைத் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் ஜான்சன் பிலிப் மேத்யூ ஆகியோர் உயர்மட்டக் கூட்டத்தை ஏற்பாடு செய்து விவாதித்தனர்.CJ-130 விமானம் டெல்லி அருகே உள்ள ஹிந்தன் ராணுவ விமானப்படை தளத்தில் மாலை 5:45 மணிக்கு தரையிறங்கியதாக ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்தது.
இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், அவரைச் சந்தித்ததாக இந்திய பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
வங்கதேசத்தில் தற்போதைய நிலவரம் குறித்து அனைத்துக் கட்சி கூட்டத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கமளித்தார். அதில் மத்திய அமைச்சர்கள், எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, திமுக பொருளாளர் டிஆர் பாலு உள்ளிட்ட தலைவர்களும் பங்கேற்றனர். வங்காள தேச விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற மக்களவையில் இன்று பிற்பகல் 03.30 மணிக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தானாக முன்வந்து அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில் வங்கதேச விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்தும் விளக்கமளித்தார்.எனவே வங்காள தேசம் பாகிஸ்தானுடன் திரும்ப இணைய முடிவு செய்துள்ளதா?
இது மிகவும் கண்டிக்கத்தக்கது... .வங்காளதேசத்தின் தந்தை இப்போது அவரது சிலையை நாசவேலையின் கீழ் சேதப்படுத்தும் செயலை அங்கு இப்போது ஜனநாயகம் கொண்டாடப்படுகிறது.
அதுதான் ஷேக் முஜிப்பின் சிலை வீழ்த்தப்பட்டது. பங்களாதேஷ் இருப்பதற்குக் காரணமான முஜிப்பூர் ரஹ்மான் இதற்கு வரவே வேண்டாம். நமது கருத்தியல் வேறுபாடுகள் எதுவாக இருந்தாலும், தேசப் பிதா மஹாத்மா காந்தி, ஜவகர்லால் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், சர்தார் வல்லபாய் பட்டேல் மற்றும் அப்துல் கலாம் ஆசாத் ஆகியோருக்கு இதை ஒருபோதும் செய்ய வேண்டாம். அவர்கள் நம் மீட்பர்கள். அதுதான் இந்தியா. வேற்றுமையில் ஒற்றுமையே நமது சொந்த பலமும் பொருளும். அயர்லாந்து குடியரசுப் புரட்சிக்கு வித்திட்டது திவால் ராவ் அந்த நாட்டின் அதிபர், ரஷ்யாவின் நிலையில் லெனின் மற்றும் ஸ்டாலின் அதிபர் ஆகிய வரலாறு உண்டு ஆனால் நமது இந்திய நாட்டில் மட்டும் காந்தி அல்லது நேதாஜி அந்த நிலை எடுக்க வில்லை அவர்கள் நம் நாட்டின் தேசக் காவலர்கள் அதனால் தான் ஜனநாயகம் இங்கு நிலை பெற்றுள்ளது. ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் அன்டோனியா குட்டெரசின் செய்தித் தொடர்பாளர் பர்ஹான் ஹக் தெரிவித்திருப்பதாவது: தெற்காசிய நாடுகளில் ஒன்றான வங்காள தேசத்தில் தற்போதுள்ள அரசியல் சூழலையும், அங்கு நிலவும் பதற்றத்தையும், அரசியல் நெருக்கடியையும் மிகவும் உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம்.
அமைதியை நிலைநாட்ட ஒத்துழைக்குமாறு வங்காள தேசத்தின் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளோம். டாக்காவிலும், நாட்டின் மற்ற நகரங்களிலும் உள்ள மக்களையும் காக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளோம்" எனக் கூறியுள்ளார். "வங்காள தேச மக்களுக்கு ஆதரவாக இருப்போம். வன்முறையை தவிர்க்குமாறு மக்களைக் கேட்டுக்கொள்கிறோம்"' என அமெரிக்காவின் வெளியுறவுத்துறைச் செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் தெரிவித்துள்ளார். தற்போதைய வங்காள தேச நிலைமை குறித்து, அவர் :"வன்முறை வேண்டாம்...!பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, ஷேக் ஹசீனா வங்காள தேசத்தை விட்டு வெளியேறியதாக அறிவித்ததை நாங்கள் பார்த்தோம். நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம். வங்காள தேச மக்களுக்கு ஆதரவாக இருப்போம். வன்முறையைத் தவிர்க்குமாறு மக்களைக் கேட்டுக்கொள்கிறோம். கடந்த பல வாரங்களாக நடந்த வன்முறையால் பலர் உயிரிழந்தனர். வரும் நாட்களில், மக்கள் அனைவரும் அமைதியாகவும், நிதானமாகவும் இருக்க வேண்டும். இடைக்கால அரசு அமைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டதை, நாங்கள் வரவேற்கிறோம். கடந்த வாரங்களில் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் பற்றிய தகவல்களைக் கேட்டு நாங்கள் மிகவும் வருத்தப்படுகிறோம்" எனக் கூறினார்.
வங்காள தேச உள்நாட்டுக் கலவரங்கள் நடந்து கொண்டிருக்கிறது. முஜிபுர் ரகுமான் அவருடைய மகள் ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்துவிட்டு தனது தங்கையுடன் இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். அப்படியே இந்தியா வழியாக லண்டன் செல்ல இருப்பதாகத் தகவல்கள் சொல்கின்றன. ஒருவேளை அவர் இந்தியாவில் தஞ்சமடைந்திருந்தாலும் இங்கு ஒரு சில நாட்கள் மட்டும் தான் தங்க முடியும் அதற்கு மேல் தங்க இயலாது.
வங்காளதேசத்தின் பிதாமகரான முஜிபூர் ரகுமான் உருவசிலை கலவரக்காரர்களால் சேதப்படுத்தப்படுவதையும், அந்நாட்டு நாடாளுமன்றத்தினுள் புகுந்து இவர்கள் செய்யும் அட்டூழியங்களும் நம்மை பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாக்குகின்றன.
வங்காள தேச சுதந்திர போராட்டத்திற்கு முஜிபூர் ரகுமான் அவர்களது தியாகமும் போராட்டமும் ஈடுஇணையற்றது.
கலவரக்கார்ர்கள் வெறியாட்டம் ஆடுகிறார்கள். வங்காள தேசத்தின் தந்தை என்று சொல்லக்கூடியவரும் வங்கதேசத்தை நிர்மாணித்தவரும் அதற்கிடையில் கொல்லப்பட்டவருமாகிய ஷேக் முஜிபுர் ரஹ்மான் அவர்களின் சிலையை போராட்டக்காரர்கள் இலக்கின்றி அடித்து நொறுக்கக்கூடிய காட்சிகளும் ஊடகத்தில் காட்சியாகின்றன. நாட்டை விட்டுத் தப்பி சென்றார் வங்காள தேசப் பிரதமர்.
பங்களாதேஷின் சிராஜ்கஞ்ச் மாவட்டத்தின் எனயத்பூர் காவல் நிலையத்தில் 11 காவலர்களும் மற்றும் ஹிந்துக்கள் போராட்டகாரர்களால் உயிருடன் எரிக்கப்பட்டனர். கடந்த 24 மணி நேரத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
இந்தப் போராட்டகாரர்களுக்கு சீனா -பாக்கிஸ்தான் நிதியுதவி வருகிறது எனத் தகவல் வெளியாகியுள்ளது. அங்கு
அதிக விவசாயம் நெல் கரும்பு புகையிலை சணல் என ஏராளமான விளைபொருட்கள் விளையக்கூடிய வளமான இடம். அங்குதான் கங்கை நதி கடலில் கலக்கும் முகத்துவாரங்களும் உள்ளன. நாட்டின் இரு நகரங்களான டாக்கா மற்றும் சிட்டாகாங் ஆகியவை நாட்டின் பொருளாதார அண்மைய வளர்ச்சிக்கு உந்துசக்தியாக விளங்குகின்றன. வங்காளதேச நாட்டின் நிர்வாக வசதிக்காக 64 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதில், 8 கோட்டங்களின் நிர்வாகத்தில் செயல்படுகிறது.
வங்காளதேசம் உலகின் எட்டாவது அதிக மக்கட்தொகை கொண்ட நாடாகும். வங்காளதேசக் குடியரசு நாடாளுமன்ற ஜனநாயக நாடாகும். இதன் நாடாளுமன்றம் ஜாதியோ சங்சத் என அழைக்கப்படுகிறது. இந்நாடு, வளமிக்க கங்கை-பிரமபுத்திரா கழிமுகத்தில் அதாவது டெல்டா அமைந்துள்ளதோடு, வரலாற்று மற்றும் பல்வேறு
கலாசார மரபுரிமைகளையும் கொண்டுள்ளது. ஊழல் மற்றும் வறுமை போன்ற பல்வேறு பாரிய சவால்கள் காணப்பட்டாலும், 1991 ஆம் ஆண்டிலிருந்து நாட்டின் பொருளாதாரம் குறிப்பிடத்தக்க அளவில் வளர்ச்சி பெற்றுள்ளது. மேலும், 1975 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் தனிநபர் வருமானமும் இருமடங்காகியுள்ளது. வங்காளதேசம் அடுத்த பதினொரு பொருளாதார நாடுகளுள் ஒன்றாக இருந்தது.
இவ்வளவிருந்தும் அங்கு என்ன பிரச்சனை? இட ஒதுக்கீட்டுப் பிரச்சனைகளில் அதிக குழப்பங்கள் நேர்ந்து இருக்கின்றன. அதில் தான் கலவரம் தோன்றியது. இப்போது வங்காள தேசத்தை ராணுவம் எடுத்துக் கொண்டு அங்கு ராணுவ ஆட்சி நடக்கிறது.
சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு அரசு வேளைகளில் 30 சதவீதம் இட ஒதுக்கீடு கொடுப்பதற்கு எதிராக தேசமெங்கும் எழுந்த போராட்டங்கள் தான் இதற்கு ஆரம்பமாகச் சொல்லப்படுகிறது. அந்தப் போராட்டத்தை அரசு இரும்புக் கரங்களுடன் எதிர்கொண்டது. 200 க்கும் மேற்பட்டவர்கள் காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். 20,000 க்கும் மேல் காயமடைந்திருந்தனர். சுமார் பதினோராயிரம் பேர் சிறைப்படுத்தப்பட்டிருந்தனர். தேசம் முழுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து, இணையத் தொடர்புகள் அனைத்தையும் துண்டித்தது.
இவை எல்லாம் நடந்தும் போராட்டம் தணியாததால் உச்ச நீதிமன்றம் அந்தத் திட்டத்தை வாபஸ் வாங்கி விட்டது. இருப்பினும் அரசின் அடக்குமுறை மக்களின் கோபத்தை மேலும் வலுப்படுத்தவே உதவியது. ஷேக் ஹசீனா கடந்த 15 ஆண்டுகளாக ஆட்சியிலிருக்கிறார். அவரது ஆட்சியில் பொருளாதாரம் வளர்ச்சியுற்றாலும், கடந்த தேர்தலை எதிர்க்கட்சிகள் மொத்தமாக புறக்கணித்திருந்தன.
கிழக்கு வங்காளம் விடுதலை அடைய எண்ணற்றோர் முக்தி பாகினி என இரத்தம் சிந்திய தியாக வரலாறும் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் கீர்த்தி 2கே எனும் இன்றைய இளைய தலைமுறையினருக்குபா புரியவில்லை. வெறும் வெறிபிடித்த வெற்று mob hypocrisy மனநிலையில் உழல்வது பேராபத்தானது.
ஷேக் ஹசீனா நான்காவது முறையாக வங்காள தேசத்தின் பிரதமராக கடந்த ஜனவரியில் தேர்ந்தெடுக்கபட்டார். நீண்ட அரசியல் பயணம் இவருக்கு உண்டு; 1971 ஆம் ஆண்டில் தனி நாடக்கிய முஜிபூர் ரகுமானின் மகள் இவர். முஜிபூர், பின்னர் ராணுவத்தால் கொல்லப்பட்ட பின்னர் அவருடைய அவாமி லீக் கட்சிக்கு ஹசீனா தலைமை ஏற்று ஆட்சிக்கு வந்தவர். இவருடைய ஆட்சிக் காலத்தில் வங்காள தேசம் பொருளாதரத்தில் மேம்பட்டது.
நாட்டின் தனிநபர் வருமானம் நான்கு மடங்காக உயர்ந்தது. வறுமையிலிருந்து இரண்டரை கோடி மக்கள் மீட்கப்பட்டனர். உலக அளவில் ஆயத்த ஆடைகள் தயாரிப்பில் வங்காள தேசம் முன்னணி நாடாக மாறியது. இன்னும் சொல்லப் போனால் பாகிஸ்தானை விட வங்காள தேசத்தின் பொருளாதரம் மேம்பட்டது.
அனைத்தும் ஷேக் ஹசினாவின் நிர்வாகத் திறமையால் நிகழ்ந்தது என்று ஊடகங்கள் புகழ்ந்தன. அதனால் தான் அவரால் தொடர்ச்சியாக நான்காவது முறை ஜனவரியில் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சிக்கு வரமுடிந்தது.
இவ்வளவு சிறப்பு பெற்ற ஹசீனாவை, சுய நலங்கள், ஊழல் புகார்கள், அரசியல் கொலைகள் போன்றவற்றால் மக்கள் மத்தியில் வெறுக்கவும் பட்டார்.
வங்காள தேசத்தின் விடுதலைக்காகப் பாடுபட்டவர்கள் குடும்பத்தினருக்கு அரசு வேலை வாய்ப்புகளில் 30 விழுக்காடு கொடுக்கப்படும் என்று ஷேக் ஹசீனா அரசு வெளியிட்ட அறிவிப்பு அவருடைய கட்சிக்காரர்களுக்கு அதிக அளவில் பயன் தரக்கூடியது என்ற கருத்தால் எதிர்ப்பு வலுவானது. கடந்த ஒரு மாதமாக நடந்த போராட்டங்களில் சுமார் 300 பேர் உயிரிழந்து விட்டனர்.
போராட்டத்தை ஒடுக்க இணைய சேவைகள் நிறுத்தப்பட்டன. பொதுப் போக்குவரத்து நடைபெறவில்லை. நாட்டின் முதுகெலுமபாக விளங்கும் பின்னலாடை நிறுவனங்கள் செயல்படவில்லை.
நிலைமையை சமாளிக்க பிரதமர் பேச்சு வார்த்தைக்கு பல முறை அழைப்பு விடுத்தும் மாணவர் தலைவர்கள் அதனை ஏற்கவில்லை.
கடைசியாக போராட்டக்காரர்கள் கையில் கட்டைகளுடன் டாக்காவில் உள்ள ஷேக் ஹசீனாவின் வீட்டுக்குள் ஆகஸ்டு மாதம் 5- ஆம் தேதி நுழைந்தவுடன் நிலைமை மோசமானது
இப்போது தேசம் ராணுவத்தின் கைகளுக்குப் போயிருக்கிறது. வேறு வழியில்லை. அடுத்ததாக எதிர்க் கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வருவோம் என்று ராணுவம் அறிவித்திருக்கிறது.
இது போலத்தான் பாகிஸ்தானிலும் அடிக்கடி ராணுவ ஆட்சி மாறி மாறி வந்து கொண்டு இருப்பதை வரலாற்றில் பார்த்து வந்திருக்கிறோம். அதிபர்கள் கொலை செய்யப்படுவதும் ராணுவ ஆட்சி வருவதும் இரு நாடுகளிலும் தொடர்ந்து நடைபெறுகிறது ஏற்கனவே வங்கதேசத்தில் இருந்த ஒரு அதிபர் ஊழல் குற்றச்சாட்டால் சிறைக்கு அனுப்பப்பட்டார்.
1989 ஆம் ஆண்டில் சீனா செஞ்சதுக்கக் கலவரம், ஆப்கானிஸ்தான் கலவரம் ரஷ்யா மாஸ்கோவில் லெனினின் பதப்படுத்தப்பட்ட உடல் வைக்கப்பட்டுள்ளது.. ஆனால் இன்றைய ரஷ்ய இளைஞர்களுக்கு அது லெனினின் உடல் என்ற எந்த ஒரு உணர்வும் இல்லை... அதை ஏதோ ஒரு சாதாரண பொருளைப் போல விளையாடியது, ஸ்டாலின் மற்ற சிலைகளை தூக்கி எரிந்தது என சம்பவங்கள்…. உண்டு, மியாம்மர் அதாவது பர்மாவில் கலவரம், எகிப்தில் கெய்ரோவில் நடந்த கலகக் காரர்களின் வன்முறைகள், டிரம்ப் காலத்தில் வெள்ளை மாளிகையில் இளைஞர்களின் போராட்டங்கள் என வரலாற்று நிகழ்வு பல உண்டு
இப்படியான சூழலில் இந்தியாவைச் சுற்றி பாகிஸ்தான் சீனா வங்காள தேசம் மாலத்தீவுகள் போன்ற அனைத்தும் எதிரி நாடுகளாகிக் கொண்டிருக்கும் வேளையில் மியான்மர் கூட நம்மோடு நல்லுறவுகளில் இல்லை.
நேபாளமும் இலங்கையும் சீனாவின் கைப்பாவையாகவே ஆகிவிட்டன.
இப்படித்தான் இருக்கிறது இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு இடையே இருக்கும் உறவுப் பிரச்சனைகள்.
இலங்கையிலும் கடந்த வருடங்களில் ஆட்சியாளர்கள் மீது பொருளாதாரச் சிக்கல் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுஅவர்கள் விரட்டப்
பட்டார்கள். இதே தான் கடந்த 2022- ஆம் ஆண்டில் இலங்கையில் நடைபெற்றது. ராஜபக்ஷே குடும்பம். விலை வாசி உயர்வு, ஊழல் புகார்கள், வன்முறை, வேலையின்மை, பெட்ரோல் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு போன்ற காரணங்களால் பொது மக்கள் வெகுண்டு எழுந்ததால் இலங்கையில் கொழும்பு நகரம் போர்க்களமானாது. உச்சக்கட்டமாக பிரதமர் ராஜபக்ஷேவின் வீட்டுக்குள் புகுந்து சூறையாடினார்கள். அவர் வீட்டை விட்டு வெளியேறி ராணுவத்தின் உதவியுடன் தலைமறைவாக இருந்து பின்னர் அமெரிக்காவுக்குத் தப்பிச் செல்ல வேண்டியிருந்தது.
சொந்த நாட்டின் வரலாறும் தெரியாமல் வளர்க்கப்படும் இந்தத் தலைமுறையால் இன்றைய வங்காள தேச நிலைமை நாளை இந்தியாவுக்கும் வரலாம் என்ற கவலை பல தலைவர்களும் உணர்வு ஏற்படுகிறது. ஆனால் இதையெல்லாம் மீறி இந்தியா இன்று மிகப்பெரும் ஜனநாயக நாடாக அதன் மீது மாறாத அக்கறை கொண்ட ஒரு முன்மாதிரிநாடாக இருக்கிறது.
2 K ,இன்றைய இளைய தலைமுறைக்கு கேஎப்சி சிக்கனும் டாமினோஸ் பிட்ஸாவும் சாப்பிட்டால் தான் அது சிறப்பான உணவு என்று நினைக்கும் போலி மால் காலாச்சாரம் நிரம்பிய மேட்டிமைத்தனம் தலைமுறையை வளர்ந்து வருகிறது.
ஆயிரம் அரசியல் கருத்து வேறுபாடுகள் பல்வேறு மொழிகள் பல்வேறு மாநிலங்கள் கலாச்சாரங்கள் பண்பாடுகள் என்று இருந்தாலும் கூட கூட்டாட்சித் தத்துவத்தில் நிலைத்து நிற்கக் கூடிய அளவில் உலகமே வியக்கும் வண்ணம் இந்தியா ஒரு வலிமைமிக்க நாடாகத்தான் இன்றும் இருக்கிறது!
காரணம் அது ஜனநாயகத்தின் மீது அதிக நம்பிக்கையும் அதனால் நிலைத்து நிற்கக்கூடிய வலிமையும் பெற்று இருக்கிறது என்பதுதான்
அதன் வரலாற்று நிதர்சனமாகவும் இருக்கிறது. இந்தியாவைச் சுற்றியுள்ள நாடுகளில் ஏற்படும் அதிகார குழப்பங்களுக்கு பதிலாக இந்தியா இன்னும் தேர்தல் முறை ஜனநாயகத்தை வலுவாகவே தக்க வைத்துக் கொண்டிருப்பது இந்தியர்களாகிய நமக்கு ஒரு பெருமையான விஷயம்தான்!
வங்காள தேச கலவரக்காரர்கள் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் அவரது சகோதரியின் ஆடைகளை எடுத்து வந்து அதை காண்பித்து தாங்கள் எவ்வளவு கீழ்த்தரமானவர்கள் என்பதைக் காட்டுகின்றனர்.
கருத்துகள்