வாழை எனும் திரைப்படத்தின் கதை தான் பத்தாண்டுக்கு முன் எழுதிய வாழையடி..........எனும் சிறுகதையை மைய்யமாக வைத்து திருடி உருவாக்கப்பட்டுள்ளதாக
பிரபல எழுத்தாளர், சோ. தர்மன் கூறியுள்ளார். இது தொடர்பாக அச்சு மற்றும் காட்சி ஊடகங்களுக்கு அவர் அளித்த பேட்டியில், " நான் அதிகம் சினிமா பார்ப்பதில்லை. எப்போதாவது தான் பார்ப்பேன்.
சமீபத்தில் வெளியான வாழை படம் பார்த்த எனது நண்பர்கள், நான் எழுதிய வாழையடி....... என்ற சிறுகதையைப் போல் உள்ளதாக கூறினர். அதன் பின்னர் நான் வாழை படத்தைப் பார்த்தேன். கடந்த பத்தாண்டுகளுக்கு முன்னர் நான் எழுதிய கதைக்கு "வாழையடி _ _ _" என பெயர் வைத்தேன். அதற்கு காரணம் சிறுவர்கள் பல தலைமுறைகளாக இந்த வேலையைச் செய்து வருகின்றனர் என்பதைக் குறிக்கும் வகையில் தான் அவ்வாறு பெயர் வைத்தேன். நான் அச்சு ஊடகத்தில் எழுதிய கதையைத்தான், இப்போது காட்சி ஊடகமாக மாற்றி எடுத்துள்ளனர்"
எனக் குறிப்பிட்டுள்ளார்.பிரபல எழுத்தாளர் சோ. தர்மன் 1953 ஆம் ஆண்டு பழைய திருநெல்வேலி மாவட்டம் தற்போது புதிய தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள உருளைக்குடியில் பிறந்தவர் தமிழ்நாட்டின் சிறந்த புதின, சிறுகதை எழுத்தாளராவார். கரிசல் மண் சார்ந்த வேளாண் மக்களின் எதார்த்த வாழ்க்கையைப் பதிவு செய்யும் கம்யூனிஸ்ட் கலைப்படைப்பாளிகளில் முக்கியமானவர்.
எழுத்தாளர் கி. ராஜநாராயணனின் எழுத்துகளால் ஈர்க்கப்பட்டு எழுத்தாளராகப் பரிணமித்தவர். 2019-ஆம் ஆண்டு வரை 13 நூல்களை எழுதியுள்ளார். இலக்கியச்சிந்தனை, தமிழ்வளர்ச்சித்துறை, சாகித்திய அகாதமி விருதுகளைப் பெற்றவராவார். வாழைப்பழங்கள் இந்து கடவுள்களின் வழிபாட்டில் முக்கிய இடம் பெறுகின்றன. பண்டைய இந்தியாவில் வாழை கடவுள்களின் உணவாக கருதப்பட்டது.
குறிப்பாக தென்னிந்தியாவில் வாழை இலைகளும் இறைவழிபாட்டில் பயன்படுத்தப்படுகின்றன. விருந்தாளிகளுக்கு வாழை இலையில், குறிப்பாக தலை வாழை இலையில் (நுனி இலை) உணவு படைப்பது சிறந்த தமிழ் பண்பாடு. ஆகும். தமிழர்களின் திருமணம் போன்ற மங்கல நிகழ்ச்சிகளில் கட்டாயம் குலைகளுடன் கூடிய வாழை மரங்களை வாசலில் தோரணமாகக் கட்டுவர். வீட்டில் வளர்ந்துள்ள வாழை மரங்கள் சாய்ந்தால் அதனைத் தீய அறிகுறியாகக் கருதுவார்கள். என சிறப்பு வாய்ந்த வாழைப்பழம் பூவன், ரஸ்தாளி, மலை வாழை,செவ்வாழை, நேந்திரம் வாழை என பல ஜாதிகள் உண்டு
கருத்துகள்