பீஹார் மாநிலத்தில் ஜியோ சிம் வாடிக்கையாளர் அவரது சிம் பிளாக் செய்யப்பட்டதால் நுகர்வோர் பாதுகாப்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
அதில் எதிர் மனுதாரர்களில் ஒருவரான ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் முகேஷ் அம்பானிக்கு முசாபர்பூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அக்டோபர் மாதம் 29-ஆம் தேதி நுகர்வோர் பாதுகாப்பு கமிஷன் முன்பு முகேஷ் அம்பானி ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் இண்ட்ஸ்ட்ரிஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி தான் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திற்கும் தலைவராவார். ஜியோ சிம் பிரச்சனையால் அவதிப்பட்ட வாடிக்கையாளரான மனித உரிமை வழக்கறிஞர் ஒருவர் மூலம் அளித்த புகாரும், அதற்காக நுகர்வோர் குறைதீர் ஆணையம் அம்பானிக்கு அனுப்பியுள்ள நோட்டீசும் இப்போது பெரிய அளவில் பேசுபொருளாகியது
பீகாரின் முசாபர்பூரின் பிரம்மபுரா காவல் நிலையப் பகுதிக்கு உட்பட்ட ஜூரன் சாப்ரா சாலையில் வசித்து வரும் விவேக் குமார். இவர் முசாபர்பூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் தாக்கல் செய்த புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது, எனது பெயர் விவேக்குமார். நான் ஐடியா நெட்வொர்க்கிலிருந்து எனது சிம்மை ஜியோவிற்கு சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு போர்ட் மாற்றம் செய்தேன். அந்த நேரத்தில் தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் முறையாகச் சமர்ப்பித்திருந்தேன். அன்று முதல் நான் ஜியோ வாடிக்கையாளராக இருந்து வருகிறேன்.
ஆனால் சில மாதங்களுக்கு முன்னால் என்னுடைய ஜியோ சிம்மை எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென ஜியோ நிறுவனம் முடக்கியிருக்கிறது. இது தொடர்பாக நான் ஜியோ அலுவலகத்திற்குச் சென்று நேரடியாகப் புகார் செய்தேன். ஆனால் அவர்கள் என் சிக்கலைத் தீர்க்கவில்லை. புகார் அளித்த பின்னரும் என்னுடைய பிரச்சனை தொடர்ந்து கொண்டே தான் இருந்தது. ஆனால் ஜியோ நிறுவனமோ நான், மே மாதம் 25 ஆம் தேதி, 2025 ஆம் ஆண்டு வரை வாடிக்கையாளராக இருப்பதாகவே காட்டியது. இதனால் தொடர்ந்து ரீசார்ஜும் செய்தேன்.
ஆனால் என்னுடைய மொபைல் எண் வேலை செய்யாததால் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. ரீசார்ஜ் ஆகவில்லை என்பதாலும் என்னுடைய எண் பிளாக் செய்யப்பட்டதாலும் என் அணைத்துப் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் எனக்கு ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் எனது சிம் மீண்டும் இயங்க வைக்கவும் அதோடு ரூபாய்.10.30 லட்சம் இழப்பீட்டுத் தொகையும் தர வேண்டும். - விளம்பரம்- - விளம்பரம்- எனது வேலை தொடர்புடைய அனைத்து நபர்களிடமும் பிளாக் செய்யப்பட்ட என்னுடைய செல்போன் எண் தான் இருக்கிறது. இந்த விவகாரத்தில் எனக்கு பெரும் நிதி இழப்பும் ஏற்பட்டுள்ளது. மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. எனவே முசாபர்பூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் இந்த சேவைக் குறைபாட்டுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுபற்றி மனித உரிமை வழக்கறிஞர் எஸ்.கே.ஜா கூறும் போது, "இது நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவு 35 கீழும், Bihar Consumer Protection Rules, 1987. Notification No. G.S.R. 32, dated 28th September, 1987. In exercise of the powers ன் படியும் மோசமான சேவைகள் தொடர்பான வழக்கு.
பொதுவாக சேவை வழங்குநர் நுகர்வோருக்கு சேவையை முறையாக வழங்கத் தவறினால் வழக்குத் தொடரலாம். அந்த வகையில் அவர் புகார் மனு அளித்துள்ளார்" எனக் கூறினார்
இந்தப் புகாரை விசாரணைக்கு எடுத்த முசாபூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம், ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் முசாபர்பூரில் உள்ள ஜியோ தலைமை அலுவலகத்தின் கிளை மேலாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அவர்கள், இருவரும் அக்டோபர் மாதம் 29 ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு அதில் உத்தரவிடப்பட்டது.
கருத்துகள்