மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தா RG. கர் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்
பயிற்சி மருத்துவர் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருப்பது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மருத்துவர்கள் போராட்டம் நடத்தினர். இந்த நிலையில்
உச்ச நீதிமன்றம், கருத்து “எங்களுக்கும் மருத்துவர்கள் மீது நலனும் அக்கறையுமுள்ளது. இந்தச் சூழலையும் அரசியலாக்க வேண்டாம். சட்டம் தன் கடமையைச் செய்வதனால் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மருத்துவர் உடனடியாகப் பணிக்குத் திரும்ப வேண்டும். அமைதியான முறையில் போராடிய மருத்துவர்கள் மீது எந்த விதமான ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என அனைத்து மருத்துவமனை நிர்வாகத்துக்கும் உத்தரவிடப்படுகிறது.
இந்த உத்தரவின் படி பணிக்குத் திரும்பும் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து மாநிலங்களிலும் அரசு தலைமைச் செயலாளர்கள், காவல்துறை டிஜிபிக்களுக்கும் மத்திய சுகாதாரத்துறைச் செயலாளர் உத்தரவிட வேண்டும்.
அது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து இரண்டு வாரத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்” எனத் தெரிவிதத நிலையில் நாடு முழுவதும் மருத்துவர்கள் நடத்தி வந்த போராட்டம் வாபஸானது. உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலை அடுத்து போராட்டம் வாபஸாகி பணிக்குத் திரும்புவதாக மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், “...நாடு முழுவதும் தொடர்ந்து அதிகரித்து வரும் பலாத்கார வழக்குகள்
மற்றும் பல சந்தர்ப்பங்களில் கொலையுடன் கூடிய பலாத்கார சம்பவங்கள் நடப்பதை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன். நாடு முழுவதும் தினமும் 90 பலாத்கார சம்பவங்கள் நடப்பதை பார்க்கும்போது, சமூகம் மற்றும் தேசத்தின் நம்பிக்கையையும்,
மனசாட்சியையும் உலுக்கிவிடுவது திகிலூட்டுவதாக உள்ளது இத்தகைய கொடூரமான குற்றங்களில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக முன்மாதிரியான தண்டனையை பரிந்துரைக்கும் கடுமையான மத்திய சட்டத்தின் மூலம் இத்தகைய தீவிரமான மற்றும் உணர்திறன் வாய்ந்த பிரச்சினைகளுக்கு விரைவான விசாரணைக்கு விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும்
அத்தகைய வழக்குகளில் விரைவான நீதியை உறுதி செய்ய முன்மொழியப்பட்ட சட்டத்தில் பரிசீலிக்கப்பட வேண்டும், முன்னுரிமை 15 நாட்களுக்குள் முடிக்க வேண்டும்.
கருத்துகள்