தாக்கல் செய்த ஒருங்கிணைந்த வக்ஃப் மேலாண்மை, அதிகாரமளித்தல், திறன் மற்றும் மேம்பாடு'' சட்டம் ஆதரவும் எதிர்ப்பும்
நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஒருங்கிணைந்த வக்ஃப் மேலாண்மை, அதிகாரமளித்தல், திறன் மற்றும் மேம்பாடு சட்டம் என்ற பெயரிலான மசோதாவுக்கு ஆதரவும் கடும் எதிர்ப்புகளும் கிளம்பின,
வக்ஃப் சட்டம் "ஒருங்கிணைந்த வக்ஃப் மேலாண்மை, அதிகாரமளித்தல், திறன் மற்றும் மேம்பாடு'' சட்டம் (Unified Waqf Management, Empowerment, Efficiency and Development Act) என மறுபெயரிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில், மெஜாரிட்டி சமூகத்தின் பொது சொத்துக்கள் குறைவு நாட்டில் அதிக நில உடைமைகளை வைத்திருக்கும் முதல் மூன்று தரப்பில் அரசு சார்பில்
பாதுகாப்பு அமைச்சகம், மற்றும் இந்திய ரயில்வே அமைச்சகம் அவை அல்லாத மூன்றாவது சிறுபான்மை சமூகத்தினைச் சார்ந்த வக்ஃப் வாரியம் ஆகும். சிறுபான்மையினர் தங்கள் நிறுவனங்களை நிர்வகித்துக்கொள்ள உரிமையை வழங்கும் அரசியலமைப்பின் 30 ஆவது பிரிவுக்கு நேரடியாக இது எதிராக இருக்கிறது" என திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி கருணாநிதி ஆவேசமாகவே பேசினார் அதுபோல கேரளாவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் இ.டி. முகமது பஷீர், இந்த மசோதா, அரசியல் சாசனம் குறிப்பிட்டுள்ள அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது எனக் குறிப்பிட்டார்.
அரசியல் அமைப்புப் பிரிவுகள் 14, 15, 25, 26 மற்றும் 30 க்கு எதிரானது எனக் கூறினார். இந்த மசோதா நிறைவேறினால் வக்ஃப் அமைப்புக்கு மதிப்பேதும் இருக்காதென்றும் அவர் குறிப்பிட்டார். வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சி, ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் மசோதா நிறைவேறும். மேலும் முன்னதாக, இந்தியாவிலுள்ள சூஃபிகளின் அமைப்பான அகில இந்திய சூஃபி சஜ்ஜதானஷின் கவுன்சில் (ஏ.ஐ.எஸ்.எஸ்.சி) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வக்பு திருத்தங்களுக்கு ஆதரவு தெரிவித்திருந்தது.
கருத்துகள்