ஹிந்து சாஸ்வத நிதி மோசடி வழக்கில் கைதாகிச் சிறையிலுள்ள தேவநாதன் யாதவ் உள்ளிட்ட மூவர் ஜாமீனில் விடுவிக்கக் கேட்டு
சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு சிறப்பு நீதிமன்றத்தின் பொறுப்பு நீதிபதி மலர் வாலண்டினா முன்பு விசாரணைக்கு வந்த போது முதலீட்டாளர்களுக்குப் பணத்தை வட்டியுடன் திருப்பி தருவதற்குத் தயாராக இருப்பதாகவும், அதற்கான கால அவகாசத்தை நீதிமன்றமே அளிக்க வேண்டும் எனவும் தேவநாதன் யாதவ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் இந்த நிதி முறைக்கேடு தொடர்பாக காவல்துறை விசாரணை செய்ய வேண்டும் என்பதால் இவர்களுக்குச் ஜாமீன் வழங்கக் கூடாது என தெரிவித்தனர். காவல்துறை தரப்பில் வழக்கறிஞர் டி.பாபு ஆஜராகி, இந்த வழக்கில் ஒரு நிறுவனம் உள்ளிட்ட ஐவர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. ஒருவர் தலைமறைவாக உள்ளார். 800 க்கும் மேற்பட்டோர் புகார் மனு அளித்துள்ளனர்..தினமும் புகார்கள் வந்து கொண்டே இருக்கின்றன. விசாரணை ஆரம்ப கட்டத்தில் தான் இருப்பதால் ஜாமீன் வழங்கக்கூடாது எனத் தெரிவித்தார். அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தேவநாதன் யாதவ் உள்பட மூன்று பேரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். தேவநாதன் யாதவின் 5 வங்கிக் கணக்குகள் உள்பட 22 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. மேலும் தேவநாதன் யாதவ் மீது சுமார் 800 க்கும் மேற்பட்ட புகார்கள் குறித்து நிதி மோசடி தொடா்பாக பத்து நாட்கள் அனுமதி கேட்ட நிலையில் விசாரணை நடத்த தேவநாதன் யாதவ் உள்ளிட்ட 3 பேரையும் 7 நாள்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த காவல் துறையினருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் செப்டம்பா் மாதம் 3 ஆம் தேதி மாலை 4 மணிக்கு அவா்கள் மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிடப்பட்ட நிலையில் தேவநாதன் யாதவ் உள்ளிட்ட 3 பேரை சென்னை குற்றப்பிரிவு காவல்துறை அசோக்நகாில் உள்ள அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்துகின்றனா். அப்போது தேவநாதன் யாதவ் மற்றும் அவரது பினாமிகள் பெயாிலுள்ள அசையும், அசையாச் சொத்துக்கள் குறித்தும், அவா் தனது குடும்பத்தினா் பெயாில் வெளிநாட்டில் வாங்கிய சொத்துக்கள் குறித்தும் விசாரணை நடத்தப்படுகிறது. மேலும் மோசடியில் கிடைத்த நிதியை தேவநாதன் யாதவ் எப்படிச் செலவு செய்தார் என்பது குறித்தும், 1990 ஆம் ஆண்டில் கடலூரில் மிகவும் சாதாரணமாக இருந்த தேவநாதன் யாதவ் எப்படி இந்த நிலையில் மோசடி மூலம் உயர்ந்தார் என்பது குறித்து தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது.
கருத்துகள்