தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக, தற்போதுய தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா நியமிக்கப்பட்டார்.
தமிழ்நாட்டின் கட்டிடங்கள், மனைப்பிரிவுத் திட்டங்களை ஒழுங்குபடுத்துவதற்காக தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கப்பட்டது. அதன் முதல் தலைவராக 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம்.8-ஆம் தேதி முன்னாள் தலைமைச் செயலர் கே.ஞானதேசிகன் நியமிக்கப்பட்ட நிலையில். அவரது பதவிக் காலம் 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி.10-ஆம் தேவியுடன் முடிவடைந்த நிலையில், புதிய தலைவரைத் தேர்வு சேய்ய தேர்வுக்குழு அமைக்கப்பட்டது.
ஜூலை மாதம் தனது பரிந்துரையை அளித்ததன் அடிப்படையில் பரிந்துரைகளைக் கவனமாகப் பரிசீலித்த தமிழ்நாடு அரசு, ஆளுநரின் ஒப்புதலை பெற்று, தற்போது தலைமைச் செயலாளராக உள்ள சிவ்தாஸ் மீனாவை தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக நியமித்துள்ளது.
1989-ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியான சிவ்தாஸ் மீனா, இராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர். 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தமிழ்நாடு தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். 2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஓய்வு பெறும் நிலையில், தற்போது ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
1989-ஆம் ஆண்டில் காஞ்சிபுரம் துணை ஆட்சியராக பணியைத் தொடங்கிய சிவ்தாஸ் மீனா, 2017 ஆம் ஆண்டு மத்திய அரசுப் பணிக்குச் சென்றார். தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைந்ததும், தமிழ்நாடு மாநில பணிக்கு அழைத்து வரப்பட்டார். இங்கு நகராட்சி நிர்வாகத் துறையின் செயலாளராக இருந்தவர், தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டிருந்தார்.
தமிழ்நாடு தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளதால், புதிய தலைமைச் செயலாளராக முதல்வரின் செயலாளராக உள்ள 1991-ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியான நா.முருகானந்தம் நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாகத் தகவல் தெரிகிறது.
கருத்துகள்