முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வருண் குமார் IPS அவர்களின் செயல்பாடை நேர்மையான பலரும் விரும்புகின்றனர்

காவல்துறையில் வருண் குமார் IPS அவர்களின் செயல்பாட்டை நேர்மையான பலரும் விரும்புகின்றனர் 

நாம் தமிழர் கட்சியின்  மாணவனால் தானும் தனது குடும்பத்தாரும் உண்மையிலேயே பாதிக்கப்பட்டிருந்தாலும், சம்பந்தப்பட்ட அந்த மாணவனைத் தண்டிக்கக்கூடிய குற்றம் செய்த போதும், அனைத்து பலமும், அதிகாரமும் தன்னிடமிருந்தாலும், அந்த மாணவனின் படிப்பையும் அவன் எதிர்காலத்தையும் கருதி அவனையும் அவனது பெற்றோரையும் அழைத்துப் புத்திமதி கூறி அனுப்பி வைத்தது உண்மையிலேயே அவரை நன்றாக அறிந்தவர்களன்றி அறியாத பலரும் பாராட்டுகின்றனர்.

உண்மையிலேயே அண்ணன் என்று அழைக்கக்கூடிய முழுத் தகுதியும் இந்த இடத்தில் வருண் குமார் IPS க்கே பொருந்தும். 


ஏதோ சீமான் ஒருவர் தான் இந்த தமிழர்களைக் காப்பாற்ற வந்த நபர் போல பேசுவதை அவரது கட்சியினர் வேண்டுமானால் ரசிக்கலாம். ஆனால் அரணையூர் சைமன் என்ற சீமான் யார் ? அவரது பின்புலம் என்ன? என்பது அறிந்தவர்கள் அவரது பேச்சை ரசிப்பதில்லை ! அதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வதுமில்லை! உண்மை வெளியில புலியாகப் பேசும் சீமான் அது அவருக்கு ஒரு கவசம் அல்லது தந்திரம்  தன்னை நம்புகின்றவர்களுக்கு ஒரு கட்சியின் தலைவன் நல்வழி காட்டும் நிலையில் இருக்க வேண்டும், எதையெல்லாம் பொதுவெளியில் பேசவேண்டும் என்பதை விட, எதையெல்லாம் பேசக்கூடாது எனபதைத் தெரிந்திருக்க வேண்டும். அது சுத்தமாக சீமானிடம் இல்லை.  இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி ஊராட்சி ஒன்றியம், உரப்புளி ஊராட்சியில் பிறந்த காவல்துறை பணியில் சிறந்து விளங்கும் 



தமிழ்நாடு ஐபிஎஸ் உயர் அலுவலர் வருண் குமார், மற்றும் அவரது மனைவி ஆன்லைன் முறைகேடு புகார்களுக்கு மத்தியில் சமூக ஊடகங்களில் இருந்து விலகி, நடவடிக்கை எடுப்பதாக சபதம் செய்து அவரும் அவரது மனைவியும் சமூக ஊடகங்களில் இருந்து 'தற்காலிகமாக' ஓய்வு எடுப்பதாக வருண் குமார் ஐபிஎஸ் அறிவித்தார், ஆனால் ஆன்லைன் துஷ்பிரயோகத்திற்கு காரணமானவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.


ஐபிஎஸ் உயர் அலுவலர் வி.வருண் குமார் மற்றும் அவரது மனைவி வந்திதா பாண்டே ஐபிஎஸ் புதுக்கோட்டை மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளராக உள்ளார். வருண் குமார் ஐபிஎஸ் திருச்சிராப்பள்ளி மாநகர் காவல்துறை ஆணையராக உள்ளார், தனது குடும்பத்தினர் மீதான ஆன்லைன் முறைகேட்டுக்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதாக சனிக்கிழமை எக்ஸ் தளத்தில் உறுதியளித்தார். மேலும், ஆன்லைன் முறைகேடுகளை பொறுத்துக் கொள்ள முடியாது என்றும், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் வலியுறுத்தினார்.


நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் மீது சிவில் மற்றும் கிரிமினல் அவதூறு நோட்டீஸ் கொடுத்ததாகவும், பின்னர்  நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 3 பேர் மீது திருச்சிராப்பள்ளி சைபர் குற்றக் காவல் பிரிவில் புகார் செய்ததாகவும் வருண் குமார் ஐபிஎஸ் தனது X பதிவில் தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்களால் சமூக ஊடக தளங்களில் தனது குடும்ப உறுப்பினர்கள் குறிவைக்கப்பட்டு துஷ்பிரயோகம் செய்யப்படுவதாகவும் ஐபிஎஸ் உயர் அலுவலர் குற்றம் சாட்டினார்.




X தளத்தில் அவர் பகிர்ந்து கொண்ட 8 பக்கங்கள் கொண்ட அறிக்கையில், அருண்குமார் ஐபிஎஸ் தனது அவதூறு வழக்கைத் தொடர்ந்து, தனது குழந்தைகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் புகைப்படங்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்டு சமூக ஊடகங்களில் பகிரப்படுவதாகவும், அதைத் தொடர்ந்து ஒரு அரசியல் கட்சியின் தலையீட்டை அவர் சந்தேகிப்பதாகவும் கூறினார்.



கட்சியுடன் தொடர்புடையதாக அவர் கருதும் 51 X கணக்குகளைப் பகிர்ந்துள்ளார்.



அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "ஆபாசமான உள்ளடக்கத்தை வெளியிடும் போலிக் கணக்குகளை, குறிப்பிட்ட கட்சியின் அமைப்பாளர்கள், மாநில அளவிலான தலைவர்கள் முதல் மாவட்ட அளவிலான தலைவர்கள் வரை, முக்கிய நிர்வாகிகளின் தூண்டுதலுடன் இயக்கி வருகின்றனர்.


மேலும், வெளிநாட்டில் வசிக்கும் தமிழ் பேசும் நபர்களுக்கு பணம் செலுத்தி ஆபாசமான தகவல்களை வெளியிட பல போலி கணக்குகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


அவரும், புதுக்கோட்டை மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளரு மான வந்திதா பாண்டேவும், இந்தத் தலைப்பில் உரையாடலில் ஈடுபடுவதில் இருந்து தற்காலிக ஓய்வு எடுப்பதாக வருண் குமார் ஐபிஎஸ் அறிவித்தார். இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்மீது 138 வழக்குகள் இருப்பதாகச் சொல்கிறார் ஆனால் அவரது தேர்தல் வேட்புமனுவில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்த போது 17 வழக்குகள் மட்டுமே உள்ளதாகப் பொய்யான தகவலை அளித்துள்ளார்.

இதற்காகவே தேர்தல் ஆணையம் அவர் மீது வழக்குத் தொடரவேண்டும் என்பது நடுநிலை மக்கள் கருத்தாகும். இரண்டு வாரங்களாக திருச்சிராப்பள்ளி மாநகர் காவலதுறைக் ஆணையர்  வருண் குமார், ஐபிஎஸ் க்கும் நாம் தமிழர் கட்சியினருக்குமிடையே சமூக வலைதளங்களில் வார்த்தைப் போர் நீடித்தது. அதாவது காலம்சென்ற முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் மு‌.கருணாநிதி குறித்து அவதூறு பரப்பியதாக நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சாட்டை துரைமுருகன் என்ற நபர் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார்.                   திருச்சிராப்பள்ளி மாநகர் காவல்துறை ஆணையர் வருண்குமார் ஐபிஎஸ் குறித்து அவதூறு மற்றும் கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக நாம் தமிழர் கட்சியின்  ஓருங்கிணைப்பாளார் அரணையூர் சீமான் உள்ளிட்ட 22 பேர் மீது  திருச்சிராப்பள்ளி மாநகரக் காவல்துறையினர் வழக்குப்பதிவு  செய்த நிலையில் அந்தக் கட்சியைச் சேர்ந்த இருவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் 

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், செய்தியாளர்களிடம் பேசுகையில் திருச்சிராப்பள்ளி மாநகர் காவல்துறை ஆணையர் வருண்குமார் ஐபிஎஸ் மீது தகாத வார்த்தைகள் மற்றும் மிரட்டும் விதத்தில் பேசியதாகவும் அதே போல அக்கட்சியை சேர்ந்த சாட்டை துரைமுருகன், இடும்பாவனம் கார்த்தி உள்ளிட்டோரும் வருண்குமார் ஐபிஎஸ் குறித்து அவதூறான கருத்துக்களைப் பரப்பியதாக கூறப்படுகிறது, அதனால் திருச்சிராப்பள்ளி தில்லை நகர் காவல் நிலையத்தில் காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் ஐபிஎஸ் அளித்த புகாரின் அடிப்படையில்  ஒரு நபரை அவமதிப்பது, அமைதியை சீர்குலைக்கும் வகையில் கருத்துக்கள் பதிவிடுவது, தகவல் தொழில்நுட்பச் சட்டம் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சைமன் என்ற சீமான் அக்கட்சியைச் சேர்ந்த சாட்டை அடைமொழி கொண்ட துரைமுருகன், இடும்பாவனம் ஊரைச் சேர்ந்த கார்த்திக் உள்ளிட்ட 22 பேர் மீது திருச்சிராப்பள்ளி மாநகர் தில்லைநகர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனிடையே  சமூக வலைதளங்களில் திருச்சிராப்பள்ளி காவல்துறை ஆணையர் வருண்குமார் ஐபிஎஸ் குறித்து அவதூறான கருத்தை பதிவிட்டதாக நாம் தமிழர் கட்சியை  சேர்ந்த கண்ணன் மற்றும்  திருப்பதி ஆகிய இருவரை தில்லைநகர் காவல்துறையினர் கைது செய்தனர்.

அவர்கள் இருவரையும் திருச்சிராப்பள்ளி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி 16 ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்ட நிலையில் கைது செய்யப்பட்ட இருவரிண் உறவினர்களும் காவலர்கள் அவர்களை 10 நிமிடத்தில் அனுப்பிவிடுவதாகக் கூறித்தான் கைது செய்தனர், அதன்பின் அவர்கள் இருவரும் எங்கே சென்றார்கள் என்ற் தெரியவில்லை நாங்களாக அவர்களைத் தேடி இங்கு வந்தோம் என்றும் காவலர்கள் அவர்களை அடித்ததில் பலத்த காயம் ஏற்ப்பட்டு இருப்பதாக தெரிவித்தனர். இதற்கு திருச்சிராப்பள்ளி மாநகரக் காவல்துறை ஆணையர் வருண்குமார் ஐபிஎஸ் தான் காரணம் எனவும், அவருக்கு சாதி ரீதியான வெறுப்பு இருக்கிறது எனவும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் பெயர் குறிப்பிடாமல் மறைமுகமாக விமர்சனம் செய்தார். இதனால் கொதிப்படைந்த இதுவரை நடுநிலை தவறாத நேர்மையான காவல்துறை ஆணையர் வருண்குமார் ஐபிஎஸ், தனது வழக்கறிஞர் மூலமாக அரணையூர் சைமன் என்ற சீமானுக்கு கிரிமினல் அவதூறு நோட்டீஸ் அனுப்பினார் சீமானுக்கு எதிராக வருண் குமார் ஐபிஎஸ் அளித்த நோட்டீஸில், தனக்கு எதிராக அவதூறு பரப்பியதற்காக ஏழு நாட்களுக்குள்  சீமான் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும், தவறும் பட்சத்தில் 2 கோடி ரூபாய் நஷ்ட ஈடாகத் தர வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்த நிலையில் பின்னர் 16 பக்கங்கள் கொண்ட பதில் கடிதத்தை சீமான் தனது வழக்கறிஞர் மூலமாக சமர்ப்பித்துள்ளார்.வருண் குமாருக்கு டிஜிபி ஆகுற தகுதியே இருக்கு என திடீரென பல்டி அடித்த சீமான் - அவதூறு நோட்டீஸுக்கு விரிவாக பதில் அளித்துள்ளார். , “திருச்சிராப்பள்ளி மாநகர் காவல்துறை ஆணையர் வருண் குமாரின் ஜாதி என்னவென்றே எனக்குத் தெரியாது. சாட்டை துரைமுருகனிடம் வருண் குமாரின் ஜாதி இது என்று ஒரு காவல் அதிகாரி கூறியதாக என்னிடம் சொன்னதை நான் பேசிவிட்டேன். இளம் அதிகாரியான வருண் குமாருக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது. பதவி உயர்வுகள் மூலம் டிஜிபி ஆகும் அளவுக்கு தகுதியுள்ளது. அவதூறு கருத்துகள் பதிவிட்ட விவகாரத்திற்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. நான் காவல் துறை மற்றும் காவலர்கள் மீது மிகுந்த மரியாதையும் நம்பிக்கையும் கொண்டவன். 8 மணி நேரம் வேலை உள்பட காவல் துறையினரின் உரிமைகளுக்காக குரல் கொடுத்துள்ளேன்” என்று பல்டி அடித்து விளக்கம் அளித்துள்ளார். இதில் பொது நீதி யாதெனில்:- "அரசியல் பிழைத்தோர்கு அறம் கூற்றாகும்"

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான விழாவாக தமிழ் சம