முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மஹாகவி பாரதியார் நினைவைப் போற்றும் நாளிது

அணைத்து உள்ளத்தில் நிலைத்து நிற்கும் மஹாகவி நம் தேசக் கவிஞர் "துச்சமாக எண்ணி நம்மை தூறு செய்த  போதிலும்

அச்சமில்லை...! அச்சமில்லை..!!.   அச்சமென்பதில்லையே..!!!  கல்வியுள்ளவரே. கண்ணுள்ளார் எனலாம்.

கல்வியில்லாதவர் கண் புண்ணென்றே  எனலாம்..

கல்வி மிகுந்திடில் கழிந்திடும் கடமை....கற்பதுவே உன் முதற் கடமை....!

மனதில் உறுதி வேண்டும்.  வாக்கினிலேயே  இனிமை வேண்டும்;  நினைவு நல்லது வேண்டும்;

நெருங்கின பொருள் கைகூட வேண்டும்.   எவரையும் வெற்று காகிதம் என ஒரு போதும் எண்ணாதே...


ஒரு நாள் அவன் பட்டமாய் பறப்பான்

நீயும் அண்ணாந்து தான் பார்க்க வேண்டும்.

மனஉறுதி இல்லாதவனுடைய உள்ளம் குழம்பிய ஒரு கடலுக்கு சமமானது...!

காயங்கள் குணமாக காலம் காத்திரு...கனவுகள் நினைவாககாயம் பொறுத்திரு.      என எழுதிய வார்த்தை என்றும் மனதில் ஓடும்.



1897-ஆம் ஆண்டில் மஹாகவி சுப்பிரமணிய பாரதி பள்ளியில் படித்துகொண்டிருக்கும் போது செல்லம்மாவைத் திருமணம் செய்தார். மகள்கள் தங்கம்மாள், சகுந்தலா.

காசி ஹிந்துக் கல்லூரியில் சமஸ்கிருதமும், ஹிந்தியும் கற்றார். அதோடு போஜ்புரி, அவதி, பிரஜ்பாஷாவைக் கற்றுக் கொண்டார். அங்குள்ள பல்கலைக்கழகத்தின் நூலகங்களில்  வில்லியம் வேர்ட்ஸ் வொர்த், ஷெல்லி, பைரன், ஷேக்ஸ்பியரின் நூல்கள் பாரதிக்கு அறிமுகமானது.


காசியிலிருந்த போது 1899 ஆம் ஆண்டு முதல் 1902  ஆம் ஆண்டு வரை  பாரதிக்கு பால கங்காதர திலகர், லாலா லஜ்பதி ராய், பிபின் சந்தர்பால், டாக்டர் பகவான் தாஸ் போன்ற விடுதலைப் போராட்ட தேசியத் தலைவர்களை நேரில் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்புகள் பாரதியார் பின்னாளில் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடக் காரணமாகவே அமைந்தன. பிறகு எட்டையபுரத்து மன்னரின் அழைப்பை ஏற்று அரசவைக் கவிஞராகப் பணியாற்றினார். 1904-ஆம் ஆண்டில் மதுரையில் மன்னர் சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார். இவரின் ஞான குருவாக விவேகானந்தரின் மாணவி நிவேதிதா  பாரதிக்கு உதவியவர் நவம்பர் மாதம் 1904-ஆம் ஆண்டில் சென்னைக்குச் சென்று சுதேசமித்திரன் இதழின்  ஆசிரியர் குழுவில் சேர்ந்தார். அது முதல் அரசியல், சுதந்திரப் போராட்டம் பற்றிய பரிச்சயம் கிடைத்தது. 1904 ஆம் ஆண்டு முதல் 1908 ஆம் ஆண்டு வரை சென்னையில் பத்திரிகை ஆசிரியராகப் பணியாற்றினார், மேடைப் பேச்சாளராக, மாநாட்டுப் பிரதிநிதியாக, சங்க அமைப்பாளராக, தீவிர சுதந்திரப் போராட்ட இயக்கத்தாரோடு தொடர்பு கொண்டவராக வளர்ந்தார். பாரதி பாலகங்காதர திலகரை அரசியல் குருவாக ஏற்றார்.பாரதி ஜாதி அமைப்பை எதிர்த்து தன்னுடைய பூணூலைத் துறந்தார்.


வ.ரா. வையும் பூணூலை எடுத்து விடச் செய்தார். கனகலிங்கம் என்ற ஹரிஜனப் பையனுக்குப் பூணூல் அணிவித்தார். பிராமணன் யார்? என்பதற்குப் பாரதியார் வஜ்ரசூசி என்ற சாத்திரத்தை ஆதாரம் காட்டி, பிறப்பால் ஒருவன் பிராமணன் இல்லை என்றார். 'நந்தனைப் போல ஒரு பார்ப்பான் இந்த நானிலத்தில் கண்டதில்லை’ என்றார். 'பெண்களுக்குச் சொத்துரிமை வேண்டும்; கல்வி பயில, பதவிகள் வகிக்க உரிமை வேண்டும்;


விரும்பிய மணாளனை மணந்துகொள்ள முழு உரிமை வேண்டும்; மனம் கசந்தால் விவாக ரத்துச் செய்ய உரிமை வேண்டும்; கணவன் இறந்து போனால், விதவைக்கோலம் பூணாது மறுமணம் செய்து கொள்ள உரிமை வேண்டும்’ என்று எழுதினார். விதவைகள் மறுமணம் குறித்துக் காந்தியடிகள் தயக்கம் காட்டிய போது அதை எதிர்த்து எழுதினார். ஜூலை மாதம் 1921-ஆம் ஆண்டில் ஜூலை மாதம் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலுக்கு சென்றபோது, எதிர்பாராவிதமாக அந்த கோவில் யானையால் தூக்கி எறியப்பட்டதால் பலத்த காயமுற்று மிகவும் நோய்வாய்ப்பட்டார். செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி 1921-ஆம் ஆண்டில் 39-ஆவது வயதில் காலமானார்.         சென்னை திருவல்லிக்கேணியிலுள்ள இல்லத்தில் பாரதியார் வசித்தார். 

தனது 39-வது வயதில், 1921-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11- ஆம் தேதி நள்ளிரவு 1:30 மணியளவில் இறந்தார் .

நள்ளிரவு 12:00 மணிக்கு மேல் என்பது, அடுத்த நாள் கணக்கில் தான் வரும் என்பதால், செப்டம்பர் மாதம்., 12 ஆம் தேதி பாரதியார் இறந்ததாகக் குறிப்பிட்டு, அவரது உறவினர்கள் சரியான முறையில் பதிவு செய்துள்ளனர். ஆனால், அப்போதைய மரபு வழக்கப்படி சில புத்தகங்களிலும், பேச்சு வழக்கிலும், செப்டம்பர் மாதம்.,11 ஆம் தேதியில் பாரதியார் இறந்தார் என்று தான் குறிப்பிடப்பட்டு, பின்னர் அதுவே நிலைத்துவிட்டது. 

இது குறித்து தமிழ் வளர்ச்சி ஆர்வலர்கள், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அரசுகளின் கவனத்துக்கு எடுத்துச் சென்றனர். பாரதியார் நினைவு தினம் செப்டம்பர்.,12 என, அதிகாரப்பூர்வமாக தேதியை மாற்ற முயன்றதன் காரணமாக, 2014- ஆம் ஆண்டில், தமிழ்நாடு முதல்வராக காலம்சென்ற செல்வி.ஜெ.ஜெயலலிதா இருந்த போது, எட்டயபுரத்திலுள்ள கல்வெட்டில், மறைந்த தினம் செப்டம்பர் மாதம் 12 ஆம் தேதி என்று திருத்தம் செய்யப்பட்டது. அப்போது முதல், செப்டம்பர் மாதம்.12-ஆம் தேதியில் தான் பாரதியார் நினைவு தினத்தை தமிழ்நாடு அரசு அனுசரிக்கிறது.

ஆனால் பெரும்பாலான இணையத் தளங்களில் செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி என்றே இருக்கிறது.                     திண்ணிய நெஞ்சம்வேண்டும்... தெளிந்த நல் அறிவு வேண்டும் ....!

உள்ளத்தில் நேர்மையும் தைரியமும் இருந்தால் நடக்கும் பாதையும் நேரானதாகவே இருக்கும்...!

சரியோ தவறோ வாழ்கின்ற ஒரு வாழ்வை உனக்குப் பிடித்தபடி மனச்சாட்சியோடு வாழ்...

தீர்வுகள் சொல்ல இங்கு யாரும் நல்லவரும் இல்லை...

தீர்வுகள் கேட்க நீ கெட்டவனும் இல்லை...!

துன்பம் நேரும் சமயத்தில் அதைக் கண்டு. சிரிக்கப் பழகுங்கள்

அதுவே.அத்துன்பத்தை வெட்டும் வாளாகி விடும்.

துன்பம் நேரும்போது  துணிச்சல் எனும் கடிவாளத்தால் கட்டி மனக்குதிரையைப் பிடித்து நிறுத்த வேண்டும். இதுவே சரியான யோகப்பயிற்சி. ஆகவே பாரதியார் நினைவு நாளில் அவரையும்

அவரது வீர வரிகள். கவிதைகளை போற்றி ஒன்றாய் நின்றினி வென்றாயினுமுயிர் சென்றாயினும் வலி குன்றாதோதுவோம் என வணங்குவோம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான விழாவாக தமிழ் சம

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு