சென்னை வளசரவாக்கத்தில் ஸ்ரீதேவிகுப்பம் கால்பந்து பயிற்சி மையத்தில் பயிற்சி பெறும் 16 வயது சிறுவனையும், அவனது நண்பர் கிருபாகரன் (வயது 20) இருவரையும் பின்னணிப் பாடகர் மனோவின் இரண்டு மகன்கள்
ரஃபி மனோ, ஷாகிர் ஆகிய இருவரும் தங்களின் மூன்று நண்பர்களுடன் இணைந்து காரணமில்லாமல் தகாத வார்த்தைகளில் பேசி மண்டியிட வைத்து உருட்டுக்கட்டைகளால் தாக்கியதாக வளசரவாக்கம் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டதன் அடிப்படையில் வளவரவாக்கம் காவல்நிலையத்தில் பணி செய்து வரும் காவலர்கள் பாடகர் மனோவின் வீட்டிற்குச் சென்று விசாரித்த நிலையில் வீட்டில் அவர் மகன்கள் இருவரும் இல்லாமல் தலைமறைவானதையடுத்து பாடகர் மனோ மகன்களின் நண்பர்கள் இருவரையும் கைது செய்தனர்,
பாடகர் மனோவின் மகன்களையும் அவரது நண்பரையும் தேடி வருகிறார்கள் இவர்கள் மூவரும் கிழக்குக் கடற்கரை சாலைப் பகுதியில் இருப்பதாகவும் செல்போன் சிக்னலை வைத்து காவல் துறையினர் தேடுவதாகவும் அவர்கள் செல்போனை ஸ்விட்ச் ஆப் செய்துள்ளதாகவும்
அவர்களது செல்போனுக்கு வந்த அழைப்புகள் வைத்தும் பிடிக்க முடியாமல் காவலர்கள் திணறுதாகவும் தகவல்கள் உள்ள நிலையில்தான் தான் பாடகர் மனோவின் மனைவி தற்போது சென்னையில் செய்தியாளர்களிடம் விளக்கமளித்துள்ளார்.
கருத்துகள்