மதுரை மேலக்கோபுரத் தெரு அருகில் ஊடே மேலமாசி வீதிக்கும் மேல் ஆவணி மூல வீதிக்கும் இடையிலுள்ள ஒரு குறுகிய வீதி, மேல அனுமந்தராயன் கோவில் தெரு, அங்கே தான் துணி தைக்கும் ஸ்டைல் கிங் டெய்லர் கடை உண்டு. டெல்லி வாலா ஸ்வீட்ஸ் மற்றும் இளங்கோ மெஸ் அங்கு இருந்தாக நினைவு
வாசலில் வீணை வைத்த அந்த வீட்டைத் தாண்டும் போதெல்லாம் நம் நினைவுக்கு ஒரு கோவிலைத் தாண்டுகின்ற உணர்வு வரும். இசையை பக்தி எனும் தேனில் குழைத்துத் தந்த அந்த மாதரசியின் பிறந்த வீடு தான் அது. உலகமுள்ள வரை எம்.எஸ்.எஸ் அம்மாவின் புகழ் நிலைத்திருக்கும். அவர் பிறந்த தினம் கடந்த
15 செப்டம்பர் 2024.ஆம் தேதி கர்நாடக இசை உலகின் நைட்டிங்கேல் என அழைக்கப்படும் எம்.எஸ்.
சுப்புலட்சுமியின் வாழ்வியல் குறித்த பயணத்தை போற்றி வழங்கும் ஒரு தமிழ் நாடகம்.
கர்நாடக இசையின் ராணியாக கோலோச்சி வந்த எம்.எஸ்.அம்மா அவர்களின் 108 வது பிறந்தநாள் அன்று
இவர் பெறாத பட்டங்களோ, பரிசுகளோ கிடையாது எனக் கூறும் வகையில் அக்காலத்தில் அத்தனை உயர் பரிசுகளையும், பட்டங்களையும் பெற்றவராவார்.
எம்.எஸ்.1974 ஆம் ஆண்டில் மக்சேசே விருதைப் பெற்றார் எம்.எஸ்.எஸ்
1954 ஆம் ஆண்டில் பத்மபூஷன் விருதைப் பெற்றார்.
மியூசிக் அகாடமி வழங்கும் சங்கீத கலாநிதி பட்டத்தை 1968 ஆம் ஆண்டில் பெற்றார். இந்த விருதைப் பெற்ற முதல் பெண்மணி எம்.எஸ்.எஸ் தான்.
1966 ஆம் ஆண்டில் ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பாடும் வாய்ப்புக் கிடைத்தது, தனது வசீகரக் குரலால் சபையில் கூடியிருந்தவர்களைக் கட்டிப்போட்டார்.
அதோடு மறைந்த காஞ்சி பெரியவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி எழுதிய பாடல்களையும், மூதறிஞர் இராஜாஜி உலக அமைதிக்காக எழுதிய பாடல்களையும் எம்.எஸ்.எஸ் தான் பாடினார்.
இங்கிலாந்து, ரஷ்யா, அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் பாடி கர்நாடக இசையின் பெருமையை உலகறியச் செய்தார்.
இவற்றுக்கெல்லாம் உச்சமாக 1998 ஆம் ஆண்டில் இந்தியாவின் உயரிய விருதான பாரதரத்னா விருதைப் பெற்றார் எம்.எஸ்.எஸ்
இத்தனை பெருமைகளை உடையவராக இருந்தும் எம்.எஸ். சுப்புலட்சுமி மிகுந்த அடக்கமுடையவராக இருந்தார். இசை என்பது ஒரு கடல். நான் ஒரு மாணவி என்றார்.
எம்.எஸ்.எஸ்ஸின் பாட்டுத் திறமையை காலங்கள் கடந்தும் நினைவூட்டும் வகையில் மீரா பஜன்கள், வெங்கடேச சுப்ரபாதம், குறையொன்றும்இல்லை, காற்றினிலே வரும் கீதம் ஆகிய பாடல்கள் வெளிப்படுத்தும். மகாத்மா காந்தியின் விருப்பப் பாடலான வைஷ்வணவ ஜனதோ பாடலையும் எம்.எஸ்.எஸ் குரல் இன்னும் தூக்கிக் கொடுத்தது இன்றும் பிரபலமான பாடலாக விளங்குகிறது.
மூதறிஞர் இராஜாஜி, டிகேசி என்று புகழப்படும் ரசிகமணி டி.கே. சிதம்பரநாத முதலியார், கல்கி கிருஷ்ணமூர்த்தி, ஆர்.கே. சண்முகம் செட்டியார் போன்றோரால் தொடங்கப்பட்ட தமிழ் இசை இயக்கத்திற்குப் பக்கபலமாக நின்றவர்கள் சுப்புலட்சுமி - சதாசிவம் தம்பதியினர்.
மகாகவி சுப்பிரமணிய பாரதியார், சுத்தானந்த பாரதியார், வள்ளலார் எனும் அருள் பிரகாச ராமலிங்க அடிகளார், பாபநாசம் சிவன் போன்ற எண்ணற்ற அருளாளர்களின் தமிழ்ப் பாடல்களை மேடைகள் தோறும் பாடி, ரசிகர்கள் மனதில் பதியவைத்த பெருமை M.S. சுப்புலட்சுமியைச் சாரும்.
சென்னை தமிழ் இசைச் சங்கம், M.S. சுப்புலட்சுமிக்கு 'இசைப் பேரறிஞர்' பட்டம் சூட்டிக் கெளரவித்தது. இவர் பாடிப் பிரபலமடைந்த தமிழ்ப் பாடல்களுள் 'வானத்தின் மீது மயிலாடக் கண்டேன்', 'குறையொன்றுமில்லை', 'நீ இறங்கா எனில் புகலேது', 'ஒளி படைத்த கண்ணினாய் வா வா வா', 'வாழிய செந்தமிழ்' ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
இசைக் குயில் எம்.எஸ்.எஸ் புகழ் இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு அவரது இசைக் குரல் மறையாமல் வாழ்ந்துகொண்டிருக்கும் என்பதில் எந்த ஐயமுமில்லை.
கருத்துகள்