ஆபரேஷன் அகழி’ எனும் பெயரில் காவல்துறை ஆய்வாளா்கள் தலைமையில் 25 தனிப்படைகள் அமைக்கப்பட்டதில் மொத்தம் 825 காவலர்களுடன் வியாழக்கிழமை மாலை முதல் வெள்ளிக்கிழமை மாலை வரை இரண்டு மாவட்டத்திலும் நடந்த அதிரடியான சோதனையில் ஈடுபட்டதில், பழைய குற்றவாளிகள்,
நில அபகரிப்பு குற்றச் செயல்களில் ஈடுபடுவதாக சந்தேகப்படும் நபா்களின் வீடுகளில் சோதனை மேற்கொண்டனா். அதில் பிரபு (எ) பப்லு, ஜெயக்குமாா் (எ) கொட்டப்பட்டு ஜெய், ஐஜேகே கட்சி பிரமுகர் மைக்கேல் சுரேஷ் (எ) பட்டறை சுரேஷ்,டேவிட் சகாயராஜ், பாது (எ) பாலமுத்து,பிரதாப் என்கிற சிங்கம் பிரதாப், ராஜகுமாா், கருப்பையா, பாதுஷா என்கிற பல்பு பாட்ஷா , கரிகாலன், கோபாலகிருஷ்ணன் (எ)தாடி கோபால், சந்திரமௌலி, குருமூா்த்தி, டி.டி.கிருஷ்ணன் உள்ளிட்ட 14 நபர்கன் வீடுகளில் நடத்திய சோதனையில் அவா்களுக்கு தொடா்பில்லாத வகையில், பிற நபா்களிடமிருந்து 258 சொத்துக்களின் ஆவணங்கள், 68 வங்கிக் கணக்குப் புத்தகங்கள், 75 புரோநோட்டுகளும், 82 நிரப்பப்படாத காசோலைகள், 18 கைப்பேசிகளுடன், 84 சிம் காா்டுகள் என பல்வேறு பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதில் பட்டறை சுரேஷ் என்ற நபர் வீட்டிலிருந்து கணக்கில் வராத 66 அசல் பத்திரங்களும்,
புதுச்சேரி மது வகைகள் 31 பாட்டில்களும் கைப்பற்றப்பட்டன. இவை சட்டவிரோதமாக நடக்கும் கட்டைப் பஞ்சாயத்துகள் மூலமாகவும், கந்து வட்டித் தொழில் மூலமாகவும் மிரட்டிப் பெறப்பட்டதென விசாரணையின் மூலம் தெரிய வந்தது. சோதனை குறித்து அறிந்த சுரேஷ் மற்றும் எடமலைப்பட்டிப் புதூரைச் சோ்ந்த நாம் தமிழா் கட்சி முன்னாள் பொருளாளா் சந்திரமெளலியும் சோதனையின்போது தப்பியோடிவிட்டனர் அவர்களைத் தேடி வருகின்றனர்.திருச்சி மாநகர காவல் ஆணையர் ந. காமினி, திருச்சி மாவட்ட (எஸ்பி) காவல் கண்காணிப்பாளர் வீ. வருண்குமார், புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே ஆகியோர் இணைந்து நடவடிக்கை எடுக்க முடிவு செய்தனர்இது குறித்து
திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ. வருண்குமார் கூறியிருப்பது, ஆபரசன் அகழி சோதனைக்காக 3 பட்டியல்கள் தயார் செய்யப்பட்டு, முதல் பட்டியலில் உள்ள நபர்கள் மட்டுமே சோதனை செய்யப்பட்டுள்ளனர்.
இன்னும் 2 பட்டியலில் உள்ள நபர்கள் விரைவில் சோதனை செய்யப்படுவார்கள். மேலும், இந்த தேடுதல் வேட்டையின் போது நில அபகரிப்பு தொடர்பான கூடுதல் தகவல்கள் பெறப்பட்டுள்ளன. அதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட நில அபகரிப்பு, கட்டப்பஞ்சாயத்து செய்த நபர்கள் மீது அடுத்தடுத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என எச்சரித்துள்ளார்.
திருச்சிராப்பள்ளி மாவட்ட, நில உரிமையாளர்களை யாரேனும் கட்டப் பஞ்சாயத்து மற்றும் நில அபகரிப்பு செய்யும் நபர்களோ, சரித்திர பதிவேடு குற்றவாளிகளோ நேரடியாகவோ அல்லது தொலைப்பேசியின் மூலமாகவோ மிரட்டினாலோ அவசிய ஆடியோ, வீடியோ, கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளின் ஆதாரங்களுடன் புகார் அளிக்கலாம் எனவும், திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல் உதவி எண்ணில் (97874 64651) தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்