தமிழ்நாடு மாநில அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன், தங்கம் தென்னரசுக்கு எதிராக வழக்கு விசாரணை செப்டம்பர் மாதம் 9-ஆம் தேதி முதல் ஶ்ரீவில்லிப்புத்தூர் விசாரணை நீதிமன்றத்தில் தொடங்குகிறது. விசாரணை தினமும் நடத்தப்பட வேண்டுமென்பதும் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு.
சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த மறு விசாரணை உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வதற்கான முயற்சியில் இரண்டு அமைச்சர்களான கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளனர். மேல்முறையீட்டு மனு சம்மந்தமாக உச்சநீதிமன்ற வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்துவதற்காக அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் ஏற்கனவே டெல்லி சென்ற நிலையில். அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று பிற்பகல் டெல்லி சென்றடைந்தார். தமிழ்நாடு அமைச்சர்கள் சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக டெல்லியில் முகாமிட்டிருப்பது அரசியல் வட்டாரங்களில் பேசு பொருளாகிறது.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் வழக்கானது:-
2006 ஆம் ஆண்டு முதல் 2011-ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்தவர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் இராமச்சந்திரன். மற்றும் அவரது மனைவி ஆதிலட்சுமி, அவரது நண்பர் கே.எஸ்.பி. சண்முகமூர்த்தி ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக ரூபாய் 44,56,067 மதிப்பில் சொத்து குவித்துள்ளனர் எனவும்.
2012-ஆம் ஆண்டு கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் மீது வழக்குத் தொடரப்பட்டது.
2023-ஆம் ஆண்டு கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் உள்ளிட்டோரை ஶ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றத்தில் பெற்ற விடுதலைக்கு எதிராக தாமாக முன்வந்து விசாரணை நடத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்.உத்தவிட்டார் அதேபோல் அமைச்சர் தங்கம் தென்னரசு மீதான வழக்கில் 2006-ஆம் ஆண்டு முதல் 2011-ஆம் ஆண்டு வரையில் கல்வி அமைச்சராகப் பதவி வகித்தவர் தங்கம் தென்னரசு அவரது
மனைவி மணிமேகலை ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக ரூபாய் 76,40,000 சொத்துக் குவித்தனர் என்பது தான் வழக்கு
-2012-ஆம் ஆண்டில் தங்கம் தென்னரசு மீது வழக்கு தொடரப்பட்ட நிலையில்.
2022-ஆம் ஆண்டு தங்கம் தென்னரசை ஶ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றம் செய்த விடுதலைக்கு எதிராக தாமாக முன்வந்து விசாரணை நடத்தினார் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ். இதன் மேல்முறையீட்டு சம்பந்தப்பட்ட வழக்குகள் தொடர்பான டெல்லி பயணம் என்பது தப்பு செய்தால் தப்பிக்க முடியாது என்பது தெரிந்த பின்னர் முயற்சி எடுக்கும் இவர்கள் விவகாரம் இப்போது பேசுபொருளாகும் நிலையில் தடை பெறுவது எளிதாக அமையாது என்பதே எதார்த்த நிலை.
கருத்துகள்