தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் செய்யப்படுகிறது. இன்று மாலை புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பு.
செந்தில் பாலாஜி, கோவி செழியன், ஆர் ராஜேந்திரன், ஆவடி நாசர் ஆகியோர் புதிய அமைச்சர்களாக பதவிபேற்க உள்ளனர். புதிய அமைச்சர்கள் இன்று மாலை 3.30 மணிக்கு சென்னை ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர். என். ரவி முன் பதவியேற்க உள்ளனர். செந்தில் பாலாஜி உட்பட 4 பேருக்கும் இலாகாக்கள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. மேலும் செந்தில் பாலாஜி உள்பட நான்கு பேர் அமைச்சராக சேர்க்கப்படும் நிலையில் மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான், கே ராமச்சந்திரன் ஆகியோர் தமிழ்நாடு அமைச்சரவையிலிருந்து நீக்கம் செய்யப்பட உள்ளனர்
என்பது குறிப்பிடத்தக்கது.தமிழ்நாடு அமைச்சரவை மாற்றத்துக்கு ஒப்புதல் கோரி அரசு ஆளுநர் ஆர்என் ரவிக்கு கடிதம் எழுதப்பட்டதற்கு ஆளுநர் ஆர்.என் ரவி ஒப்புதல் அளித்தார். அதன் மூலம் தமிழ்நாடு அமைச்சரவை நாளை மாலை 3.30 மணிக்கு மாற்றம் செய்யப்பட உள்ளதில் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராகும் நிலையில் புதிதாக 4 பேர் அமைச்சரவையில் இணைகின்றனர்.
அதேவேளையில் பொன்முடி, தங்கம் தென்னரசு உள்ளிட்ட 6 அமைச்சர்களின் இலாக்கா மாற்றம் செய்யப்படுகிறது. உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பொறுப்பை ஏற்பது உறுதியாகி உள்ளது.
செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் . மேலும் தற்போதைய அமைச்சரவையில் இருந்து 2 முதல் 3 பேர் நீக்கம் செய்யப்பட்டு புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன.இதுதவிர உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர்,
அதாவது தமிழக அமைச்சரவை மாற்றம் செய்வது தொடர்பாக அரசு சார்பில் ஆளுநர் ஆர் என் இரவி ஒப்புதல் படி அமைச்சரவை இலாக்கா மாற்றம் நடக்கும். மேலும் புதிய அமைச்சராக பொறுப்பேற்போருக்கு பதவி பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் ஆளுநர் நடத்தி வைப்பார்.அந்த வகையில் தான் தற்போது தமிழக அமைச்சரவை மாற்றத்துக்கு ஒப்புதல் கோரி தமிழக அரசு சார்பில் ஆளுநர் ஆர்என் ரவிக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது ஆளுநர் ஆர்என் ரவி தமிழ்நாடு அரசின் பரிந்துரைக்கு ஒப்புதல் வழங்கி உள்ளார். அதன்படி தமிழக அமைச்சரவை மாற்றம் இன்று மாலை 3.30 மணிக்கு நடைபெறுகிறது.இந்த அமைச்சரவை மாற்றத்தில் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக ஏற்கனவே எடுத்த பதவிப்பிரமாணத்தின் படி பொறுப்பேற்க உள்ளார்.
அதேபோல் புதிய அமைச்சர்களாக செந்தில் பாலாஜி, கோவி செழியன், ஆர் ராஜேந்திரன், ஆவடி நாசர் உள்ளிட்டவர்கள் பதவிபேற்க உள்ளனர். மேலும் 6 அமைச்சர்களின் இலாக்கள் மாற்றம் செய்யப்பட உள்ளது.அதன்படி பொன்முடியின் இலாக்கா என்பது உயர்கல்வித்துறையில் இருந்து வனத்துறையாக மாற்றம் செய்யப்பட உள்ளது. இதனால் பொன்முடி நாளை முதல் வனத்துறை அமைச்சராக செயல்படுவார். அமைச்சர் மெய்யநாதன் தற்போது சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சராக உள்ளார். இவர் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக பொறுப்பேற்க உள்ளார். இவர் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை பிரிவின் அமைச்சராக செயல்பட உள்ளார். மேலும் கயல்விழி செல்வராஜ் தற்போது ஆதிதிராாவிடர் நலத்துறை அமைச்சராக உள்ளார். இவர் ஆதிதிராவிடர் நலத்துறைக்கு பதில் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக செயல்பட உள்ளார்.
மேலும் மதிவேந்தன் தற்போது வனத்துறை அமைச்சராக உள்ளார். இவர் நாளை முதல் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக செயல்பட உள்ளார். அமைச்சர் ராஜகண்ணப்பன் தற்போது பிற்படுத்தபட்டோர் நலத்துறை அமைச்சராக உள்ளார். இவர் பால்வளத்துறை அமைச்சராக நாளை முதல் செயல்பட உள்ளார். அதேபோல் கைத்தறி மற்றமு் கிராம தொழில்துறை பிரிவையும் இராஜகண்ணப்பன் நிர்வகிக்க உள்ளார்.
தங்கம் தென்னரசு நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சராக உள்ளார். இவர் நிதித்துறையுடன் சேர்த்து சுற்றுச்சூழல் மற்றும் மாசு கட்டுப்பாட்டுத்துறை பொறுப்பையும் கூடுதலாக ஏற்க உள்ளார்.
கருத்துகள்