திருப்பதி ஆலயத்தில் பிரசாதம் லட்டில் மாட்டிறைச்சிக் கொழுப்பு, மீன் எண்ணெய், பன்றிக்கொழுப்பு
கலந்துள்ளதாக வெளியான அதிர்ச்சித் தகவல்
பால் மற்றும் பால் பொருட்களைச் சோதனை செய்வதில் கவனம் செலுத்தும் தனியார் துறை ஆய்வகம் NDDB CALF திருப்பதி லட்டை ஆய்வு செய்த ஆய்வறிக்கையில், "திருப்பதி லட்டு மாதிரிகளில் பாமாயில், மீன் எண்ணெய், மாட்டிறைச்சிக் கொழுப்பு மற்றும் பன்றிக்கொழுப்பு இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
புரட்டாசியில் நடக்கும் பிரமோற்சவம் சமயத்தில் திருப்பதி லட்டுவில கலக்கப்படும் மூலப்பொருட்களை பார்த்தால் குறிப்பாக 4 வது உள்ள பொருள் பார்த்தால் சைவ உணவு மட்டுமே உண்டு வாழும் வைணவ மக்கள் மனம் வேதனைப்படுகிறது கடந்த ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சிக் காலத்தில் வாங்கிய நெய்யில் மாட்டுக் கொழுப்பு, மீன் எண்ணை கலந்துள்ளதாக தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம் நடத்திய சோதனையில் தெரியவந்துள்ளது. திருப்பதி லட்டுக்கள் தயாரிப்பு குறித்து குற்றம்சாட்டிய முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுக்கு தேவஸ்தான அறங்காவலர் குழுவின் முன்னாள் தலைவரும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான சுப்பா ரெட்டி சவால் விடுத்துள்ளார் ஆந்திர முதல்வராக தெலுங்கு தேசம் கட்சியின் சந்திரபாபு நாயுடு செய்தியாளர்கள் சந்திப்பில், திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு கலப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன்.
கோடிக்கணக்கான பக்தர்களின் உணர்வுகளை மதிக்காததை கண்டு முந்தைய முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியும், அவரது கட்சியும் அவமானப்பட வேண்டுமென்றார். இவரது இத் தகவல் பக்தர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
இது தொடர்பாக தெலுங்கு தேசம் கட்சியின் வெங்கடரமண ரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், திருப்பதி பிரசாத லட்டு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் நெய் மாதிரி குஜராத் மாநிலத்திலுள்ள தேசிய கால்நடை ஆராய்ச்சி மைய, ஆய்வுக்கூடத்தில் ஜூலை மாதம் பரிசோதனை செய்யப்பட்டதில் தரமற்ற நெய் விநியோகிக்கப்பட்டுள்ளதில்
மீன் எண்ணெய், பன்றியின் கொழுப்பு, மாட்டுக் கொழுப்பு, பாமாயில், சோயா எண்ணெய் ஆகியன கலந்துள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளார். தேவஸ்தான செயல் அலுவலர் கூறிய தகவல்களில் இரண்டு மாதங்களுக்கு முன் 8.5 லட்சம் கிலோ நெய் விநியோகம் கோரி விடப்பட்ட டெண்டரில் அந்த டெண்டர் எடுத்த நிறுவனம் 68 ஆயிரம் கிலோ நெய் சப்ளை செய்ததில் 20 ஆயிரம் கிலோ நெய் தரமற்றதாக இருந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போது நெய் சப்ளை நிறுத்தப்பட்டு, டெண்டர் நிறுவனம் மீது கிரிமினல் குற்றச்சாட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது என்றார். முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் குற்றச்சாட்டை ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ். கட்சியின் முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மறுத்துள்ளார்.
ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் திருமலையின் புனிதத்தையும் பல நூறு கோடி ஹிந்துக்களின் நம்பிக்கையையும் புண்படுத்தியுள்ளார் முதல்வர் சந்திரபாபு நாயுடு. லட்டு பிரசாதம் தொடர்பாக சந்திரபாபு நாயுடுவின் கருத்துக்களில் உண்மையில்லை. அரசியலுக்காக எந்த மட்டத்திலும் இறங்குவதற்குத் தயங்கமாட்டார் என்பது நிரூபணமாகியுள்ளது. எனத் தெரிவித்துள்ளார்.திருப்பதி ஆலய பிரசாத சைவ அன்னத்தில் அசைவ வின்னம் கலந்த அயோக்கியர்கள் மீது நடவடிக்கை விரைவில் வரும். முதலில் திருப்பதி லட்டு
பிரசாதம் நைவேத்யம் கிடையாது பெருமாளுக்கு
இப்போது வந்தது இதெல்லாம் தற்கால வியாபாரம்"நாங்கள் அனுப்பிய நெய்யில் எந்த குறைபாடும் இல்லை.- என திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்யில் விலங்குக் கொழுப்பு கலக்கப்பட்டதாக எழுந்த சர்ச்சை.. ஜூன், ஜூலை மாதங்களில் திருப்பதி தேவஸ்தானத்திற்கு நெய் அனுப்பிய திண்டுக்கல் ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்தின் தரக்கட்டுப்பாட்டு மேலாளர் கொடுத்த விளக்கமிது மாட்டுப் பால் நெய் கொழுப்பு உள்ளது அதில் கொழும்பு இருக்கக்கூடாது என்றால் அது நெய்யே இல்லை பொய். ஆந்திரா மாநிலம் திருப்பதி லட்டு விவகாரம் ஜெகன் மோகன் ரெட்டி மீண்டும் வந்து அரசியல் செய்ய முடியாதபடி தற்போது முதல்வர் சந்திரபாபு நாயுடு வைத்திருக்கும் அரசியல் செக் மேட். ஏற்கனவே பலவீனமாக இருக்கும் அவரது கட்சி இன்னும் பலவீனமான இடத்துக்கு தள்ளப்படும். ஆந்திராவில் வலதுசாரி அரசியலை பலப்படுத்தும். அது புரியாமல் இங்கிருக்கும் ட்ரிக்கர் ஹேப்பி so called bogus தமிழக முற்போக்காளர்கள் மற்றும் போராளிகள் தங்களுக்குத் தாங்களே லட்டு கொடுத்துக் கொண்டாடிக் கொள்வது தான் புரியவில்லை.
கருத்துகள்