தமிழ்நாட்டில் உள்ள நாடார் சமுதாய வியாபாரிகளின் சென்னை முகமாக இருந்து பின்னர் அணைத்து வணிகர்களின் ஒரு பிரிவினர் குரலாக செயல்பட்டவர் த. வெள்ளையன்.
இவரது வணிகர் சங்க பேரவை தற்போது மாநிலம் முழுவதும் செயல்படுகிறது. இவர் வயது முதிர்வு காரணமாக, பல்வேறு உடல்நலப் பாதிப்புக்கு உள்ளான நிலையில், ஒரு வருட காலமாக வணிகர் சங்க நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதை தவிர்த்தார் வீட்டில் இருந்தே சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில், செப்டம்பர் மாதம் 3 ஆம் தேதி மூச்சுவிடுவதில் சிக்கல் ஏற்பட்டதனால், உடல்நிலை பாதிக்கப்பட்டவர் சென்னை அமைந்தக்கரை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள எம்.ஜி.எம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார், அவருக்கு நுரையீரல் தொற்று அதிகமான நிலையில், மருத்துவர்கள், செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றினர். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டநிலையில், உடல்நலக்குறைவால் சிகிச்சை பலனின்றி நேற்று செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்தார்கள்.இது பழைய கதை:- வணிகர் சங்கத் தலைவர் த வெள்ளையன் ஏன் திடிரென ஓரங்கட்டப்பட்டார்.
விக்கிரமா ராஜா எப்படி புதிய சங்கம் வைத்து மேலே எழ முடிந்தது ?
ஏன் தனசேகரன் வீழ்த்தப்பட்டார்?
ஏன் நாடாளுமன்ற உறுப்பினரான க.கனிமொழி தென் மாவட்டத்தில் அரசியல் சக்தியாக உருவானார்? அதற்கு
இதோ காரணங்கள் 2008-2009 ஆம் ஆண்டுகளில் அரசியல். தமிழீழ இனப்படுகொலைக்கு நீதிக் கேட்ட பலரும் தெரிந்து வைத்திருக்க வேண்டியவர். வணிகர் சங்கத் தலைவர் த.வெள்ளையன்.
தீவிரவாதத்திற்கு எதிரான போர் என பிரகடனப்படுத்தி சிங்கள இனவாதம் நடத்திய இனப்படுகொலையை, உலகத் தமிழர்களுக்கு எதிரான போர் என்ற வகையிலேயே அணுகிக்கொண்டிருந்த காலமது.
அதிலும், தமிழ்நாட்டினர் அதனை வெறும் போர் என்றே கருதினர்.
கொஞ்சம் கொஞ்சமாக அந்த இன அழிப்பு போரின் உக்கிரத்தை தமிழர்கள் கண்டுணரத் தொடங்கிய போது, எல்லாம் கைமீறி சென்றுக்கொண்டிருந்தது.
இலங்கை அரசின் இனவெறிப் போரை நிறுத்திட நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திய அரசிடம் 2008 ஆம் ஆண்டின் நடுப் பகுதியில் தமிழ்நாடு அரசியல் கட்சி தலைமைகள் கோரிக்கை விடுக்கத் தொடங்கினர்.
அதுவரை தமிழ்நாட்டின் வீதிகளில் நிலவிய மௌனத்தை முதலில் வியாபாரிகள் போராட்டம் மூலமாக கலைத்தவர் த.வெள்ளையன்.
தமிழ்நாடு சமூகத்தில் எப்போதுமே உழைப்போம், பிழைப்போம் என இருந்த வணிகர்களை வைத்துத் தான் அரசுக்கு தனது எதிர்ப்பை பதிவு செய்தார்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை எனும் அமைப்பின் கீழ் தமிழ்நாடு முழுவதும் இயங்கி்வந்த 95 சதவீதம் வணிகர்கள், போரை தடுத்து நிறுத்தக்கோரி முழு கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நடந்த அரசுகளை எதிர்த்து அடக்குமுறைகளை ஒடுக்குமுறைகளை எல்லாம் கடந்து, அந்தக் கடையடைப்பு 100 சதவீதம் வெற்றிப்பெற்றது.
அந்த காலக்கட்டங்களில் த.வெள்ளையனின் பெரம்பூர் வீடும், பேரவை அலுவலகமும் நாள்தோறும் வியாபாரம் சார்ந்த மக்கள் கூடும் இடமாகின. அழுவதும், புலம்புவதும், போராட்டங்களுக்கான ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்வதே அங்கு தான் அன்றாடம் நடைபெற்ற காலம் உண்டு.
அரசியல் இலாப நஷ்டங்களைக் கருதாமல் தொடர் போராட்டங்களை த.வெள்ளையன் எனும் தனிமனிதரே வடிவமைத்தார். அதற்காக அவர் இழந்தது வருவாய் மட்டுமே
வணிக சங்கத்தலைவர் த. வெள்ளையன் உதவியால் தான் முத்துக்குமாரின் உடல் மக்கள் பார்வைக்கே வந்தது.
முத்துக்குமாரின் இறுதி மரண வாக்குமூலத்தின்படி, மாணவர்களிடம் ஒப்படைக்க பெரும்பாடு பட்டவரும் அவர் தாம். கேஎம்சி வாசலில் தலைவர் என்ற முறையில் தார்சாலையில் அமர்ந்து போராடியவரும் அவரே.
கொதிநிலையில் இருந்தவர்களால் கொளத்தூரில் ஓர் சட்டமன்ற உறுப்பினர் மீது செருப்பும் அப்போது வீசப்பட்டது. அதை ச்செய்த மாணவர்களை தாக்க ஏவப்பட்ட குண்டர்களிடமிருந்து அவர்களை தன் வீட்டில் வைத்து பத்திரப்படுத்தி, தானே வாசலில் நின்று பாதுகாத்தவர் த.வெள்ளையன்.
அஸ்தியாய் ஆன பின்பும் அப்போது ஆட்சியாளர்களை அச்சுறுத்திய முத்துக்குமார். அஸ்தியைக் கைப்பற்ற காவல்துறை முயன்ற போது செங்கல்பட்டு சட்டக்கல்லூரி மாணவர்களுடன் சேர்ந்து பேரணியாய் எடுத்துச்சென்று பரப்புரை செய்தவர்.
கட்டப்பஞ்சாயத்து, கமிஷன், கட்டிங், கரண்சி என அவர் நினைத்திருந்தால் அந்த சங்கத்தை வைத்து வாழ்ந்திருக்கலாம். ஆனால், தான் நாடார் இன உணர்வோடு மாந்தநேய உணர்வோடும் களத்தில் நின்ற காரணத்தால் அந்த சங்கத்தை உடைத்து தற்போது விக்கிரமராஜாவின் மூலம் சங்கத்தை உருவாக்கிய நிலை அரசியல் ராஜதந்திரம்
அந்த விக்கிரமராஜாவின் மகன் இன்று சட்ட மன்ற உறுப்பினராகவும் ஆகிவிட்டார் என்பது தான் வரலாறு.
2013 ஆம் ஆண்டு மாணவர் போராட்டம் எழுந்த போது, த.வெள்ளையன் செய்த உதவிகள் பல.
அவர் புகழ் வெளிச்சத்தையோ, அரசியல் இலாப நஷ்டங்களையோ கருத்தில் கொண்டவரல்ல. பெயருக்கு ஏற்ற தூய பொது வாழ்வை வாழும் வெள்ளையன் தான்.
கருத்துகள்