இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி உடல்நலக் குறைவால் இன்று காலமானார்
சென்னையில் பிறந்த சீதாராம் யெச்சூரி இளம் வயது முதல் பொதுவுடைமை இயக்கத்தில் ஈடுபாடு கொண்டவர். இளம் வயதிலேயே தெலுங்கானா போராட்டத்தில் தீவிரம் காட்டிய சீதாராம் யெச்சூரி, நெருக்கடி நிலை காலத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்தியாவின் மிகச் சிறந்த மாணவர் தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்த சீதாராம் யெச்சூரி சமூகநீதியிலும் அக்கறை கொண்டவர்.
மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீதம் இட ஒதுக்கீடு கொண்டு வருவதற்கான போராட்டத்திற்கு சீதாராம் யெச்சூரி துணை நின்றவர் 2006 ஆம் ஆண்டு மே மாதம் டில்லியில் நடைபெற்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கூட்டத்தில் ஓபிசி இட ஒதுக்கீட்டை உடனடியாக வழங்குவது சாத்தியமில்லை என்று கூறப்பட்ட நிலையில், உடனடியாக இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும். கூட்டம் ஒத்திவைகப்பட்ட நிலையில், கூட்டணியில் உள்ள அனைத்துத் தலைவர்களையும் சந்தித்து ஆதரவும் பின்னர் மாலையில் தொடங்கி இரவு வரை நடைபெற்ற கூட்டத்தில் மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீதம் இட ஒதுக்கீட்டை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அப்போது பொதுச்செயலாளர் ஹர்கிஷன்சிங் சுர்ஜித்தும், அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் சீதாராம் யெச்சூரியும் நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்தனர்.
அதேபோல் மற்ற தலைவர்களும் ஆதரவாக இருந்ததால் தான் 27 சதவீத இட ஒதுக்கீடு சாத்தியமானது. சமூகநீதிக்காக தோழராகத் தோள்நின்ற தோழர் சீதாராம் யெச்சூரி அவர்களின் மறைவு அக் கட்சியினருக்கு மாத்திரமல்ல சமூகத்தின் இழப்பாகும்.சீத்தாராம் யெச்சூரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) இன் பொதுச் செயலாளர் மற்றும் நாடாளுமன்ற குழுவின் தலைவரும் ஆவார்.1974 ஆம் ஆண்டு இந்திய மாணவர் சங்கத்தி்ல் உறுப்பினராக சேர்ந்தார்.
ஒரு சில வருடங்களுக்குப் பின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) இல் இணைந்தார். 1975 ஆம் ஆண்டில் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப் படிப்பை பொருளியல் துறையில் பெற்றார்.
சீத்தாரம் யெச்சூரி தனது 72வது அகவையில் உடல் நலக்குறைவால் புது தில்லியில் காலமானார்
யெச்சூரி 19 ஆகஸ்ட் 2024 அன்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவசர மருத்துவப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார் , மேலும் செப்டம்பரில் அவரது உடல்நிலை மோசமடைந்ததையடுத்து சுவாச ஆதரவு அளிக்கப்பட்டது என்று சிபிஐ(எம்) அறிக்கை தெரிவித்துள்ளது. அவர் நிமோனியா போன்ற மார்பு நோய்த்தொற்றின் அறிகுறிகளைக் காட்டினார் மற்றும் கடுமையான
சுவாச நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர் இன்று தனது 72 வயதில் காலமானார் அவரது உடல் அவரது குடும்பத்தினரால் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி நோக்கங்களுக்காக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது.
யெச்சூரி அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட அனைத்து பொதுவுடைமை இயக்கத்தினருக்கும் இரங்கல்களையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதாக பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்
கருத்துகள்