டெல்லியின் புதிய முதலமைச்சராக ஆம் ஆத்மி தலைவரும் ரோட்ஸ் அறிஞருமான அதிஷி பதவியேற்க உள்ளார்
டெல்லியின் புதிய முதலமைச்சராக ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் அதிஷி பதவியேற்பார் , ஆம் ஆத்மி கட்சி கடந்த செவ்வாய் கிழமை செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதி, 2024 ல் அரவிந்த் கெஜ்ரிவால் அவரது பெயரை முன்மொழிந்த பின் ஒருமனதாக சட்ட மன்ற உறுப்பினர்கள் மத்தியில் ஒப்புக்கொண்டதுடெல்லியின் முதல்வராக அதிஷி செப்டம்பர் மாதம் 21 ஆம் தேதி பதவியேற்பார் என ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது.முன்னதாக செப்டம்பர் மாதம் 25, மற்றும் 26 ஆகிய தேதிகளில் நடைபெறும் சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தில் அதிஷி முதல்வராக பதவியேற்பார் என் தெரிவிக்கப்பட்டது. தற்போது அதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதிஷியுடன் அவரது அமைச்சரவைக் குழுவும் பதவி ஏற்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
முன்பிருந்த அரவிந்த் கெஜ்ரிவால் அரசில் அமைச்சர்களாக இருந்த கோபால் ராய், கைலாஷ் கேலாட், சவுரப் பரத்வாஜ் , இம்ரான் ஹுசைன் ஆகியோர் அமைச்சர் பதவியில் தொடர்வார்கள் எனக் கூறப்படுகிறது. மேலும் கட்சியின் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் புதிய அமைச்சரவையில் இடம்பெறலாம் எனத் தெரிகிறது.சந்தர்ப சூழ்நிலை காரணமாக முதலமைச்சர் பதவியில் இருக்கும் ஒரு கட்சியி தலைவர் பதவி விலக நேரும் போது, அந்தப் பதவிக்கு தனக்கு மாற்றாக ஒருவரை நியமிக்கும் நிலையில் சூழல்கள் எப்படி வேண்டுமானாலும் மாறலாம்.
மிகப் பெரிய அதிகாரமிக்க அந்தப் பதவி இருக்கும் ஆளுமை ஒருவரை எந்த எல்லைக்கும் கொண்டு செல்லும். அதனால் தான் அந்த முயற்சி எடுக்க விரும்பாத பீஹார் லாலுபிரசாத் யாதவ் தன் மனைவி ராப்ரி தேவியையே முதல்வராக்கினார்
ஆனால், ஜனதா தளத் தலைவரான நிதீஸ்குமாரோ தான் பதவி விலக் நேர்ந்த போது, தன் கட்சியிலிள்ள பட்டியலினத்தைச் சேர்ந்த ஜிதன்ராம் மஞ்சியை தனது இடத்தில் வைத்துச் சென்றார். அதுபோல முன்னாள் முதல்வர் செல்வி ஜெ ஜெயலலிதா ஓ பன்னீர் செல்வத்தை அமர்த்தியது போல, பீஹாரில் ஜீதன்ராம் மஞ்சி 278 நாட்கள் முதல்வராகபா பதவி வகித்தார். நிதிஸ் குமார் திரும்ப வந்து மீண்டும் முதல்வரான போது ஜீதன்ராம் மஞ்சி நிதிஷ் குமாருக்கு எதிரானவராக மாறி, பாரதிய ஜனதா கட்சியின் கைபாவையாகி கட்சியைப் பிளந்தார்.
இதே நிலைமை தான் சமீபத்தில் ஜார்கண்ட் மாநிலத்தில் ஹேமந்த் சோரனுக்கும் நடந்தது. தான் சிறை சென்ற காலத்தில் அவர் சம்பை சோரனை அழைத்து முதல்வராக்கி விட்டுச் சென்றார். சிறையிலிருந்து வந்து மீண்டும் முதல்வாராக ஹேமந்த் சோரன் பதவி ஏற்ற போது சம்பை சோரன் எதிரியாகி விட்டார். பாரதிய ஜனதா கட்சி அவரைக் கையில் எடுத்துக் கொண்டது.
தற்போது டில்லி அரவிந்த் கெஜ்ரிவாலும் இந்த சவாலை எடுத்துள்ளார். ’’நான் மக்கள் நல ஆட்சியைக் கொடுத்தவன். அதனால் தான் என்னை மக்கள் மீண்டும், மீண்டும் தேர்ந்தெடுக்கின்றனர். நேர்மையாளனான என்னை பாரதிய ஜனதா கட்சி ஊழல் முத்திரை குத்தி கறை படிந்தவனாக மக்கள் மத்தியில் காட்டப் பார்க்கிறது. ஆகவே மீண்டும் தேர்தலில் நின்று மக்கள் என்னை குற்றமற்றவன் என தேர்ந்தெடுத்த பிறகே முதல்வாராகப் பதவி ஏற்பேன்’’ எனக் கூறியுள்ளார் அரவிந்த் கெஜ்ரிவால்.
அவருடைய முதல்வர் தேர்வான அதிஷி ஆக்ஸ்போர்ட் யூனிவர்சிட்டியியில் படித்தவர். அறிவாளி எனப் பெயர் பெற்றவர். பொதுவாக அரசியல் தலைவர்கள் அறிவாளிகளை சற்று விலக்கியே வைத்திருப்பார்கள். விசுவாசிகள் மற்றும் துதி பாடிகளை மட்டுமே நெருக்கமாக வைத்துக் கொள்வார்கள்.
ஆம் ஆத்மி கட்சியை எப்படியாவது அழித்துவிடவும், பிளந்துவிடவும் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக செயல்படும் பாரதிய ஜனதா கட்சி என்ன சதித் திட்டம் வைத்திருக்குமோ தெரியாது. ஆனால், அரவிந்த் கெஜ்ரிவாலின் துணிச்சல் தற்போது வியப்புக்குரியதாகவே தெரிகிறது.
மனைவியை முதல்வராக்க தன் பதவி துறக்கும் .நவீன கால லாலுவாகவே பார்த்த அரசியல் பிரமுகர்கள் மத்தியில் அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லி முதல்வர் பதவி துறக்கபோவதாக அறிவிப்பில் அதிஷி தேர்வு சிறப்பான முடிவு.
கருத்துகள்