காங்கிரஸ் கட்சியின் செல்வம் என்ற செல்லப் பெருந்தகை மீது பகுஜன் சமாஜ் ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பென கடிதம் மூலம் குற்றச்சாட்டு
காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் ஜெய்சங்கர் கடிதம், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக உள்ள செல்வப்பெருந்தகை ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புள்ளவர். எனவே அவரை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தி பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் ஜெய்சங்கர் கடிதம் எழுதினார்.
அது தொடர்பான கடிதத்தில், "பகுஜன் சமாஜ் மாநில தலைவராக இருந்து பழிக்கு பழியாக படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்டிராங்கின் கொலை வழக்கில் தொடர்பு உள்ள தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து செல்வப்பெருந்தகையை நீக்க வேண்டும். புதிய பாரதம், புதிய தமிழகம், வி.சி.க., பி.எஸ்.பி., கட்சியில் இருந்த பிறகு தான் அவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏன் கைது செய்யவில்லை என பலரும் கேள்வி எழுப்புகின்றனர். காங்கிரசில் உள்ளதால் தான் கைதாகவில்லை என்றும் தெரிவிகின்றனர். அவரைக் கட்சியிலிருந்து நீக்கினால் தான், மக்கள் மத்தியில் காங்கிரஸ் கட்சி நிலைத்திருக்கும்" என அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங். சென்னை பெரம்பூரிலுள்ள வேணுகோபால்சாமி கோவில் தெருவில் வசித்து வந்த நிலையில் ஜூலை மாதம் 5 ஆம் தேதி இரவு, அவரது வீட்டருகே நின்று பேசிக் கொண்டிருந்த போது ஒரு கும்பலால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
மேலும் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்துவிட்டு மர்ம கும்பல் தப்பியோடும் சிசிடிவி காட்சிகளும் வெளியானது. அதில் உணவு விநியோக ஊழியர்கள் போல் வந்த கும்பல் ஆம்ஸ்ட்ராங்கை வெட்டி விட்டு 3 இரண்டு சக்கர வாகனங்களில் தப்பிச் செல்லும் காட்சிகளும் பதிவானது
ஆம்ஸ்ட்ராங் கொலையில் ஏற்கனவே கொலையான ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி புன்னை பாலா, அவரது நண்பர்கள் எனக் கூறப்படும் ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். இதனிடையில் விசாரணையின் போது தப்பியோட முயன்றதால் திருவேங்கடத்தை காவல் துறையினர் என்கவுண்டரில் சுட்டதைத் தொடர்ந்து திருவேங்கடம் உயிரிழந்த நிலையில், செல்வப்பெருந்தகை மீதும், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்பு இருப்பதாகக் கூறி தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியே கடிதம் அனுப்பியுள்ளது காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொலை வழக்கில் தற்போது வரை 27 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 300க்கும் மேற்பட்டோரிடம் விசாரணையும் நடத்தப்பட்டுள்ளது. இவ்வழக்கில் தலைமறைவாக இருக்கும் முக்கியக் குற்றவாளிகளான சம்போ செந்தில், சீசிங் ராஜா உள்ளிட்ட நபர்களைப் பிடிக்க காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்த நிலையில் செல்வம் என்ற செல்லப் பெருந்தகை மீதும் தற்போது கொலைக் குற்றச்சாட்டு ராகுல்காந்தி வரை சென்றுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் மத்தியில் காங்கிரஸ் கட்சியில் இனி என்ன நடக்கும் என ராகுல் காந்தி முடிவில் உள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் மீதான கொலை குற்றச்சாட்டு. தமிழக காவல்துறை மற்றும் தமிழ்நாடு முதல்வர் இந்த குற்றச்சாட்டை தீவிரமாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தார்மீக அடிப்படையில் காங்கிரஸ் தமிழ்நாடு மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை அவர்கள் TNCC தன் கட்சி பதவி மற்றும் சட்ட மன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். என பாஜக செய்தித்தொடர்பாளர் கருத்து
கருத்துகள்