திரைப்பட இயக்குனர் மோகன் ஜி கார்த்திகேயன் நேற்று கைதான நிலையில் சொந்த ஜாமீனில் விடுவித்தது திருச்சிராப்பள்ளி நீதிமன்றம்
பழநி ஆலயத்தில் வழங்கும் பஞ்சாமிர்தம் குறித்து கருத்துத் தெரிவித்ததாக திரைப்பட இயக்குனர் மோகன் ஜி கார்த்திகேயன் நேற்று கைது செய்யப்பட்ட நிலையில்,
அவரை சொந்த ஜாமீனில் விடுவித்து திருச்சிராப்பள்ளி நீதிமன்றம்
உத்தரவிட்டது. திருப்பதி கோவிலில் லட்டு பிரஷாத சர்ச்சையைத் தொடர்ந்து, பழநி ஆலய பஞ்சாமிர்தம் குறித்து திரைப்பட இயக்குனர் மோகன் ஜி கார்த்திகேயன் கைது செய்யப்பட்டதற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ், பாரதிய ஜனதா கட்சியின் மாநிலச் செயலாளர் அஸ்வத்தாமன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்
பழநி ஆலயத்தில் பிரஷாத பஞ்சாமிர்தம் குறித்த கருத்தால் கைது செய்யப்பட்டார் அது சட்டவிரோதம் என கூறி மோகன் ஜி கார்த்திகேயனுக்கு ஜாமீன் வழங்கியது
இயக்குநர் மோகன் ஜி கார்த்திகேயனைக் கைது செய்து திருச்சிராப்பள்ளி மாவட்ட நீதிமன்றத்துக்கு அழைத்து வந்த காவலர்கள். பழநி பஞ்சாமிர்தம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக திரைப்பட இயக்குநர் மோகன் ஜி கார்த்திகேயன் நேற்று கைது செய்யப்பட்டார். இந்நிலையில், அவரை சொந்த ஜாமீனில் விடுவித்து அது தொடர்பாக சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் மேலாளர் கவியரசு கொடுத்த புகாரி மனுவின் மீது, திரைப்பட இயக்குனர் மோகன் ஜி கார்த்திகேயன் மீது 5 பிரிவுகளின் கீழ் சமயபுரம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்ததைத்.
தொடர்ந்து, திருச்சிராப்பள்ளி காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் உத்தரவின் பேரில், சென்னை இராயபுரத்தில் இருந்த இயக்குநர் மோகன் ஜி கார்த்திகேயனை சமயபுரம் காவல்துறையினர் நேற்று கைது செய்து, திருச்சிராப்பள்ளிக்கு அழைத்து வந்து 3-வது குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது நீதிபதி பாலாஜி (பொறுப்பு), “இந்த வழக்கில் கைது செய்வதற்கான முகாந்திரம் இருந்தாலும், காவல்துறையினர் முறையான கைது நடவடிக்கைகளைப் பின்பற்றவில்லை. கைது நடவடிக்கை சட்டவிரோதமானது” எனக் கூறி, அவரை சொந்த ஜாமீனில் விடுவித்து உத்தரவிட்டார்.
மோகன் கார்த்திகேயன் கைதுக்கு பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ், பாரதிய ஜனதா கட்சியின் மாநிலச் செயலாளர் அஸ்வத்தாமன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மருத்துவர் ச.ராமதாஸ்:- "அரைகுறை புரிதலுடன் திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல்துறையினர் மோகன் ஜி-யை கைது செய்தது கண்டிக்கத்தக்கது. அவர் கூறியதில் எந்தத் தவறும் இல்லை. பொதுநலன் கருதிக் கூறியதை முழுமையாகப் புரிந்து கொள்ளாமல், அங்கொன்றும், இங்கொன்றுமாக வார்த்தைகளைப் புரிந்துகொண்டு அவரைக் கைது செய்திருப்பது அநீதி" எனத் தெரிவித்தார்.
மருத்துவர் அன்புமணி ராமதாஸ்: "பழநி தண்டாயுதபாணி கோவில் பஞ்சாமிர்தம் சில வாரங்களுக்கு முன் பெருமளவில் அழிக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டி, அது தொடர்பாக பல்வேறு தரப்பிலும் எழுப்பப்பட்ட சந்தேகங்களைத்தான் மோகன் ஜி சுட்டிக்காட்டியிருந்தார். கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்பவர்களை கைது செய்யாத தமிழ்நாடு அரசு, கிளி ஜோசியர்களையும், சமூக ஊடகங்களில் பேசுபவர்களையும் கைது செய்து வீரத்தைக் காட்டக் கூடாது" என்றார்.
பாஜக அஸ்வத்தாமன்:- "திரைப்பட இயக்குநர் மோகன்ஜி கைது கண்டிக்கத்தக்கது. திமுக ஆட்சியில் எதிர்கருத்து பேசுபவர்கள் சட்டத்துக்குப் புறம்பான முறையில் கைது செய்யப்படுவது வாடிக்கையாகிவிட்டது. கஞ்சா, கள்ளச் சாராயத்தை கட்டுப்படுத்த முடியாத காவல் துறை, இதுபோன்ற ஒடுக்குமுறைகளை மட்டும் சரியாகச் செய்கிறது" என்றார். மேலும் திருச்சிராப்பள்ளி மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியினர் முயற்சி செய்து கட்சி வழக்கறிஞர் கே பாலு அவரது ஜாமீன் விடுதலைக்கு வாதம் செய்தார். இருந்த போதிலும் தற்போது அவர் மீது பழனியிலும் வழக்கு பதிவு செய்யப்பட்டதாக வரும் தகவல் மேலும் அந்த கட்சியின் பிரமுகர்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள்