கர்நாடகா முதல்வா் சித்தராமையா பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என லோக் ஆயுக்தா முன்னாள் நீதிபதி கருத்து
மாற்று நில மோசடி சம்மந்தப்பட்ட கர்நாடக மாநிலத்தின் முதல்வா் சித்தராமையா பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என லோக் ஆயுக்தா முன்னாள் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே தெரிவித்துள்ளார.
அது குறித்து பெங்களூருவில் நேற்று செய்தியாளா்களிம் பேசியபோது:
"பதவியை ராஜினாமா செய்வதா, வேண்டாமா என்பது குறித்து முதல்வா் சித்தராமையா தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால், பெரிய அளவிலான குற்றச்சாட்டுக் கூறப்படும் போது, பொதுமக்களின் பாா்வையில் பதவி விலகுவது தான் நல்லது. சட்டத்தின் பாா்வையில் பதவி விலகாவிட்டாலும் எந்தத் தவறும் இல்லை.
மாற்றுநில முறைகேடு தொடா்பாக முதல்வா் சித்தராமையா மீது வழக்கு தொடர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முதல்வா் சித்தராமையா மீதான குற்றச்சாட்டில் அடிப்படை முகாந்திரம் இருப்பதாக உயா்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. எனவே, அவா் பதவி விலகுவது நல்லது. ராஜிநாமா செய்வது குறித்து அவா்தான் முடிவுசெய்ய வேண்டும்.
தென்னிந்தியாவில் 1956- ஆம் ஆண்டில் நிகழ்ந்த இரயில் விபத்துக்கு பொறுப்பேற்று அபாபோதய மத்திய ரயில்வேத் துறையின் அமைச்சா் இலால் பகதூா் சாஸ்திரி தனது பதவியை ராஜினாமா செய்தாா். லால்பகதூா் சாஸ்திரிக்கு இருந்த உணா்வு, தற்போதுள்ள அரசியல்வாதிகளுக்கு இல்லை" எனத் தெரிவித்தார். மூடா முறைகேடு வழக்கில் சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு, கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு பெரிய அளவில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
முதல்வர் சித்தராமையா மீதான மூடா எனும் மைசூரு மேம்பாட்டு ஆணைய முறைகேடு விவகாரம் கர்நாடகா மாநிலத்தின் அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதிகாரத் துஷ்பிரயோகம் செய்து, முதல்வர் சித்தராமையா அவரது மனைவி பார்வதிக்கு 14 வீட்டுமனை ஒதுக்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த முறைகேடு என்பதும் காலம்சென்ற முன்னாள் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா முதல்வராக இருந்த போது டான்சி நிலம் வாங்கி வழக்கில் சிக்கி பின்னர் தண்டனை அடைந்த நிலையில் தான் இதுவும் இது தொடர்பாக பெங்களூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஆபிரஹாம், மைசூரு லோக் ஆயுக்தா காவல் துறையினரிடம் புகார் அளித்திருந்ததில், முதல்வர் சித்தராமையா மீது விசாரணை நடத்த அனுமதி கோரி, மாநிலத்தின் ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டிடம் புகார் அளித்தார். அதை ஏற்று முதல்வர் சித்தராமையா மீது விசாரணை நடத்த, ஆளுநர் அனுமதியளித்தார்.
கவர்னர் அளித்த அனுமதியை இரத்து செய்யும்படி, கர்நாடக மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் முதல்வர் தாக்கல் செய்த ரிட் மனு நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது இதற்கிடையே மூடா முறைகேடு தொடர்பாக, முதல்வர் சித்தராமையா மீது ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புச் சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கும் படி, ஸ்நேமயி கிருஷ்ணா, பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மனுவும் விசாரணைக்கு வந்தது.
விசாரித்த நீதிபதி, முதல்வர் சித்தராமையா மீதான ஊழல் குற்றச்சாட்டு குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்க லோக் ஆயுக்தாவுக்கு உத்தரவிட்டார்.
மேலும், மூன்று மாதத்தில் விசாரணையின் அறிக்கையை சமர்ப்பிக்கவும் ஆணையிடப்பட்டது. இது மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், சித்தராமையாவின் முதல்வர் பதவிக்கும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது,
இதனிடையே, முதல்வர் சித்தராமையா பதவி விலக வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி, உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்துகின்றன.இதுவரை நேமையாளராகவே பார்க்கப்படும்
கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மீதான நில மோசடி ஊழல் வழக்கிற்கு கர்நாடாகா உயர் நீதிமன்றமும், சிறப்பு நீதிமன்றமும் விசாரணைக்கு தடை விதிக்க மறுத்து விட்ட பிறகு சித்தராமையா மீதான நில முறைகேடு வழக்கு தற்போது வேகமெடுத்துள்ளது.
மைசூரு நகர்ப்புற மேம்பாட்டுக் கழகம் கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு சொந்தமான 3.2 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தியபோது, முதலில் ஓரிடம் வழங்கப்பட்டது. ஆனால், பார்வதியின் கோரிக்கைப்படி, அதற்கு மாற்றாக மைசூருவிலுள்ள பிரதானமான இடமான விஜயநகரில் அவருக்கு 14 வீட்டு மனைகள் ஒதுக்கப்பட்டன. அவரிடம் கையகப்படுத்திய நிலத்தின் மதிப்பை விட, மாற்றாக வழங்கப்பட்ட நிலத்தின் மதிப்பு பலமடங்குகள் அதிகமாக இருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.
அந்த நிலத்தை மைசூரு நகர்புற மேம்பாட்டு வாரியம் வளர்ச்சி பணிகளுக்காக பத்தாண்டுகளுக்கு முன்பு எடுத்துக் கொண்ட போது பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி தான் நடந்துள்ளது. அப்போது அதற்கு மாற்றாக தனக்கு நகர்புறத்தின் பிரதான இடத்தில் இடம் ஒதுக்கித் தரும்படி கேட்கிறார் பார்வதி. அதன் பிறகு சித்தராமையாவே ஆட்சிக்கு வருகிறார். அப்போதும் தன் மனைவி பார்வதி கோரிக்கையை அவர் பரீசீலிக்கவே இல்லை. ஆனால் மீண்டும் ஆட்சியை பிடித்த பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியில் அவரது கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தில் உள்ள பாரதிய ஜனதா கட்சியினரால் தான் 14 பிளாட்கள் தரப்படுகின்றன. தரப்பட்ட ஆண்டு அக்டோபர் மாதம் 2021 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியில் தான் தரப்பட்டது என்பது உரிய கவனம் பெறுகிறது,
ஐம்பது ஆண்டு கால பொது வாழ்க்கையில் எளிமையானவர்,நேர்மையானவர் என பெயர் பெற்றவர் சித்தராமையா. தற்போதோ அவமானத்திற்கு மேல் அவமானம். நீதிமன்றம் விசாரணைக்கு முகாந்திரம் உள்ளதாகச் சொல்லி விட்டது. 197 பக்கம் கொண்ட தீர்ப்பில் சித்தராமையாவை பாரதிய ஜனதா கட்சி எப்படித் திட்டமிட்டு கவிழ்த்தது எனப் பார்த்தால் அது ஒரு பெரிய நீண்ட கதை.
கருத்துகள்