இந்தியாவில் முன்னோடிப் பறவை ஆய்வாளர்களில் ஒருவரான முனைவர் ராபர்ட் கிறப் காலமானார்
.
நாகர்கோவிலைப் பூர்வீகமாகக் கொண்ட கிறப், மும்பையில் இயற்கை வரலாற்றுக் கழகத்தின் ( BNHS) அறிவியலாளராகப் பல ஆண்டுகள் பணியாற்றியவர்.
பறவை மனிதர் முனைவர் சாலிம் அலி அவர்களிடம் மாணவராக இருந்து முனைவர் பட்டம் பெற்றவர். சலீம் அலி
இந்தியா முழுவதும் முறையான பறவை ஆய்வுகளை நடத்திய முதல் இந்தியர் மற்றும் இந்தியாவில் பறவையியலைப் பிரபலப்படுத்திய பல பறவைகள் சம்பந்தப்பட்ட புத்தகங்களையும் எழுதினார்.
இந்தியாவில் பறவைகளின் எண்ணிக்கையைக் கணக்கிடும் ஆய்வுபா பணிகளுக்கு முன்னோடியாக இருந்தவர்.
அழிந்து வரும் நிலையிலுள்ள பறவை இனங்களான வரகுக் கோழி ( Lesser Florican), கானல் மயில் ( Great Indian Bustard) போன்றவற்றின் வாழ்வியல், வாழ்விடங்களைக் பற்றி நுட்பமாக ஆய்வு செய்து அவற்றைக் காப்பாற்ற அவசியமான அறிவியல் தரவுகளை எடுத்துரைத்தார்.
பாறு கழுகுகளின் ( vulture) எண்ணிக்கை 1990 ஆம் ஆண்டுகளில் வெகுவாகக் குறைந்து போனதை மதிப்பீடு செய்ய இவரது ஆய்வுகள் உதவியது. அழிவிலிருந்து பாறுக் கழுகுகளைக் காப்பாற்ற எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளில் இவருடைய பங்களிப்பும் இருந்துள்ளது.
அந்தப் பறவைகளின் அழிவுக்குக் காரணமான டைக்லோபினாக் (Diclofenac ) எனப்படும் கால்நடை வலி நிவாரணி மருந்தினைத் தடை செய்ய பெரிய முயற்சி எடுக்கப்பட்டது. டைக்லோபினாக் தடை மட்டும் போதாதென்றும் இக்கழுகுகளின் மீதமிருக்கும் வாழ்விடங்களைக் காப்பாற்ற வேண்டிய அவசியத்தையும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.
"தமிழகத்தின் நீர் புலப் பறவைகள்" அவரது துணைவியாரோடு இணைந்து எழுதிய மிக முக்கியமான நூல் ஆகும்.
சில ஆண்டுகளுக்கு முன்பு பாறுக் கழுகுகள் பற்றி உதகமண்டலத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் அவரை முதன்முறையாக சில சமூக சூழலியல் ஆர்வலர்கள் சந்தித்து உரையாடியுள்ளார்கள். முதிர்ந்த வயதிலும் பறவைகளைக் காப்பாற்ற வேண்டிய அவசியத்தையும் அறிவியலையும் உரக்க எடுத்துரைத்தார்.
இந்திய பறவையியல் வரலாற்றில் இவர் எந்திரன் திரைப்படத்தில் நிழல் மூலம் வரும் பக்ஷி ராஜன் போல நிஜத்தில் இவரின் பங்களிப்பு மகத்தானது. இவரின் மரணம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு துறை சார்ந்த பேரிழப்பாகும்.
அவரது இழப்பால் வாடும் குடும்பத்தாருக்கு மரம் அறக்கட்டளை நிறுவனர் மரம் இராஜா, ஓசை காளிதாஸ் உள்ளிட்ட சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள்