ரூபாய்.1000 லஞ்சம் வாங்கிய மின்சார வாரியத்தின் பொறியாளருக்கு
2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூபாய்.2000 அபராதமும் விதித்து தீர்ப்பு 15 ஆண்டுகளாக நடந்த வழக்கில் சமீபத்திய தீர்ப்பு.
இராமநாதபுரம் மாவட்டம், கடலாடி தாலுகா, கீழப்பனையூர் துரைசிங்கம். இவரிடம் புதிதாக மின் இணைப்பு வழங்க, மின் வாரிய இளநிலைப் பொறியாளர் முருகன், தற்போது வயது 68, என்பவர்,
1,000 ரூபாய் லஞ்சம் கேட்டார். இதுகுறித்து துரைசிங்கம், ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகார் அளித்தார். அவர்கள் அறிவுரையின் படி பொறியாளர் முருகனிடம் துரைசிங்கம்,
2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்., 27 ஆம் தேதியில், 1,000 ரூபாய் லஞ்சம் பெற்ற போது கைதானார். 2009-ஆம் ஆண்டு புதிய மின்சார இணைப்பு வழங்குவதற்கு ரூபாய்.1000 லஞ்சம் வாங்கிய போது
ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் நேரடியாகக் கைதான மின்சார வாரியத்தின் இளநிலைப் பொறியாளர் முருகன் இவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூபாய்.2000 அபராதமும் விதித்து இராமநாதபுரம் மாவட்டத் தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி மோகன் ராம் விசாரணை முடிவில் தீர்ப்பளித்தார்.
கருத்துகள்