ஹரியானா மாநிலத்தின் முதல்வராக நயாப் சிங் சைனி இரண்டாம் முறையாக
அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி பதவியேற்கிறார்ஹரியானா மாநிலத்தில் மொத்தம் 90 சட்டமன்றத் தொகுதிகளில் அறுதிப் பெரும்பான்மை பெறுவதற்கு 46 தொகுதிகள் தேவை எனும் நிலையில், இரண்டு தொகுதிகள் அதிகம் பெற்று 48 இடங்களைக் கைப்பற்றிய பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில் பாரதிய ஜனதாவுக்கு 30 தொகுதிகள் கூட வராதென்றும், காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடிக்குமென சொல்லப்பட்ட நிலையில், அதைப் பொய்யாக்கி பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றது. ஆட்சியமைக்க இயலாத நிலை காங்கிரஸ் கட்சிக்கு 37 தொகுதிகள் மட்டுமே கிடைத்த
நிலையில், அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி காலை 10 மணிக்கு புதிய அரசு பதவியேற்கும் விழாவில், இரண்டாம் முறையாக நயாப் சிங் சைனி முதல்வராகப் பொறுப்பேற்கிறார். பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் மற்றும் பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநில முதல்வர்கள் கலந்து கொள்வார்கள். முதல்வராக இருந்த மனோஹர் லால் கட்டார், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக முதல்வர் பதவியிலிருந்துமார்ச் மாதம் விலகியதனால், நயாப் சிங் சைனி முதல்வராக நியமிக்கப்பட்டார்.பல்வேறு விமர்சனங்கள் நயாப் சிங் சைனியின் அரசு மீது எழுந்த போதும், அதனை தகர்த்து, மீண்டும் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியைப் பிடிக்க வைத்ததன் காரணமாக, பாரதிய ஜனதா கட்சியின் நம்பத் தகுந்த தலைவராக நயாப் சிங் சைனி உருவெடுத்துள்ளார். சைனி தலைமையில் புதிதாக உருவாகும் அமைச்சரவையில் மொத்தம் 13 அமைச்சர் பதவிகளில் 11 புதுமுகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது. கடந்த முறை சைனி அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த மஹிபால் தாண்டா, மூல் சந்த் சர்மா ஆகிய இருவர் மட்டுமே வெற்றியைதா தக்க வைத்த நிலையில். ஹரியானாவில் பாரதிய ஜனதா கட்சியின், வெற்றியை காங்கிரஸ் கட்சியால் சகித்துக் கொள்ள முடியாத காரணத்தால். தேர்தல் ஆணையத்திடமும் அந்த கட்சி புகாரளித்தது. இது ஒரு புறமிருக்க கூட்டணிக் கட்சிகளே காங்கிரஸ் கட்சியை விமர்சித்தும் வந்தன. கடந்த முறை அமைச்சரவையில் அனைத்து ஜாதியினருக்கும் சமமான பங்களிப்பு கொடுத்ததே, பாரதிய ஜனதா கட்சியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது.
கருத்துகள்