புதிய பரந்தூர் விமான நிலையம் 445 ஏக்கர் நிலத்தில் அமைகிறது முக்கிய அறிவிப்பு வெளியீடு.
தமிழ்நாடு அரசின் திட்டமாக மாறியிருக்கும் பரந்தூர் விமான நிலையத் திட்டத்திற்கு தேவையான ஒப்புதல்கள் கிடைத்திருக்கும் வேளையில் மாபெரும் விமான நிலையத்திற்கான நிலத்தை கையகப்படுத்தும் பணிகள் தற்போது துவங்கியுள்ளதன் அடிப்படையில் ஏகனாபுரம் கிராமத்தில் மொத்தம் 445 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தும் அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
அறிவிப்பைத் தொடர்ந்து நில உரிமையாளர்கள் அடுத்த ஒரு மாதத்திற்குள் தங்கள் ஆட்சேபனைகளை சமர்ப்பிக்கலாம் என ஆணை வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு இப்பகுதியிலிருக்கும் மக்கள் கடுமையாக விமர்சனம் செய்து வரும் நிலையில், 445 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தும் திட்டம் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு அரசு தற்போது இருக்கும் சென்னை விமான நிலையத்தில் விரிவாக்கம் செய்வதற்குப் பல பிரச்சனைகள் இருக்கும் காரணத்தால், வெளிநாடுகளிலும், பெரு நகரங்களில் இருப்பது போன்ற சகல வசதிகளும் கொண்ட விமான நிலையத்தை அமைக்கும் திட்டத்துடன் பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் திட்டம் முன் வைக்கப்பட்டதைத் தொடர்ந்து
2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதாக அறிவித்ததைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசின் முழுமையான கவனமும் பரந்தூர் விமான நிலைய திட்டத்தில் திருப்பியது. 20,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பரந்தூர் பகுதியில் அமைக்கப்படவுள்ள விமான நிலையத்திற்கான
டெண்டர்கள் 2025 ஆம் ஆண்டு இறுதிக்குள் விடப்படுமென TIDCO உயர் அலுவலர் தெரிவித்துள்ளார்தமிழ்நாடு அரசு சென்னைக்கு அருகில் பரந்துரில் புதிய விமான நிலையம் திட்டத்தை முதலில் முன்னாள் முதல்வர் காலம்சென்ற டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி 2007-ஆம் ஆண்டு அறிவித்தார். பின்னர், பல ஆய்வுகளுக்குப் பிறகு, பரந்தூர் இடம் இதற்கு மிகவும் ஏற்றதென முடிவு செய்யப்பட்டது.
புதிய பரந்தூர் விமான நிலையம், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு ஒரு புதிய பரிமாணத்தைச் சேர்க்கும். இது, வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கவும், மாநிலத்தின் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும் உதவும். சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளின் மக்களுக்கு நல்ல போக்குவரத்து வசதியை வழங்கும்.
கருத்துகள்