இத்தனை விமானங்களும் உலங்கு வானூர்திகளும் மனித உயிர்களைக் காப்பாற்ற மட்டுமே பயன்படுத்தப்பட்டால் எப்படி இருக்கும்?
தன் நாட்டு மக்களை மகிழ்வித்தால் அது சாகசம்.
மற்ற நாட்டை புறமுதுகிட்டு ஓடச் செய்தால், யுத்தம் அல்லது போர். அவ்வளவு தான்..
மக்கள் உள்ளார்ந்த சிந்தனை இது தான் சென்னையில் பிழைப்புக்காக குடிவந்து வாழும் மக்கள் தேசபக்தி என்றால் ஊழல் ஒழிப்பு என்பதை அறியாதவர்கள், வாழ்வியல் சூழல் காரணமாக எதையும் ஏற்று வாழ்வியல் பழகிய வந்தேறிக் கூட்டம். அது பொழுது போக்கை மட்டுமே விரும்பும் கூட்டம் என்பது அனைவரும் அறிந்த ஒன்று, தேசபக்தி என்பது பேச்சு மட்டுமே செயலில் அடங்காது, மெரீனா கடற்கரையில் நெரிசலில் ஐவர் உயிரிழந்தது தொடர்பாக விளக்கம் கேட்டு காவல்துறை டிஜிபிக்கு உள்துறைச் செயலாளர் கடிதம்.
வருங்காலங்களில் இதுபோல் தவறு நிகழாதவாறு கவனத்துடன் செயல்படுவோம் என்றதோடு, தமது வருத்தத்தையும் தெரிவித்துள்ளார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். ஐவர் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்து, தலா ரூபாய்.5 லட்சம் நிதியுதவி வழங்கவும் உத்தரவிட்ட. முதலமைச்சர் சொல்லிய சில நிமிடங்களில் தான் தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவாலிடமிருந்து விளக்க அறிக்கையைக் கேட்டுள்ளார் உள்துறை செயலாளர்.
சட்டம்-ஒழுங்கு, போக்குவரத்து, உளவுப் பிரிவு, போக்குவரத்து (திட்டம்) பிரிவு, சென்னை பெருநகர மாநகராட்சி என்று பதில் சொல்லவேண்டிய இடத்தில் பல துறைகளின் பிரிவுகள் உள்ளது , அரசின் கவனக்குறைவால் ஐந்துபேர் உயிரிழப்பு என்கிறார் விசிகவின் தளபதி ஆதவ் அர்ஜூனா.
விசிக தலைவர் தொல்.திருமாவளவன் இன்னும் கொஞ்சம் மேலே போய் நீதி விசாரணையே கோரியுள்ளார்.
உலகசாதனை லிம்கா - கின்னசில் இடம்பெறும் அளவுக்கு ஒரே நேரத்தில் பதினைந்து லட்சம் மக்கள் மெரீனா கடற்கரையில் கூடியது யாருமே எதிர்பார்க்காத ஒன்று.
"இந்திய ராணுவம் கேட்டுக்கொண்ட அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக ச்செய்து தரப்பட்டது. சேனல் 'ரேட்டிங்' கை மனதில் கொண்டும்,
திமுக மீது குறைசொல்ல வேண்டும் என்ற எண்ணம் கொண்டும் யாரும் செயலாற்ற வேண்டாம்" என்று மாநிலத்தின் அமைச்சர் மா.சுப்பிரமணியம் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
சேனல்களில் இரண்டுவிதமான
'மீடியா' அல்லாத சமூக வலைத்தளங்களில் தமிழோ ஆங்கிலமோ சரியாக பயன்படுத்தத் தெரியாத மிஸ்டர் பப்ளிக்கைப் பார்க்க முடிகிறது.
தண்ணீர் இல்லை அவசரச்சிகிச்சைக்கான ஊர்தி இல்லை போக்குவரத்துக்கு உரிய வசதி செய்யப்படவில்லை என்று சில சேனல்களிலும்
'இல்லை' - என்று சொன்ன எல்லாமும் 'இருந்தது' என்று சில சேனல்களிலும் நேர்காணல்களின் போது மிஸ்டர் பப்ளிக் பேசிக் கொண்டே இருக்கிறார்கள்.
இல்லை என்றும் இருந்தது என்றும் சொல்ல இரு வேறு மனிதர்கள் கிடைப்பதால் அதே அடிப்படையில், "இல்லை - இருந்தது" தலைப்புகளில் 'டிபேட்'கள் ரெடியாகிறதாம்.
சென்னை மெரீனா கடற்கரையில் விமானக் காட்சிக்கு லட்சக்கணக்கானவர்கள் வந்து குவிந்த நிலையில், ஆங்காங்கே தண்ணீர் தொட்டிகள் வைக்கப்பட்டிருந்தாலும் அது போதுமானதாக இல்லை. வைக்கப்பட்டிருந்த பல தொட்டிகளில் ஒரேயொரு குழாய் மட்டுமே பொருத்தப்பட்டிருந்ததால், அதில் நீரைப் பிடிக்க பார்வையாளர்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்க வேண்டியிருந்தது.
மெரீனா கடற்கரையில் கடை வைத்திருந்தவர்கள் கூட்டத்தை எதிர்பார்த்திருந்தனர் என்றாலும் இவ்வளவு பெரிய கூட்டத்தை எதிர்பார்க்கவில்லையென்பதால், அவர்களிடமிருந்த தண்ணீர், குளிர் பானங்கள் போன்றவையும் ஒன்றிரண்டு மணி நேரங்களில் விற்றுத்தீர்ந்தன. இதனால், பலர் குடிநீருக்காக அலைபாய்ந்தனர்.
"எங்களுக்கு ஒரு அடையாள அட்டை கொடுத்து, வெளியில் போக, வர அனுமதித்திருந்தால் தண்ணீர் தீரத்தீர எடுத்து வந்திருப்போம்" என அந்தப் பகுதியில் கடை வைத்திருப்பவர்கள் தெரிவித்தனர்.
விமான சாகசத்தையொட்டி லட்சக்கணக்கானோர் கடற்கரையில் குவிவார்கள் என எதிர்பார்க்கப்பட்டிருந்தும் கூட, சிந்தாதிரிப்பேட்டை முதல் வேளச்சேரி வரையிலான வழித்தடத்தில் இயங்கிய பறக்கும் ரயில் சேவை, இந்தக் கூட்டத்தை சமாளிக்கும் வகையில் இயக்கப்படாதது பொது மக்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியது.
மெரீனாவை ஒட்டியுள்ள காமராஜர் சாலை, அண்ணா சாலை, வாலஜா சாலை, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை உள்ளிட்ட சாலைகளில் விமான சாகசம் முடிந்து பல மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்தப் போக்கு வரத்து நெரிசலில் பல அவசர சிகிச்சை ஊர்திகள் சிக்கிக்கொண்டன.
கருத்துகள்