தனக்கு நியாயம் கிடைக்கும் வரை போராடுவேன்' என நடிகை கௌதமி தகவல்.
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் அருகில் நடிகை கௌதமிக்கு, 150 ஏக்கர் நிலம் வாங்கித் தருவதாக, காரைக்குடி வட்டத்தில் கோட்டையூரைச் சேர்ந்த சினிமா பைனான்சியர் அழகப்பன், 3.16 கோடி ரூபாய் பெற்றதில், அவர் சார்ந்த'பிளசிங் அக்ரோ பார்ம் இந்தியா லிமிடெட்' என்ற நிறுவனம் மோசடி செய்தது குறித்த வழக்கில், அழகப்பன், நிலத்தரகர் நெல்லியான், பிளசிங் அக்ரோ பார்ம் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்கள் உள்ளிட்ட 12 பேர் மீது
இராமநாதபுரம் மாவட்டக் குற்றப்பிரிவு பிரிவு நிலமோசடி தடுப்புப் பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
சினிமா பைனான்சியர் அழகப்பன் மீது நடிகை கவுதமி தடிமல்லா கொடுத்த நிலமோசடி வழக்கு விசாரணையில் உள்ளது. நில மோசடி செய்த வழக்கில் ராமநாதபுரம் மாவட்ட குற்றவியல் நீதித்துறை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில்
சினிமா பைனான்சியர் அழகப்பனின் மேலாளர் ரமேஷ் ஷங்கருக்கு ஜாமின் வழங்கக்கூடாதென ஆட்சேபனை தெரிவித்து நடிகை கவுதமி தடிமல்லா நேரில் ஆஜராகி மனு தாக்கல் செய்தார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வட்டம் கோட்டையூர் அழகப்பன் மற்றும் 12 பேர் மீது.
இராமநாதபுரம் மாவட்டக் குற்றப்பிரிவுக் காவல்துறையில் (DCP) நிலமோசடித் தடுப்புப் பிரிவு சார்பில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் குற்ற எண் 7/ 2024 முதல் தகவல் அறிக்கையில் கண்டுள்ள பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா சட்டப் பிரிவு 187, மற்றும் 78 ன் படி பதிவு செய்யப்பட்ட நிலையில் இராமநாதபுரம் குற்றவியல் நீதித்துறை மாஜிஸ்திரேட் எண் II நீதிமன்றத்தில் அழகப்பன் மற்றும் 12 நபர்கள் எதிர் கௌதமி தடிமல்லா சம்பந்தப்பட்ட வழக்கு
14-10-2024 ஆம் தேதியில் மனுதாரர் கௌதமி தடிமல்லா நேரில் நீதிமன்றத்தில் முன்னிலையாகி அளித்த மனுதாரரின் பிரமாண வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. ஜாமீன் மறுபரிசீலனை செய்யப்பட்டது. விசாரணையின் நோக்கத்திற்காக தேடல் அவசியம் என்று கண்டறியப்பட்டுள்ளது. எனவே வழக்கின் உண்மைகள் மற்றும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு நீதியின் நலன் கருதி, தேடுதல் வாரண்ட் பிறப்பிக்கவும். தேடுதல் வாரண்ட் 15.10.2024 ஆம் தேதி அன்று மாலை 05.30 மணிக்கு அல்லது அதற்கு முன் திரும்பப் பெறப்படும் என தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்: ஒன்னே ஒன்னு நான் சொல்வேன். ஆரம்பத்திலேருந்து சொல்லிக்கொண்டு தானிருக்கிறேன். இன்றைக்கும் சொல்வேன். எனக்கு நியாயம் கிடைக்கும் வரை போராடுவேன். என அவர் தெரிவித்தார்.
கருத்துகள்