சாம்சங் நிறுவனத்தின் தொழிலாளர்களை நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்ததாக சி.ஐ.டி.யு. கம்யூனிஸ்ட் தொழிற்சங்கம் குற்றம் சாட்டும் நிலையில்
போராட்டத்திற்காகப் போடப்பட்டிருந்து பந்தலை அகற்றிய காவலர்கள், தொழிலாளர்களைக் கைது செய்தனர்.
சாம்சங் நிறுவனத் தொழிலாளர்களின் போராட்டம் தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கமளித்தார். அதில் :- பேச்சுவார்த்தை நடத்த மூன்று அமைச்சர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
பேச்சுவார்த்தை காரணமாக சாம்சங் நிறுவனம் பல்வேறு கோரிக்கைகளை ஏற்கவும் முன்வந்துள்ளது.
ஊழியர்கள் சம்பளத்துடன் சிறப்பு ஊக்கத்தொகையை மாதந்தோறும் ஐந்தாயிரம் ரூபாய் வழங்கப்படும். பணிக்காலத்தில் தொழிலாளர்கள் உயிரிழக்க நேர்ந்தால் சிறப்பு நிவாரணத் தொகையாக ரூபாய் ஒரு லட்சம் உடனடியாக வழங்கப்படும்.
அனைத்துத் தொழிலாளர்கள் சென்று வர குளிர் சாதன வசதிப் பேருந்துகள் ஏற்படுத்தித் தரப்படும். உணவுக் கேன்டீன் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளை மேம்படுத்த சாம்சங் நிறுவனம் சம்மதம் தெரிவித்துள்ளது. தொழிலாளர்கள் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சி.ஐ.டி.யு.வின் மூலம் கோரிக்கை முன்வைத்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். அது தொடர்பாக வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ளதால் நீதிமன்றத்தின் உத்தரவுபடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
படித்த இளைஞர்களின் எதிர்கால நலன் இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு கம்யூனிஸ்ட் கட்சியின் சி.ஐ.டி.யு. இந்தப் பேராட்டத்தை கைவிடுமாறு அரசு சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
வீடு புகுந்து கைது செய்யப்படவில்லை. விபத்து நடைபெற்ற இடத்தில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக கைது செய்யப்பட்டார்கள். அவர்கள் நீதிமன்றத்தில் பிணையில் வந்துள்ளார்கள். அரசாங்கம் யாரையும் ரிமான்ட் செய்யவில்லை. அரசுக்கு அந்த நோக்கமும் இல்லை. சாம்சங் நிறுவனம் வேறு மாநிலத்திற்கு மாற்றமாகிச் செல்லவில்லை. தமிழ்நாட்டில் நிறுவனங்கள் தொழில் தொடங்க உகந்த சூழ்நிலை நிலவுகிறது.
கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கமான
சிஐடியு அரசுக்கு நெருக்கடி ஏற்படுத்துவதாகப் பார்க்கவில்லை. நாங்கள் அதை விரோமாகவும் பார்க்கவில்லை.
தொழிலாளர்களுக்கு எதிராக அடக்கு முறைகளைக் கையாளவில்லை. அனுமதியில்லாமல் போராட்டம் நடத்தப்படும் போது எந்த அரசும் எடுக்கும் நடைமுறை தான் எடுக்கப்படுகிறது. மாவட்ட நிர்வாகம் அந்த நடைமுறையை எடுத்துள்ளது. இந்த இடங்களில் உள்ள பல நிறுவனங்களில் தொழிற்சங்கங்களை தொழிலாளர் துறை பதிவு செய்துள்ளது.
பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனைகளை பேசித் தீர்ப்பதில் தெளிவாக இருக்கிறோம்.
என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
ஸ்ரீபெரும்புதூர் சுங்குவார்சத்திரத்தில் சாம்சங் இந்தியா நிறுவன ஊழியர்களில் கம்யூனிஸ்ட் சார்ந்த ஒரு பிரிவினர் CITU சார்பில் நடத்திய போராட்டத்தில் ஈடுபட்ட 8 நபர்களைக் கைது செய்தது தொடர்பான ஹேபியஸ் கார்பஸ் மனுவை (HCP) சென்னை உயர்நீதிமன்றம் அக்டோபர் 9, 2024 புதன்கிழமை முடித்து வைத்தது . அக்டோபர் 8, 2024 செவ்வாய் கிழமை கைது செய்யப்பட்ட எட்டு ஊழியர்களையும் நீதிமன்றக் காவலில் வைக்க மறுத்ததை யடுத்து விடுதலை செய்யப்பட்டதாகக் கூடுதல் அரசு வழக்கறிஞர் (AGP) ஏ.தாமோதரனின் வாக்குமூலத்தை நீதிபதிகள் பி.பி. பாலாஜி மற்றும் ஜி.அருள் முருகன் பதிவு செய்தனர். 191(2), 296(b), 115(2), 132, 121(1) ஆகிய பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் பெயரிடப்பட்ட 6 பேர் அடங்கிய 30 நபர்கள் மீது செவ்வாய்க்கிழமை முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்துள்ளதாக APP நீதிமன்றத்தில் தெரிவித்த நிலையில். , 351(2) மற்றும் 49 பாரதிய நியாய சன்ஹிதா (BNS), 2023.அரசு ஊழியர்களின் கடமையைச் செய்யவிடாமல் தடுக்கும் நோக்கில் தானாக முன்வந்து காயப்படுத்தியது, அரசு ஊழியர்களுக்கு எதிராக கிரிமினல் பலத்தை பிரயோகித்தது, கலவரத்தில் ஈடுபட்டது, ஆபாசமான வார்த்தைகளைப் பிரயோகித்தது, காவல்துறையினரை மிரட்டியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அவர்கள் மீதானதாகும் என வாதிட்டார்.
சாம்சங் தொழிற்சாலையிலிருந்து 500 மீட்டர் தொலைவில் அமைதியான முறையில் போராட்டம் நடத்த உயர்நீதிமன்றம் ஏற்கனவே அனுமதி அளித்துள்ளதாகவும், நள்ளிரவில் கைது செய்து காவலில் வைக்க முயற்சிப்பதன் மூலம் தொழிலாளர்களின் போராட்ட உரிமையைக் குறைக்க முடியாதென்றும் வாதிட்டனர்.
கருத்துகள்