அரசு நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாக தன் மீது குற்றஞ்சாட்டிய அறப்போர் இயக்கத்திற்கு
அமைச்சர் ராஜகண்ணப்பன் தரப்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அமைச்சர் ராஜகண்ணப்பன், தனது வழக்கறிஞர் ஜி.சரவணக்குமார் மூலம் அறப்போர் இயக்கத்திற்கு அனுப்பிய வக்கீல் நோட்டீஸில் கண்டுள்ள விபரம் வருமாறு:- காழ்ப்புணர்ச்சி காரணமாக,
நீதிமன்றத்தில் வழங்கிய உத்தரவுகளை மறைத்து அவதூறான செய்திகளைத் தெரிவித்ததற்கு சம்பந்தப்பட்டவர்கள் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மான நஷ்ட வழக்குத் தொடர்வதுடன், தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சரின் வழக்கறிஞர் ஜி .சரவணக்குமார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கறிஞர் சரவணக்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னாள் மூத்த IAS அதிகாரியான கற்பூரசுந்தரபாண்டியன் அக்காள் சங்காமிர்தம் மகன் ஆவார்,
இவரது தந்தை குருசாமி முன்னாள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய முதல் உறுப்பினராக இருந்தவர் ஆவார். நாம் ஏற்கனவே நேற்று செய்தியில் குறிப்பிட்டிருந்த படி இந்த நிலம் மோசடி நிலம் இல்லை என்பதே,
உண்மை அறியாமல் அறப்போர் இயக்கத்தினர் அவசரப்பட்டு தவறான தகவல் வெளியிட்டுள்ளது தான் தற்போது இந்த வக்கீல் நோட்டீஸ் தரும் பதிலாக அமைகிறது.
கருத்துகள்