கார்ப்பரேட் சாமியார் சத்குரு என சிலரால் அழைக்கப்படும் ஜக்கி வாசுதேவின் ஈஷா அறக்கட்டளை வழக்கில் தமிழ்நாடு காவல்துறையின் நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது, வழக்கையும் உச்சநீதிமன்றத்திற்கே மாற்றியது
ஈஷா அறக்கட்டளையில் தன்னுடைய இரண்டு மகள்கள் சட்ட விரோதமாக சிறைப் பிடிக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் காமராஜ் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் மூத்த வழக்கறிஞர் பிரபாகரன் ஆஜரான HCP வழக்கில் விசாரணை நடத்தி அறிக்கையைத் தாக்கல் செய்ய காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவிட்டது. சத்குரு என ஒரு சிலரால் அழைக்கப்படும் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த ஜக்கி வாசுதேவ் என்ற நபரால் கோயம்புத்தூர் மாவட்டத்தில் வெள்ளிங்கிரி மலையடிவாரத்தில்
நிறுவப்பட்ட ஈஷா அறக்கட்டளை, அதன் யோகா மையம் பல நபர்களுக்கு விருந்தளித்ததாகவும், ஒரு சிலர் மட்டுமே துறவறத்தைத் தேர்ந்தெடுத்துள்ளனர் என்றும் மனுவில் கூறப்பட்டிருந்தது.
ஈஷா யோகா அறக்கட்டளைக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட எத்தனை குற்ற வழக்குகள் உள்ளன என்பது குறித்து அறிக்கை அளிக்குமாறு கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மனுவை உச்சநீதிமன்றத்திற்கு மாற்றியது உச்சநீதிமன்றம்.
அதில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் மேற்கொண்டது போல இனி எந்தவிதமான காவல் துறை நடவடிக்கையும் எடுக்க இடைக்காலத் தடை விதித்தது. மேலும், உயர்நீதிமன்ற உத்தரவின் படி காவல்துறையின் நிலை அறிக்கையை தன்னிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்விவ் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்ஹி குறிப்பிட்டதையடுத்துத் தடை விதிக்கப்பட்டது. காவல்துறை ஜக்கி வாசுதேவின் ஈஷா அறக்கட்டளை மீது
பதிவு செய்யப்பட்ட அனைத்து கிரிமினல் வழக்குகளின் விவரங்களையும் சமர்ப்பிக்குமாறு தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு எதிராக ஈஷா அறக்கட்டளை உச்ச நீதிமன்றத்தை அணுகியதைத் தொடர்ந்து தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மேலும், அறக்கட்டளை தொடர்பான வழக்கை உயர் நீதிமன்றத்திடமிருந்து உச்ச நீதிமன்றம் தனக்கு மாற்றிக் கொண்டது.
கோயம்புத்தூர் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்திலுள்ள ஈஷா அறக்கட்டளையின் ஆசிரமத்தில் தன்னுடைய மகள்களை மூளைச் சலவை செய்யப்பட்டதாகக் கூறி அந்தப் பெண்களின் தந்தை பேராசிரியர் காமராஜ் என்பவர் தாக்கல் செய்த ஹேபியஸ் கார்பஸ் எனும் ஆட்கொணர்வு மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஜக்கி வாசுதேவின் ஈஷா அறக்கட்டளைக்கு எதிரான சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை உச்சநீதிமன்றம் தற்போது நிறுத்தி வைத்துள்ளது
உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு , அந்த நபரின் இரு மகள்களுடன் காணொளிக் காட்சி மூலம் ஆஜர் படுத்தி உரையாடியது, அவர்கள் தங்கள் சொந்த விருப்பத்தின் பேரில் ஆசிரமத்தில் தங்கியிருப்பதாகவும், அவர்களை யாரும் தடுப்புக் காவலில் வைக்கவில்லை என்றும் கூறினார். எனவே, கீழ்க்கண்டவாறு உத்தரவிட்டது.
வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்திலிருந்து உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றப்படும்; வழக்கில்
அசல் மனுதாரர் உச்ச நீதிமன்றத்தில் அல்லது அவரது வழக்கறிஞர் மூலம் ஆஜராகட்டும்;
காவல்துறையின் நிலை அறிக்கை உச்சநீதிமன்றத்தில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் படி காவல்துறை மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது.
"இவை மத சுதந்திரம் தொடர்பான பிரச்சனைகள். இது மிகவும் அவசரமான மற்றும் தீவிரமான வழக்கு. இது ஈஷா அறக்கட்டளையைப் பற்றியது, மிகவும் மதிக்கப்படும் மற்றும் லட்சக்கணக்கான மக்கள் ஆதரவாளர்களைக் கொண்ட ஜக்கி வாசுதேவ் எனும் சத்குரு இருக்கிறார். வாய்மொழி வாதங்கள் மீது உயர்நீதிமன்றம் இதுபோன்ற விசாரணைகளைத் தொடங்க முடியாது," என மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்ஹி கூறினார்.
சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவும் ஈஷா அறக்கட்டளையின் வழக்கை ஆதரித்தார்.
"உயர்நீதிமன்றம் மிகவும் கவனமாக இருந்திருக்க வேண்டும். இதில் உங்கள் கவனம் தேவை."
கோயம்புத்தூர் ஓய்வுபெற்ற பேராசிரியர் எஸ்.காமராஜ் என்பவர் தாக்கல் செய்த ஹேபியஸ் கார்பஸ் எனும் ஆட்கொணர்வு மனுவில் உயர்நீதிமன்றம் இந்த உத்தரவு பிறப்பித்துள்ளது.
கோயம்புத்தூரிலுள்ள ஈஷா யோகா மையத்தில் நிரந்தரமாக வசிப்பதற்காக 42 மற்றும் 39 வயதுடைய தனது நன்கு படித்த இரண்டு மகள்கள் மூளைச் சலவை செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறி பேராசிரியர் காமராஜ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அறக்கட்டளையின் அலுவல் சார்ந்த பணியாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ள அனுமதிக்கவில்லை என்று பேராசிரியர் காமராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
அறக்கட்டளைக்கு எதிராக நிலுவையில் உள்ள பல கிரிமினல் வழக்குகள் மற்றும் பாலியல் துன்புறுத்தல் மற்றும் தவறான நடத்தை பற்றிய குற்றச்சாட்டுகளையும் அவர் நீதிமன்றத்தில் மனுவில் தெரிவித்தார்.
அறக்கட்டளை மீது பல கிரிமினல் புகார்கள் இருப்பதால், இந்த விவஹாரம் மேலும் விவாதிக்கத் தகுதியானதென்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியது.
ஜக்கி வாசுதேவ் தனது மகளுக்கு திருமணம் செய்து கொடுத்து வாழ்க்கையில் நல்லபடியாக செட்டில் ஆக்கினார், ஆனால் மற்ற பெண்களை தங்கள் பொருள் மற்றும் வாழ்க்கையைத் துறக்க ஊக்குவித்தார் என்பது குறித்தும் அது பலத்த சந்தேகங்களை வெளிப்படுத்தியது.
ஈஷா அறக்கட்டளைக்கு எதிரான குற்றவாளிகளின் விவரங்களைத் தாக்கல் செய்யக் கோரி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
உயர்நீதிமன்ற உத்தரவையடுத்து, காவல்துறையினர் ஆசிரமத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.
பின்னர் அறக்கட்டளை மேல்முறையீடு மூலம் உச்ச நீதிமன்றத்தில் சென்றது.
இந்த விஷயத்தை ரோஹத்கி இன்று குறிப்பிட்டார், குறிப்பாக இரண்டு பெண்களும் உயர் நீதிமன்றத்தில் ஆஜராகியிருப்பதால், ஹேபியஸ் கார்பஸ் மனுவில் இதுபோன்ற உத்தரவுகளை இனி பிறப்பிக்க முடியாது என்று கூறினார்.
"இதற்கெல்லாம் பின்னால் யாரோ இருக்கிறார்கள். 5,000 பேர் ஆசிரமத்தில் தங்கியுள்ளனர்," என அவர் தெரிவித்தார்.
"ஆசிரமத்தில் பணிபுரியும் மருத்துவர் மீது போக்ஸோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது" என்றதலைமை நீதிபதி
"பழங்குடியினர் பள்ளியில் 12 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு.உள்ளது அதற்கும் ஈஷா அறக்கட்டளைக்கும் என்ன சம்பந்தம்" என நீதிபதி பார்திவாலா கேள்வி எழுப்பினார்.
"ஒன்றுமில்லை. இது பழங்குடியினர் பள்ளி, அடித்தளத்தில் இல்லை" என்று ரோஹத்கி பதிலளித்தார்.
"டாக்டருக்கு எதிரான விசாரணை தொடர வேண்டும்," என்று தலைமை நீதிபதி குறிப்பிட்டார்.
"நான் ஹேபியஸ் கார்பஸில் மட்டுமே தற்போது முடித்திருக்கிறேன். அது முடிந்து விட்டது" என்று ரோஹத்கி வாதிட்டார்.
"அவர்கள் (இரண்டு கைதிகள்) அங்கே (உயர்நீதிமன்றத்தில்) இருந்தனர். ஹேபியஸ் கார்பஸ் என்றால்
"இரண்டு பெண்கள் அல்லது துறவிகள் நீதிமன்றத்தில் ஆஜரானார்களா" என நீதிமன்றம் கேட்டது.
"ஆம் அவர்களும் இப்போது ஆன்லைனிலும் உள்ளனர். கைதிகளுடன் உயர்நீதிமன்றம் தொடர்பு கொண்டதாக ரோஹத்கி பதிலளித்தார்.
அப்போது காணொளி மூலம் பெண் ஒருவர் தோன்றி, தாங்கள் தங்கள் சொந்த விருப்பத்தின் பேரில் ஆசிரமத்தில் இருப்பதாகக் கூறினார். நாங்கள் உயர் நீதிமன்றத்தில் ஆஜராகி, எங்கள் சொந்த விருப்பத்தின் பேரில் நாங்கள் இங்கு வந்துள்ளோம் என்றும், கடந்த 8 ஆண்டுகளாக எங்கள் தந்தையின் இந்தத் துன்புறுத்தல் தொடர்கிறதென்றும் அவர் கூறினார். பின்னர் நீதிமன்ற அறைகளில் இரண்டு பெண்களுடன் காணொளி காட்சி மூலம் உரையாடியது. நீதிமன்றம் இருவருடனும் உரையாடியுள்ளது. இருவருமே 24 மற்றும் 27 வயதில் ஆசிரமத்தில் சேர்ந்ததாக தனிநபர்கள் கூறியுள்ளனர். நாங்கள் இருவருடனும் தொடர்பு கொண்டோம், அவர்கள் தானாக முன்வந்து தங்கியிருப்பதாகவும் அவர்கள் வெளியில் பயணம் செய்ய சுதந்திரமாக இருப்பதாகவும் கூறுகின்றனர். ஆசிரமம்" என்று உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது
மேலும், ஆசிரமத்தில் சோதனை நடத்திய காவல்துறையினர் அங்கிருந்து சென்று விட்டனர் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
"காவல்துறை பிரசன்னம் குறித்து, இரண்டு பெண் பிக்குகள், 2 நாட்கள் அங்கு இருந்த போதிலும், நேற்றிரவு காவலர்கள் அந்த இடத்தை விட்டு வெளியேறியதாகக் கூறுகின்றனர். மனுதாரர்கள், 8 ஆண்டுகளுக்கு முன்பு, இருவரின் தாயாரால் இதேபோன்ற கோரிக்கையை முன்வைத்து தாக்கல் செய்ததாக, அவரது தந்தையும் கூறினார். தோன்றிய போது, அதே அறிக்கை வெளியிடப்பட்டது, எனவே இருவரின் வயது, இயல்பு மற்றும் விருப்பத்தை மனதில் கொண்டு அதை மறைத்து இரண்டாவது ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்யப்படக்கூடாது என்று கருத்து கூறப்பட்டது," உத்தரவிலும் குறிப்பிடப்பட்டுள்ளது இந்த நிலையில் இன்று.ஈஷா யோகா மையம் குறித்த குற்றச்சாட்டுகள் பொய்யானவை என கோயம்புத்தூர் ஈஷா அறக்கட்டளை விளக்கம் அளித்துள்ள அறிக்கையில்:- ஈஷா யோகா மையம் யாரையும் திருமணம் செய்து கொள்வதற்கோ, துறவறம் மேற்கொள்வதற்கோ கட்டாயப்படுத்துவதோ, உற்சாகப்படுத்தி உந்தித் தள்ளவோ செய்வதில்லை. இம்மையம் திருமணம் ஆன, ஆகாத ஆயிரக்கணக்கான மனிதர்கள் மற்றும் பிரம்மச்சாரிய பாதையிலிருக்கும் ஒரு சிலரின் இருப்பிடமாக இருக்கிறது. இந்த நிலையில், 2 பெண் பிரம்மச்சாரிகளின் பெற்றோர் கடந்த 8 வருடங்களாக பல்வேறு பொய் வழக்குகளைப் பதிவு செய்தும், உள்நோக்கம் கொண்ட சிலரின் தூண்டுதலால் போராட்டங்களை நடத்தித் தேவையில்லாத சச்சரவுகளையும் ஏற்படுத்தி வருகின்றனர். பிரம்மச்சாரியப் பாதையில் இருக்கும் தனது மகள்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அவர்களின் தந்தை காமராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து இரண்டு பிரம்மசாரிகளும் நீதிமன்றத்தில் ஆஜராகி, தங்களின் சொந்த விருப்பத்தின் பேரில் தான் ஈஷா யோகா மையத்தில் தங்கியுள்ளோம் என்று தெளிவுபடுத்தியுள்ளனர். சமீபத்தில் காமராஜ் ஈஷா யோக மையம் வந்து, தன் மகள்களை சந்தித்த சிசிடிவி காட்சிகளும் ஆதாரங்களாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால், உறுதியாக உண்மை வெல்லும் என்று நம்புகிறோம். கடந்த 2016-ஆம் ஆண்டு இதே காமராஜ் சார்பில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் படி, கோயமுத்தூர் மாவட்ட நீதிபதிகள் அடங்கிய குழு ஈஷா யோகா மையத்தில் மா மதி, மா மாயு ஆகியோரைச் சந்தித்து விசாரித்தனர். அவர்களின் அறிக்கையின் படி தீர்ப்பளிக்கப்பட்டு அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. ஈஷா அறக்கட்டளைக்கு எதிராகத் தவறான தகவல்களைப் பரப்புவதில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி மிக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என அதில் கூறப்பட்டுள்ளது. இதை உற்றுநோக்கும் பொழுது கோவலன் மாதவி மகளாய் பிறந்த மணிமேகலைக்கு துறவு பூண்டதன் பலனாக திரௌபதிக்குக் கிடைத்த அட்சய பாத்திரம் கிடைத்தது அது தான் காலகாலமாக காக்கும் வரலாற்று பண்பாட்டு நிலை தமிழ்நாட்டில் (சோழ நாட்டில்) பழமையான வரலாறு அது. பப்ளிக் ஜஸ்டிஸ் சார்பில் துறவறம் குறித்து ஒரு பார்வை:-
"ஆயிரக்கனக்கான மனிதர்களில் யாரோ ஒருவன் தான் மனநிறைவின் பொருட்டு முயற்சி செய்கிறான். அவ்வாறு முயற்சி செய்பவர்களுள் ஒருவன் மட்டும் என்னை உள்ள படி அறிகிறான்"
பகவத் கீதையின் ஞான விஞ்ஞான யோகத்தில் ஸ்ரீ க்ருஷ்ணர் கருத்து ,
அதாவது இறைவனை அறிந்தவனே ஞானி. இங்கே அவர் ஞானியைப் பற்றித்தான் குறிப்பிடுகிறாரே தவிர ஞானிகள் எல்லோரும் இல்லரமற்ற துறவிகளாகத் தான் இருக்க வேண்டும் என நிர்பந்திக்கவில்லை.
பொதுவாக ஹிந்து மதமே லௌதீக மதம். ஒருவன் இறைவனை அடைய, ஞானத்தைப் பெற துறவியாக த்தான் இருக்க வேண்டும் எனும் அவசியமோ. கட்டாயமோ இல்லை. இல்லரவாசியும் ஞானம் பெறலாம்.
ஆனால் துறவி மட்டுமே ஞானி என்ற ஒரு மாயையான நிலையை இன்றைய ஹிந்து தர்மவான்கள் உண்டாக்கியே விட்டார்கள். முக்கியமாகக் துறவு பூண்டதன் மூலம் காவி கட்டியவர் இருந்த நிலை மாறி இன்று யார் யாரோ காவி கட்டுகிறார்கள் எல்லாம் ஞானிகள் என்ற தோற்றத்தையும் உண்டாக்கி விட்டனர். ஆனால் உண்மையில் ஞானி என்பவன் யார்? துறவி என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக பல சித்தர்களும் முனிவர்களும் ரிஷிகளும் நம் பரந்த பாரத தேசத்தில் வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள்.
திருவெண்காடர். அதற்கு ஒரு சிறந்த உதாரணம். 'காதற்ற ஊசியும் வாராது காணும் கடை வழிக்கே' என்ற வாசகம் திருவெண்காடரின் அந்தராத்மாவைக் குடைந்தது. நூல் கோர்க்கக் கூட பயனற்ற ஊசிகூட நீ இறந்த பின்னால் உன்னுடன் வராது என்ற வாசகம் அவரை ஆட்டுவித்தது. அவரது மனதிலிருந்த மாயை விலகியது. ஞானத்தின் தெளிவு பிறந்தது.
ஆசை ஆசையாய் தான் அனிந்திருந்த விலை உயர்ந்த நகைகளையும் ஆடைகளையும் களைந்து விட்டைத் துறந்து வீதிக்கு வந்தார். உறவும் உறவின் மீதான உணர்வும் அற்றவராய் வாழ்க்கையே இனி வானம் பார்த்து தான் என்று மரத்தடியைத் தேடிப்போனார். அந்த திருவெண்காடர் தான் பட்டினத்தார் என்ற உயர்ந்த துறவி.
இதில் குறிப்பிடப்பட வேண்டிய விஷயம் இப்படித் துறவு பூண்ட பட்டினத்தாரிடம் மனைவி, தாயார் உற்றார் உறவினர் என மொத்த உறவும் முட்டி மோதிக் கேட்டுப்பார்த்தும், கெஞ்சியும் கொஞ்சியும் சொல்லிப்பார்த்தும் அவரது மனம் லௌதீக வாழ்வில் லயிக்க வில்லை. இதன் பெயர் தான் துறவு. துறவு என்பது சுகங்களின் மீதும் உணர்வுகளின் மீதும் பற்றறிருப்பது பற்று. சல்லிக் காசு கூட் தனக்கென்று வைத்துக் கொள்ளாமல் சாதாக்குடிலில் இருப்பது.
ஆனால் இன்றைய துறவிகளாக தன்னைக் காட்டிக்கொள்பவர்கள் காவியைக் கட்டிக் கொண்டு மக்களிடம் இறை போதனைகள் செய்பவர்கள் பலரும் எத்தகையவர்களாக இருக்கிறார்கள் என்பதைப் பார்த்தால் துறவு என்ற வார்த்தைக்கே அர்த்தமில்லாது இருக்கிறது. ரமண மகரிஷி போல ஆத்மாவின் தேடுதலில் இறங்குங்கள். ஆன்மீகத்தின் உண்மை நிலையையும் இறைவனின் உண்மை உணர்வையும் பெறுவீர்கள். இறைவனைக் காணும் முயற்சியில் முன்னேற்றம் அடைவீர்கள். இதற்கு எல்லாவற்றுக்கும் ஆசைப்படு எனும் கார்ப்பரேட் சாமியார்கள் தேவையில்லை,
கருத்துகள்