உச்ச நீதிமன்ற பார் அசோசியேஷன் (SCBA) நிர்வாகக் குழு (EC) ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியது, வழக்கறிஞர்களுடன் கலந்தாலோசிக்காமல் நீதி தேவதை சிலை மற்றும் உச்ச நீதிமன்றத்தின் சின்னத்தில் மாற்றம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது.
புதுதில்லியில் நடைபெற்ற மாவட்ட நீதித்துறையின் இரண்டு நாள் தேசிய மாநாட்டில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உச்ச நீதிமன்றத்தின் புதிய கொடி மற்றும் சின்னத்தை வெளியிட்டார்.
புதிதாக வெளியிடப்பட்ட கொடியில் இந்தியாவின் சட்ட மற்றும் கலாச்சார பாரம்பரியத்தின் மையச் சின்னங்கள் உள்ளன,அசோகச் சக்கரம், உச்ச நீதிமன்றக் கட்டிடம் மற்றும் இந்திய அரசியலமைப்பு. உச்ச நீதிமன்றத்தின் புதிய கொடி நீல நிறத்தில் உள்ளது. இந்தச் சின்னத்தில் 'இந்தியாவின் உச்ச நீதிமன்றம்' மற்றும் 'யதோ தர்மஸ்ததோ ஜய' (தேவநாகரி எழுத்தில்) பொறிக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற வளாகத்திலுள்ள 'அசல் நீதி தேவதை சிலைக்குப் பதிலாக 'புதிய நீதி தேவதை சிலையையும் தலைமை நீதிபதி சந்திரசூட் திறந்து வைத்தார். புதிய சிலை புடவை உடுத்தி, கண்ணை மூடிக்கொண்டு ஒருபுறம் தராசும், மறுபுறம் இந்திய அரசியலமைப்புச் சட்டமும் உள்ளது. உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் நூலகத்தில் புதிய நீதி தேவதை சிலையை தலைமை நீதிபதி சந்திரசூட் நிறுவியதன் மூலம் ஆங்கில கிழக்கிந்தியக் கம்பெனி காலனித்துவ ஆட்சி பாரம்பரியத்துக்கு ஒரு முடிவு கட்டப்பட்டுள்ளது. புதிய சிலை கையில் அரசியலமைப்புச் சட்டத்துடன் இந்திய பாரம்பரியத்துடன் அமைக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. இது பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.
உச்சநீதிமன்றத்தில் நூலகத்தில் நடந்த விழாவில் புதிய நீதி தேவதையின் சிலையை தலைமை நீதிபதி சந்திரசூட் திறந்து வைத்துப் பேசினார். அப்போது, ‘சட்டத்தின் முன் சமத்துவம்’ என்பதை வலியுறித்திட வேண்டும் என்பதற்காகவே இந்த மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளதாகக் கூறினார்.
புதிய சிலை கூறும் தகவல் ‘சட்டம் ஒருபோதும் குருடாகாது என்பதையும், அது அனைவரையும் சமமாகப் பார்க்கிறது என்பதையும் வலியுறுத்தி நீதி தேவதையின் கண்கள் திறக்கப்பட்டுள்ளது , ‘அரசியல் சட்டம் வன்முறை மூலம் அல்ல, நாட்டின் சட்டங்களின்படி நீதி வழங்கப்படுகிறது’ என்பதை குறிக்கும் வகையில் அரசியலமைப்பு புத்தகம் இடம் பெற்றுள்ளது’ .
இருப்பினும், பழைய சிலையின் வலது கையில் இடம்பெற்றிருந்த தராசு, புதிய சிலையிலும் இடம்பெற்றுள்ளது. தீர்ப்பு வழங்குவதற்கு முன்னதாக இரு தரப்பு வாதங்களையும் கவனமாகப் பரிசீலனை செய்து சமூக சமநிலையை நிலைநாட்டுவதை தராசு குறிக்கிறது.
மேலும், இந்தப் புதிய சிலையானது, இந்தியப் பாரம்பரித்தை போற்றும் வகையில் தலையில் கிரீடமும் மற்றும் நெற்றியில் திலகமும் இருக்கும் வகையில் வடிவமைப்பட்டுள்ளது.இந்த புதிய நீதி தேவதை சிலை உச்சநீதிமன்றத்தில் உள்ள நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளது
கருத்துகள்