நியோ மேக்ஸ் நிலம் தருவதாக ஏமாற்றி வாங்கிய நிதி மோசடி வழக்கில் நிலத்தை முடக்கம் செய்ய நீதிபதி கண்டிப்பு
நியோ மேக்ஸ் நிலம் தருவதாக ஏமாற்றி வாங்கிய நிதி மோசடி வழக்கில் நியோ மேக்ஸ் நிறுவனங்களின் சொத்துக்களை இதுவரை முடக்காதது ஏன்?- என நீதிமன்றம் கேள்வி.
நியோ மேக்ஸ் நிலம் தருவதாக ஏமாற்றி வாங்கிய நிதி மோசடி குறித்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது.
நியோமேக்ஸ் என்கிற நிதி நிறுவனம் மூலம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் கோடிக்கணக்கான பணத்தை முதலீடு செய்தனர்.
இந்த நிதி நிறுவனம் பணத்தைத் திரும்பத் தராமல் ஏமாற்றியதாக ஏகப்பட்ட புகார்கள் குவிந்ததன்பேரில் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையின் சார்பில் வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும், நிர்வாக இயக்குநர்களான மதுரை கமலக்கண்ணன், பாலசுப்ரமணியன், பாரதிய ஜனதா கட்சியின் பிரமுகர் திருச்சிராப்பள்ளி வீரசக்தி உள்ளிட்ட 90 க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப் பதிவு செய்து, 35 க்கும் மேற்பட்டோரைக் கைது செய்தனர்.
அதுதொடர்பான வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் விசாரணைக்கு வந்த போது, " நிதி நிறுவனம் நடத்தி பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட நியோ மேக்ஸ் நிதி நிறுவனத்தின் சொத்துக்களை இதுவரை முடக்காதது ஏன்? என்று உயர்நீதிமன்றம் மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
மேலும், இந்த வழக்கில் என்ன தான் நடக்கிறது. இன்னும் எவ்வளவு கால அவகாசம் தேவைப்படும் என்றும் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்ந்து, அக்டோபர் 19 ஆம் தேதிக்குள் நிதி நிறுவனத்தின் சொத்துக்களை வழக்கில் முழுமையாக இணைத்து, அவற்றை முடக்கி அரசு அரசாணை வெளியிட வேண்டுமென்றும் தவறும் பட்சத்தில் தமிழ்நாடு உள்துறைச் செயலாளர் மற்றும் பொருளாதாரக் குற்றப்பிரிவு ஏ.டி.ஜி.பி ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்க நேரிடும் எனவும் நீதிபதி பரத சக்கதரவர்த்தி எச்சரிக்கை விடுத்துள்ளார். இதில் பொது நீதி யாதெனில்:- நியோமேக்ஸ் சொத்துக்கள் அரசு முடக்கம் செய்து ஆணை வந்த பின்னர் அந்த சொத்தை விற்று அந்த பணத்தில் ஈவூ மட்டுமே முதலீடு செய்துள்ளீர்கள் பெறமுடியும் ஆனால் ஒரு ரூபாய் மதிப்புள்ள நிலத்தை நான்கு ரூபாய் வீதம் நான்கு நாட்களுக்கு விற்பனை செய்து உரிமையாளர்கள் பதுக்கிய பணம் என்பது திரும்ப முதலீட்டாளர்களுக்கு கிடைக்க வேண்டுமானால் அதை இவர்கள் பெற்ற ஜாமீன் ரத்தாகி பினாமிகள்
கருத்துகள்